என் மலர்
நீங்கள் தேடியது "passengers"
- திருப்பூர் பழைய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.39 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டது.
- பஸ் நிலையத்திற்குள் நுழையும் பஸ்கள் ஒன்றை மற்றொன்று முந்தி செல்ல முயற்சிக்கிறது.
திருப்பூர் :
திருப்பூர் பழைய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.39 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டது. அதற்கு முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி மத்திய பஸ் நிலையம் என்று தமிழக அரசால் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பஸ் நிலையத்தில் அரசு டவுன் பஸ்கள் ஒரு பகுதியிலும், வெளியூர்களுக்கு செல்லும் பஸ்கள் மற்றொரு பகுதியிலும் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. இதனை தவிர மினிபஸ்கள் பஸ் நிலையத்தின்முகப்பில் நிறுத்தப்படுகின்றன.
இந்நிலையில் பேருந்துகளை இயக்கும் டிரைவர்கள் கட்டுப்பாடின்றி தங்களது விருப்பம் போல் அதிவேகத்தில் பஸ்சை ஓட்டி பஸ் நிலையத்திற்குள் நுழைகின்றனர். இதனால் பயணிகள் அதிர்ச்சியடைகின்றனர்.
இது குறித்து பயணிகள் கூறுகையில்:- பஸ் நிலையத்திற்குள் நுழையும் பஸ்கள் ஒன்றை மற்றொன்று முந்தி செல்ல முயற்சிக்கிறது. அந்த நேரத்தில் நடந்து செல்லும் பயணிகள்ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கத்துக்கு நடந்து செல்ல அச்சமாக உள்ளது. நிலையத்திற்குள் வரும் பஸ்கள் மெதுவாக பொறுமையாக வர அறிவுறுத்த வேண்டும். இப்படித்தான் வர வேண்டும். இப்படித்தான் செல்ல வேண்டும் என்று வழிகாட்டும் நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் . அப்படி இல்லாத பட்சத்தில் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- இரவு நேர பஸ்கள் குறைப்பால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
- இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன் வருவார்களா?
மதுரை
மதுரையின் மையப் பகுதியில் பெரியார் பஸ் நிலையம் அமைந்துள்ளது. இதன் அருகிலேயே ரெயில் நிலையமும் உள்ளது. வெளி யூரில் இருந்து பல்வேறு பணி நிமித்தமாக வரும் பயணிகள் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இருந்து பெரியார் பஸ் நிலையம் சென்று பல்வேறு இடங்களுக்கு செல்வார்கள். மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இரவு நேரத்தில் ஆரப்பாளையம் மற்றும் பெரியார் பஸ் நிலையங்களுக்கு சில பஸ்கள் இயக்கப்படுகிறது.
இந்த நிலையில் சில நாட்களில் இரவு திருமங்கலத்துக்கு 4 பஸ்கள் இயக்கப்படுவதற்கு பதிலாக ஒரு பஸ் மட்டுமே இயக்கப்ப டுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப் பட்டது. இதனால் பெரியார் பஸ் நிலையத்தில் பயணிகள் அருகில் உள்ள இடங்களுக்கு செல்ல 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்து இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட பயணிகள் வேறு வழியின்றி ஆட்டோக்களில் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர். அப்போது சில ஆட்டோ டிரைவர்கள் முதலில் ஒரு தொகையை கூறுகின்றனர். பின்னர் கூடுதல் தொகையை கேட்கின்றனர்.
இது பற்றி கேட்டால் தாங்கள் சொல்வது தான் சரியான தொகை என்று அடம்பிடித்து பணத்தைப் பெற்றுச் செல்கின்றனர். இப்படி தில்லு முல்லு செய்யும் ஆட்டோ டிரைவர்களால் மற்ற ஆட்டோ டிரைவர்களின் பெயரும் கெடுகிறது.
எனவே இது போன்ற அடாவடியில் ஈடுபடும் ஆட்டோ டிரைவர்களை சங்க நிர்வாகிகள் கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடி க்கை எடுக்க வேண்டும்.மேலும் பயணிகள் நலன் கருதி இரவு நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.
திருமங்கலத்துக்கும் தேவையான அளவில் பஸ்கள் இயக்க வேண்டும் என்று பஸ் பயணிகள் கோரிக்கை உள்ளனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை
- இருக்கைகள் சேதமடைந்தும் இல்லாமலும் உள்ளதால் மணிக்கணக்கில் கால்கடுக்க காத்திருக்க வேண்டியது உள்ளது.
- குடிநீர் வசதியும் இல்லாததால் விலைக்கு தண்ணீரை வாங்கி குடிக்க வேண்டிய சூழல் உள்ளது.
உடுமலை :
உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கும் நாள்தோறும் ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. வெளி மாவட்ட பஸ்களும் உடுமலை பஸ் நிலையத்திற்கு வந்து செல்கிறது. இதன் காரணமாக நாள்தோறும் மக்கள் நடமாட்டம் அதிக அளவில் இருந்து வருகிறது.
இந்த சூழலில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மத்திய பஸ் நிலையத்தில் அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்தவில்லை.சேதம் அடைந்த இருக்கைகள், காட்சிப் பொருளான குடிநீர் தொட்டி, சுகாதார வளாக வசதி இல்லாத நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், உடுமலையின் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், வெளிமாவட்ட மக்கள் ஒன்றிணைந்து பிரிந்து செல்லும் இடமாக உடுமலை மத்திய பஸ் நிலையம் உள்ளது.இங்கு பஸ்சுக்காக காத்துக் கொண்டிருக்கும் பொதுமக்களுக்கு அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யவில்லை. இருக்கைகள் சேதமடைந்தும் இல்லாமலும் உள்ளதால் மணிக்கணக்கில் கால்கடுக்க காத்திருக்க வேண்டியது உள்ளது. அல்லது தரையில் அமர வேண்டிய சூழல் உள்ளது. குடிநீர் வசதியும் இல்லாததால் விலைக்கு தண்ணீரை வாங்கி குடிக்க வேண்டிய சூழல் உள்ளது. முக்கியமாக அடிப்படை அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான சுகாதார வளாக வசதி ஏற்படுத்தி தரவில்லை. இதனால் பெண்கள் ,குழந்தைகள், கர்ப்பிணிகள், இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இதனால் அவர்கள் உடல் நலம் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகி உள்ளது.
ஆண்களுக்காக கட்டப்பட்ட சிறுநீர் கழிக்கும் பகுதி பராமரிப்பு இல்லாமல் துர்நாற்றம் வீசியும் சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்தி வருகிறது. நாள்தோறும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். பொதுமக்களுக்கு என்ன தேவை என்று அறிந்து அவர்கள் கோரிக்கை வைக்கும் முன்பே நிறைவேற்றித் தர வேண்டியது அவர்களது கடமையாகும். ஆனால் குறைபாடுகள் கண்ணுக்கு தெரிந்தும் கண்டும் காணாமல் செல்வது வேதனை அளிக்கிறது.
உடுமலை மத்திய பஸ் நிலையம் என்பது சுற்றுப்புற கிராம பொதுமக்களை ஒன்றிணைக்கும் பகுதியாகும். இங்கு ஏற்படுகின்ற சிறு குறைபாடு கூட அனைத்து கிராமங்களிலும் எதிரொலிக்க கூடிய சூழல் உள்ளது. இதனால் அரசுக்கு பொதுமக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்பட்டு வருகிறது. எனவே உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருக்கைகள், குடிநீர், சுகாதார வளாக வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்றனர்.
- ஓட்டை-உடைசல் பஸ்களை இயக்குவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
- தூங்கா நகரம் என்று வர்ணிக்கப்படும் மதுரை மாநகருக்கு 24 மணி நேரமும் பயணிகள் வந்து செல்கின்றனர்.
மதுரை
மதுரை மாநகரம் சென்னைக்கு அடுத்து முக்கிய நகரமாக விளங்குகிறது. இங்கு தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். மதுரை பகுதியில் செயல்பட்டு வரும். தொழில் நிறுவனங் களில் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
தூங்கா நகரம் என்று வர்ணிக்கப்படும் மதுரை மாநகருக்கு 24 மணி நேரமும் பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் அரசு பஸ்கள் போதுமான அளவில் வில்லை. மதுரை மாவட்டத்தில் இயக்கப்படும் பஸ்களில் பெரும்பாலான பஸ்கள் ஓட்டை, உடைசல் பஸ்களாகவே உள்ளன. அவைகளில் கம்பிகள் உடைந்து நீட்டிக்கொண்டு பயணிகளை பயமுறுத்துகின்றன.
சில பஸ்களில் இருக்கைகள் அமர முடியாத அளவில் கிழிந்து சரிந்து சேதமாக காட்சியளிக் கின்றன. சில டவுன் பஸ்கள் தள்ளாடியபடியே செல்கின்றன. மழை காலங்களில் பல பஸ்களின் மேற்கூரை சேதமாகி பஸ்சுக்குள் தண்ணீர் ஒழுகுகிறது. அப்போது பஸ்சில் பயணம் செய்யும் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர். சில பஸ்களில் குடை பிடித்துக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நிலை உள்ளது. இதற்கிடையே தற்போதுபெண்களுக்கு கட்டணமில்லா பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.இந்த பஸ்களில் பல போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருப்பதால் அதில் பயணம் செய்யும் போது சர்க்கஸ் வாகனங்களில் செல்வது போல் உள்ளது.
மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் காலை மற்றும் மாலை நேரங்களில் செல்ல போதிய பஸ்கள் இல்லாததால் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு பயணம் செய்கின்றனர். இதனால் உயிரிழப்பும் ஏற்படுகிறது. மாணவ, மாணவிகள் பஸ் நிறுத்தம் வரும்போது டிரைவர்கள் பெயரளவுக்கு நிறுத்திவிட்டு அவர்கள் ஏறுவதற்குள் பஸ்களை எடுத்துச்செல்கின்றனர். இதேநிலை மகளிர் கட்டணமில்லா பஸ்களிலும் உள்ளது.
எனவே பயணிகளின் நலன் கருதி மதுரை மாவட்டத்திற்கு தேவையான அளவு கூடுதல் பஸ்களை இயக்கவேண்டும். புதிதாக வாங்கப்படும் பஸ்களை அதிகமாக மதுரைக்கு வழங்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ரேஷன் கார்டுகளில் உள்ள குளறுபடிகளை சரி செய்த பிறகு வழங்க வேண்டும்.
- புதிதாக பயணிகள் நிழலகம் அமைத்து தர வேண்டும்.
வேதாரண்யம்:
தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி தலைமை தாங்கினார்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அண்ணாதுரை, செபஸ்தி அம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் உறுப்பி னர்கள் இடையே நடந்த விவாதம் வருமாறு:-
ஜெகதீஷ் (துணை தலைவர்):
தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் கோடை காலத்தில் மாணவர்களின் தாகத்தை தணிக்கும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் மண்பானையில் குடிநீர் வைக்க வேண்டும்.
ஞானசேகரன் (சிபிஎம்):
நத்தப்பள்ளம் முதல் செம்பியவேளூர் வரை உள்ள பழுதடைந்த சாலையை செப்பனிட்டு புதிய சாலையாக அமைத்து தர வேண்டும் என்று பேசி கொண்டிருந்தார்.
அப்போது அ.தி.மு.க.வை சேர்ந்த ஜெகதீஷ், ரம்யா, முத்துலட்சுமி, தீபா ஆகிய 4 உறுப்பினர்களும் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதில்லை என கூறி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
மாசிலாமணி (தி.மு.க.):
கோவில்பத்து பகுதியில் அமைந்துள்ள பிலாற்றங்கரையின் இருபுறமும் மண்சாலையாக உள்ளது.
இதை தார்சா லையாக மாற்றி தர வேண்டும்.
உதயகுமார் (தி.மு.க.):
தமிழக அரசு குடும்ப தலைவிக்கு உரிமைத்தொகை ரூ.1000 வழங்குவதற்கு முன்பு ரேஷன் கார்டுகளில் உள்ள குளறுபடிகளை சரி செய்த பிறகு வழங்க வேண்டும்.
கஸ்தூரி குஞ்சையன் (தி.மு.க.):
வெள்ளப்பள்ளம் கடைத்தெருவில் புதிதாக பயணிகள் நிழலகம் அமைத்து தர வேண்டும்.
தமிழரசி (தலைவர்):
உறுப்பினர்களின் கோரிக்கை களை முன்னுரிமைகளின் அடிப்படையில் படிப்படி யாக நிறைவேற்றி தரப்படும் என்றார்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
- இருகூர் - போத்தனூர் வழியாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- கோவை - பரூனி சிறப்பு ரெயில் கூடுதலாக 7 ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் :
பிலாஸ்பூர் - எர்ணாகுளம் ரெயில் கோவை செல்லாது. இருகூர் - போத்தனூர் வழியாக இயக்கப்படும் என அறி விக்கப்பட்டுள்ளது. கோவை வடக்கு - கோவை ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணி நடக்கிறது.இதனால், வருகிற 6-ந் தேதி பிலாஸ்பூர் - எர்ணாகுளம் ரெயில், திருப்பூரில் இருந்து இருகூர் - போத்த னூர் வழியாக பாலக்காடு சென்றடையும். கோவை ரெயில் நிலையம் செல்லா து. அதே நேரம் போத்தனூரில் ரெயில் நிற்கும்.திருச்சியில் இருந்து பாலக்காடு டவுன் செல்லும் பாஸ்ட் பாசஞ்சர் ரெயில் ஏப்ரல், 3, 4, 7, 8 மற்றும் 9-ந் தேதி ஆகிய 6 நாட்கள் வழித்தடத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் 15 நிமிடம் நிறுத்தி வைக்கப்படும். மேற்கண்ட 6 நாட்கள் கோவை - மேட்டுப்பா ளையம் ரெயில் முழுவதும் ரத்து செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இத்த கவலை சேலம் கோட்ட அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.
கோவை - பரூனி சிறப்பு ரெயில் கூடுதலாக, 7 ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் புதிய அட்டவணை யிலும் திருப்பூர் புறக்கணிக்க ப்பட்டுள்ளது.தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு பயணிக்கும் அம்மாநி லத்தவர் வசதிக்காக, மார்ச் 6-ந் தேதி கோவை - பாட்னா இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. இரண்டாவது சிறப்பு ெரயில் கோவை - பரூனி (பீகார்) இடையே ஏப்ரல், 5, 12, 19, 26 மற்றும் மே, 3ல் புதன்தோறும் இயங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் புறப்படும் இந்த ரெயில் திருப்பூரில் நிற்காமல் ஈரோடு செல்லும் என அட்டவணை வெளி யானது. குறிப்பிட்ட சில நிறுத்தங்களில் ெரயில் நின்று செல்ல பயணிகள் வலியுறுத்தினர்.அதை ஏற்று, புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பழைய அட்டவணையில் ரெயில் நின்று செல்லும் நிறுத்தங்கள் எண்ணிக்கை 32 ஆக இருந்தது. தற்போது கூடுதலாக 7 நிலையங்கள் சேர்த்து, 39 ஆக அதிகரித்து ள்ளது. இதில் 3ஆந்திர மாநிலத்திலும், 4 ஒடிசா மாநிலத்திலும் வருகிறது.
தமிழகத்தில் ெரயில் நிற்கும் நிலையங்கள் எண்ணிக்கை ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் என்ற பழைய பட்டியல் அப்படியே தொடர்கிறது. புதிய அட்டவணையிலும் திருப்பூர் சேர்க்க ப்பட வில்லை. இதனால் திருப்பூ ரை சேர்ந்த வடமாநிலத்தினர் ஈரோடு, கோவை சென்று ரெயிலில் ஏறும் நிலை உள்ளது. எனவே திருப்பூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு ள்ளது.
- கோயில்களில் குண்டம் திருவிழா நடைபெற்றதால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு செல்ல குவிந்தனர்.
- சிறப்பு பேருந்துகளாக போக்குவரத்து அதிகாரிகள் மாற்றி அனுப்பி வைத்தனர்.
திருப்பூர் :
திருப்பூரில் இருந்து பிற மாவட்டங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. நள்ளிரவு நேரங்களில் பயணிகள் மிக குறைந்த அளவே இருப்பதால் பஸ் இயக்குவது நிறுத்தப்படு கிறது. வார நாட்களில் கூட்டம் இல்லாத நிலையில் வார இறுதி நாட்களில் சொந்த ஊருக்கு செல்ல பொதுமக்கள் முயல்வதால் அனைத்து பஸ்களும் நிரம்பியே செல்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு செல்ல ஏராளமா னோர் திருப்பூர் கோவில் வழி பஸ் நிலையத்தில் குவிந்தனர். போக்குவரத்து அதிகாரிகள் தென் மாவட்டங்களுக்கு அதிக அளவில் பயணிகள் வந்ததால் சிறப்பு பஸ்கள் இயக்கிவந்தனர். இந்தநிலையில் நேற்று சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன்கோவில், மேட்டுப்பாளையம் வனப த்ரகாளியம்மன் கோவில், பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் உள்ளிட்ட கோயி ல்களில் குண்டம் திருவிழா நடைபெற்றதால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு செல்ல குவிந்தனர். திருப்பூர் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதனால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களை கோவிலுக்கு சிறப்பு பேரு ந்துகளாக போக்குவரத்து அதிகாரிகள் மாற்றி அனுப்பி வைத்தனர். இதனால் பஸ் பற்றாக்குறை ஏற்பட்டு கோவில்வழி பஸ் நிலையத்தில் தென் மா வட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு பஸ் இல்லாமல் காத்திரு க்கும் நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் சாலை மறியலில் ஈடுபட்ட னர். தகவல் அறிந்த நல்லூர் போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
பஸ் வசதி செய்து கொடுப்பதாக தெரிவித்தனர். இதனை யடுத்து 1 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் கலைந்து தங்கள் சொந்த ஊருக்கு சென்றனர். தென் மாவட்டங்களுக்கு முக்கியமான நாட்களில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என ெதன் மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- திருப்பூரில் தற்போது 3 பஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.
- தென் மாவட்டங்களுக்கு கோவில்வழி பஸ் நிலையத்தில் இருந்து தான் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
திருப்பூர் :
தென் மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரத்துக்கு மேற்பட்ட வர்கள் திருப்பூருக்கு பனியன் கம்பெனி உள்ளிட்ட தனியார் தொழில் நிறுவனங்களுக்கு வேலை தேடி வருகிறார்கள். இங்கு வேலை பார்ப்பவர்கள் மாதம் முதல் வாரத்தில் மட்டுமல்ல தினந்தோறும் சொந்த ஊர்களுக்கு போவதும் வருவதுமாக உள்ளனர். திருப்பூரில் தற்போது 3 பஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தென் மாவட்டங்களுக்கு கோவில்வழி பஸ் நிலையத்தில் இருந்து தான் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
திருப்பூரில் பழைய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டத் தொடங்கிய உடன் பஸ்கள் நிறுத்த போதிய வசதி இல்லாத காரணத்தால் திருப்பூர் பி. என்., ரோட்டில் புதிய பஸ் நிலையம் ஒன்று அமைக்கப்பட்டது. அங்கே கரூர், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு பஸ் போக்குவரத்து உருவாக்கப்பட்டது. அதே போன்று தான் கோவில்வழி பஸ் நிலையம் அமைக்க ப்பட்டு தென் மாவட்டங்க ளுக்கு பஸ் வசதி செய்யப்ப ட்டுள்ளது. போக்குவரத்து நெருக்கடியை குறைக்கவும், பண்டிகை நாட்களில் ஒரே இடத்தில் மக்கள் கூடுவதை தவிர்க்கவுமே மாவட்ட நிர்வாகத்தால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், கோவில்வழி பஸ் நிலையம் கூரை சீட் போடப்பட்டு தற்காலிக ஏற்பாடாகவே அமைக்கப்ப ட்டுள்ளது. இரவில் பயணிகள் அச்சமின்றி அமர போதிய மின் விளக்குகள் இல்லை. போதிய இருக்கைகளும் கிடையாது. மழை பெய்தால் ஒதுங்கி நிற்க வேறு இடமும் கிடையாது. வெயில் காலத்திலும் அமர முடியாது. தாராபுரம், பழனி, திண்டுக்கல் மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் தான் அதிகளவில் வருகிறார்கள். போதிய குடிநீர் வசதியோ, மின் விளக்கு வசதியோ இல்லை. பேருக்கு ஒரு கழிவறை மட்டுமே உள்ளது . பஸ் நிலையத்திற்குள் இருட்டாக இருப்பதால் அதனை பயன்படுத்தி கொண்டு சமூக விரோதிகள் குடிப்பதும், தகாத செயல்களிலும் ஈடுபடுகிறா ர்கள். இதனால் பெண் பயணிகள் மட்டுமல்ல ஆண் பயணிகளும் எப்போது பஸ் வரும் என்று அவஸ்தையுடன் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.
மேலும் இது குறித்து தென் மாவட்ட பயணி ஒருவர் கூறுகையில்;- நான் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். விடுமுறை நாட்களில் ஊருக்கு செல்கிறேன். தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்சுகள் குறிப்பிட்ட நேரத்தில் வருவதில்லை. இங்கு இரவில் போதிய மின்விளக்குகள் இல்லாத காரணத்தால் நிழற்குடையில் அமர முடிவதில்லை. கிடக்கும் ஓரிரு இருக்கைகளை போதை ஆசாமிகள் ஆக்கிரமித்து கொள்கிறார்கள். பஸ் வரும் வரை நிற்க வேண்டிய நிலை உள்ளது. பெரிதாக இங்கு கடைகளும் இல்லை. ஆகவே உணவு உள்ளிட்டவை பெரிதாக பயணிகளுக்கு கிடைப்பதில்லை. அரசு அறிவித்துள்ளது போல நவீன வசதிகளுடன் கூடிய பஸ் நிலையத்தை விரைந்து அமைத்து தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ் புத்தாண்டை ஒட்டி பஸ் பயணிகளுக்கு நீர், மோர், பழசாறு ஆகியவை டி.எஸ்.பி. சபியுல்லா வழங்கி னார்.
- இதற்கான ஏற்பாடுகளை பிஸ்மில்லா ஷீ மார்ட் மற்றும் விகேசி நிறுவனத்தினர் இணைந்து நடத்தினர்.
கடலூர்:
பண்ருட்டி, ஏப்.15-பண்ருட்டி பஸ் நிலையத்தில் உள்ள புறகாவல் நிலை யத்தில் தமிழ் புத்தாண்டை ஒட்டி பஸ் பயணிகளுக்கு நீர், மோர், பழசாறு ஆகியவை டி.எஸ்.பி. சபியுல்லா வழங்கி னார். இதில்இன்ஸ்பெக்டர்கள் பண்ருட்டி கண்ணன், புதுப்பேட்டை நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், புஷ்பராஜ், வீராசாமி ஆகியோர் கலந்து கொண்டனர் இதற்கான ஏற்பாடுகளை பிஸ்மில்லா ஷீ மார்ட் மற்றும் விகேசி நிறுவனத்தினர் இணைந்து நடத்தினர்.
- உ.ளுந்தூர் பேட்டை அருகே ஆம்னி பஸ் தடுப்பு கட்டையில் மோதி 8 பேர் காயம் அடைந்தனர்.
- இந்தப் பஸ்சை கோவையை சேர்ந்த ராஜ்குமார் ஓட்டி வந்தார்.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர் பேட்டை அருகே ஆம்னி பஸ் தடுப்பு கட்டையில் மோதி 8 பேர் காயம் அடைந்தனர். கோவையில் இருந்து தனியார் ஆம்னி பஸ் 30-க்கும் மேற்பட்ட பயணி களுடன் சென்னைக்குச் புறப்பட்டு வந்தது. இந்தப் பஸ்சை கோவையை சேர்ந்த ராஜ்குமார் ஓட்டி வந்தார். இந்த பஸ் உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையம் எதிரே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலைநடுவே உள்ள தடுப்புக் கட்டையில் மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த 8-க்கும் மேற்பட்ட பணிகள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டசமாக உயிர்த்தப்பினர். போலீஸ் நிலையம் எதிரே நடந்த இந்த விபத்தை பார்த்த பொதுமக்கள் மற்றும் போலீசார் விபத்தில் காயம் அடைந்தவர்களை விட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் சிக்கிய பஸ்கிசை கிரேன் மூலம் அப்புற ப்படு த்தும் பணியில்ஈடுபட்டனர். போலீஸ் நிலையம் எதிரே ஏற்பட்ட இந்த விபத்து அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படு த்தியது.
- தென்காசி வழியாக 10 தினசரி ரெயில்களும், ஒரு வாரம் மும்முறை ரெயிலும், 4 வாராந்திர ரெயில்களும் இயங்கி வருகின்றன.
- தென்காசி ரெயில் நிலையத்தை மேம்படுத்தினால் வாராந்திர ரெயில்களை நிரந்தர தினசரி ரெயில்களாக இயக்க முடியும்.
தென்காசி:
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள மிக முக்கியமான சந்திப்பு ரெயில் நிலையம் தென்காசி ஆகும். தற்போது தென்காசி வழியாக 10 தினசரி ரெயில்களும், ஒரு வாரம் மும்முறை ரெயிலும், 4 வாராந்திர ரெயில்களும் இயங்கி வருகின்றன.
டெர்மினல் ரெயில் நிலையங்களாக உள்ள செங்கோட்டை ரெயில் நிலையத்தில் 4 நடை மேடைகளும், நெல்லை ரெயில் நிலையத்தில் 5 நடை மேடைகளும் உள்ள நிலையில் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை, பெங்களூர், கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு கூடுதல் ரெயில்கள் இயக்குவதற்கு போதுமானதாக இல்லை.
எனவே 4 நடைமேடைகள் கொண்ட தென்காசி ரெயில் நிலையத்தில் நீரேற்றும் வசதி ஏற்படுத்தினால் கூடுதல் ரெயில்கள் இயக்குவதற்கு வாய்ப்புகள் கிடைக்கும்.
இதுகுறித்து தென்மாவட்ட பயணிகள் கூறியதாவது:- செங்கோட்டை, நெல்லை ரெயில் நிலையங்களை போல தென்காசி ரெயில் நிலையத்தை டெர்மினல் நிலையமாக மாற்ற வேண்டும். இதற்கு தென்காசி ரெயில் நிலையத்தில் பைப் லைன் மற்றும் நீரேற்றும் தொட்டி வசதிகள் ஏற்படுத்தினால் தென்காசியில் இருந்து சென்னை, பெங்களூர், கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு கூடுதல் ரெயில்கள் இயக்குவதற்கு வாய்ப்பாக அமையும்.
தற்போது செங்கோட்டை ரெயில் நிலையத்திலிருந்து கூடுதல் ரெயில்கள் இயக்க முடியாது என்று தெற்கு ரெயில்வே கைவிரித்துள்ள நிலையில் தென்காசி ரெயில் நிலையத்தை மேம்படுத்தினால் வாராந்திர ரெயில்களை நிரந்தர தினசரி ரெயில்களாக இயக்க முடியும். இதற்காக தென்காசி எம்.பி. மேம்பாட்டு நிதி மற்றும் அம்ரித் பாரத் திட்டத்திற்காக செலவிடப்படும் நிதியிலிருந்தும் நீரேற்றும் வசதியை ஏற்படுத்தி டெர்மினல் ஆக மாற்ற வேண்டும். தென்காசியில் டெர்மினல் செயல்படத் தொடங்கினால் மதுரையோடு நிற்கும் சில ரெயில்களை தென்காசி வரைக்கும் நீட்டிக்க முடியும். அதைப்போல சிலம்பு எக்ஸ்பிரஸையும் ,தாம்பரம் - செங்கோட்டை வாரம் மும்முறை இயங்கும் ரெயிலையும் தினசரியாக இயக்கவும் வாய்ப்புகள் அமையும். எனவே தென்காசி தொகுதி எம்.பி. உடனடியாக தென்காசியை டெர்மினல் நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- பராமரிப்பு பணி நடைபெறுவதால் தஞ்சாவூரோடு ரெயில் நிறுத்தப்பட்டது.
- காரைக்கால் ரெயிலில் பயணம் செய்வதற்காக கட்டணம் வசூலித்துள்ளனர்.
தஞ்சாவூர்:
திருச்சியில் இருந்து காரைக்காலுக்கு பயணிகள் ரெயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் திருச்சியில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்படும் ரெயில் மட்டும் தஞ்சாவூர் வரை மட்டுமே செல்கிறது. கடந்த இரண்டு வாரங்களாக இந்த நிலைமை நீடித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் இன்று காலை 10:30 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்ட ரெயிலில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர்.
பராமரிப்பு பணி நடைபெறுவதால் தஞ்சாவூ ரோடு ரயில் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து அதில் இருந்து இறங்கிய பயணிகளில் 25-க்கும் மேற்பட்டோர் ரெயில்வே போலீசாரிடம் முறையி ட்டனர்.
எங்களுக்கு காரைக்கால் வரை செல்வதற்கு டிக்கெட் கட்டணம் வசூலி க்கப்பட்டுள்ளது.
ஆனால் தஞ்சாவூரோடு ரயில் நிறுத்தப்பட்டது என்றனர்.
அதற்கு போலீசார், பராமரிப்பு பணியால் இரண்டு வாரங்களாக திருச்சியில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்படும் ரெயில் மட்டும் காரைக்கால் செல்லாமல் தஞ்சாவூர் வரை மட்டுமே செல்கிறது.
பணிகள் சில நாட்களில் முடிவடைந்து விடும். பின்னர் வழக்கம்போல் காரைக்கால் வரை செல்லும். உங்களுக்கு தஞ்சாவூரில் இருந்து வேறு நேரங்களில் செல்லும் காரைக்கால் ரெயிலில் பயணம் செய்வதற்காக கட்டணம் வசூலித்துள்ளனர்.
வேண்டுமென்றால் நீங்கள் கவுண்டரில் சென்று மீதமுள்ள பணத்தை வாங்கிக் கொள்ளலாம் என்றனர்.
இதைத் தொடர்ந்து அந்த பயணிகள் கவுண்டரில் சென்று மீதம் பணத்தை வாங்கிக் கொண்டு காரைக்கால் சென்றனர்.