search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "passengers numbers increase"

    மெட்ரோ ரெயில் விரிவுப்படுத்தப்பட்டு பயணிகள் சேவை தொடங்கி உள்ளதால் தினமும் 45 ஆயிரம் பேர் பயணம் செய்து வருகிறார்கள். #MetroTrain
    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயிலில் பயணிகள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. தினமும் 45 ஆயிரம் பேர் பயணம் செய்து வருகிறார்கள்.

    சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.

    கோயம்பேடு-ஆலந்தூர், சின்னமலை - விமான நிலையம் உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம் - சென்ட்ரல், சைதாப்பேட்டை - டி.எம்.எஸ். சுரங்கப்பாதையிலும் பயணிகள் சேவை நடந்து வருகிறது.

    பொது மக்கள், பயணிகள் இடையே பெரிதும் வரவேற்பு ஏற்பட்டதையொட்டி மெட்ரோ ரெயில் திட்டம் சென்னை மாநகரம் முழுவதும் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது.

    மெட்ரோ ரெயிலில் கடந்த 2 வாரங்களாக பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்ட்ரல் - விமான நிலைய வழித்தட பாதையில் பயணிகள் கூட்டம் காணப்படுகிறது.

    சென்ட்ரல் வரை மெட்ரோ ரெயில் விரிவுப்படுத்தப்பட்டு உள்ளதால் பயணிகள் விமான நிலையத்துக்கு எளிதில் சென்று வருகிறார்கள். அதேபோல அண்ணா சாலையில் டி.எம்.எஸ். வரை மெட்ரோ ரெயில் விரிவுப்படுத்தப்பட்டுள்ளதால் அலுவலகம் செல்வோர் எளிதில் செல்ல மெட்ரோ ரெயில் பயணத்தை விரும்புகிறார்கள்.


    மெட்ரோ ரெயில் விரிவுப்படுத்தப்பட்டு பயணிகள் சேவை தொடங்கி உள்ளதால் தினமும் 45 ஆயிரம் பேர் பயணம் செய்து வருகிறார்கள். கடந்த மாதம் 28 ஆயிரம் பேர் தினமும் பயணம் செய்தனர். தற்போது 17 ஆயிரம் பேர் கூடுதலாக பயணம் செய்கிறார்கள்.

    ஒவ்வொரு ரெயில் நிலையங்களிலும் சராசரியாக பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. திருமங்கலம் ரெயில் நிலையத்துக்கு தினமும் அதிகமான பயணிகள் வருகிறார்கள்.

    முகப்பேர், மதுரவாயல், பாடி பகுதிகளை சேர்ந்த பொது மக்கள், வேலைக்கு செல்வோர் அதிகமாக மெட்ரோ ரெயிலை தினமும் பயன்படுத்தி வருகிறார்கள்.

    மெட்ரோ ரெயில் பயணிகள் நேரு பூங்காவில் நடந்து வந்ததால் அங்குள்ள பூங்கா 6 வருடங்களாக மூடப்பட்டு இருந்தது. தற்போது பூங்கா புதுப்பொலிவுடன் சீரமைக்கப்பட்டுள்ளது.

    அடுத்த வாரம் பூங்கா திறக்கப்பட உள்ளது. பொது மக்கள், நடை பயிற்சி செய்யலாம். குழந்தைகள் விளையாடுவதற்கு விளையாட்டு சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளது. #MetroTrain
    ×