என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Patta"

    • 2017 ம் ஆண்டு 96 குடும்பங்களுக்கு குடிமனைபட்டா வழங்கப்பட்டது.
    • இதுவரை இடம் அளந்து ஒப்படைக்கப்படவில்லை.

    உடுமலை :

    அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் உடுமலை வருவாய் கோட்டாட்சியரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:- மடத்துக்குளம் தாலுகா குமரலிங்கம் பகுதியில் கடந்த 2017 ம் ஆண்டு 96 குடும்பங்களுக்கு குடிமனைபட்டா வழங்கப்பட்டது.

    ஆனால் இதுவரை இடம் அளந்து ஒப்படைக்கப்படவில்லை. தற்போது இந்த இடம் தனியார் நபர் ஆக்கிரமிப்பில் உள்ளது. எனவே ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு 96 குடும்பங்களுக்கு இடத்தை பிரித்து வழங்க வேண்டும். பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என அதில் கூறியுள்ளனர்.

    • திருப்பரங்குன்றம் பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பலர் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
    • அவர்கள் தங்களுக்கு பட்டா வழங்கக்கோரி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் தாலுகா கோடாங்கி தோப்பு தெரு பகுதியில் கிராம நத்தம் மற்றும் புறம்போக்கு பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பலர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களுக்கு பட்டா வழங்கக்கோரி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதனைத்தொடர்ந்து தற்போது திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவ லகத்தில் 100-க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு பட்டா வழங்கக்கோரி வட்டாட்சியரிடம் இன்று கோரிக்கை மனு அளித்தனர்.

    இதேபோல தென்பரங்கு ன்றம் காட்டுநாயக்கர் தெரு பகுதி மக்களும் தங்களுக்கு பட்டா வழங்கக்கோரி வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தாலுகா அலுவலகத்தில் ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கு பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

    • மீனவ குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • முடிவில் மன்டல துணை தாசில்தார் சதீஷ் நன்றி கூறினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, காலமநல்லூர் ஊராட்சி சின்னமேடு, மருதம்பள்ளம் ஊராட்சி சின்னங்குடி ஆகிய மீனவ கிராமம் பகுதிகளில் மீனவ குடும்பங்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தலைமை தாங்கினார். செம்பனார்கோவில் ஒன்றிய குழுதலைவர் நந்தினி ஸ்ரீதர், துணைத் தலைவர் மைனர் பாஸ்கர், தாசில்தார் புனிதா, செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட கலெக்டர் இரா.லலிதா மற்றும் பூம்புகார் எம்.எல்.ஏ.வும், மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க. செயலா ளருமான நிவேதா எம்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டு சின்னமேடு மீனவ கிராம மக்கள் 149 குடும்பங்களுக்கும், சின்னங்குடி மீனவ கிராம மக்கள் 32 குடும்பங்களுக்கும் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கி பேசினர்.

    நிகழ்ச்சிகளில் மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ஞானவேலன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜி.என்.ரவி, தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், செம்பை மத்திய ஒன்றிய திமுக செயலாளர் அமுர்த.விஜயகுமார், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராஜேஸ்வரி, சாந்தி, மருதம்பள்ளம் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி மதியழகன் மற்றும் சின்னமேடு மீனவ கிராம பஞ்சாயத்தார் மதியழகன், கனக்குபிள்ளை, குழந்தைவேல், சின்னங்குடி மீனவ பஞ்சாயத்தார்கள், திமுக பிரதிநிதிகள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மன்டல துணை தாசில்தார் சதீஷ் நன்றி கூறினார்.

    • அவர்களுக்கு வீடு கட்ட அனுமதி வழங்க இயலாது.
    • கான்கிரீட் வீடு கட்டுவதற்கு குடியிருப்பு மனை பட்டா வழங்க வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், பொருளாளர் ராஜேந்திரன், துணை தலைவர்கள் துரைராஜ், முருகானந்தம், துணை செயலாளர் ராஜ் மோகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஜவகர் மற்றும் சங்கர் ஆகியோர் திருத்துறைப்பூண்டி தாசில்தார் மலர்க்கொடி யிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    சங்கத்தின் 32-வது மாநாடு கடந்த மாதம் 7-ந் தேதி திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது. இதில் குடியிருப்பு மனை பட்டா இல்லாத அனைவருக்கும் அரசு உடன் மனைப்பட்டா வழங்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அந்த வகையில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் 32 ஊராட்சிகளுக்கும் ஆய்வு செய்ததன் அடிப்படையில் மொத்தம் 2 ஆயிரத்து 305 பேருக்கு அரசு வீடு கட்ட அனுமதி அளித்துள்ளது.

    அவர்கள் இருக்கும் இடத்தில் பட்டா இல்லாமல் உள்ளனர்.

    ஆகையால் அவர்களுக்கு வீடு கட்ட அனுமதி வழங்க இயலாத என்று அரசு அலுவலர்கள் கூறுகின்றனர். ஆகவே அரசு அவர்களுக்கு மனையும், பட்டாவும் வழங்க வேண்டும்.

    கூரை இல்லாத வீடு திட்டத்தை நிறைவேற்றும் வகையில் அனைவருக்கும் கான்கிரீட் வீடு கட்டுவதற்கு குடியிருப்பு மனை பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த 50 வருடங்களுக்கு மேலாக வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர்.
    • செலுத்தும் வாடகை தொகைக்கு பல சமயங்களில் ரசீது கொடுக்கப்பட்டுள்ளது.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள நடுப்படுகை கிராமத்தில் கண்டமங்கலம் அருள்மிகு கைலாசநாதர் சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 20-க்கும் மேற்பட்ட ஏழை-எளிய மக்கள் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர்.

    இதற்காக கோயில் நிர்வாகத்திற்கு வாடகை தொகையும் செலுத்தி வருகின்றனர். செலுத்தும் வாடகை தொகைக்கு பல சமயங்களில் ரசீது கொடுக்கப்பட்டுள்ளது.

    பல சமயங்களில் ரசீது கொடுக்கப்படவில்லை என்று கூறுகின்றனர்.

    இந்த நிலையில் இங்கு குடியிருக்கும் வீடுகளுக்கு வீட்டு வாடகை தொகையை உயர்த்தி நிர்ணயித்திருப்பதாகவும், பலருக்கும் வாடகை நிலுவைத் தொகை குறைந்தபட்சம் ரூ5 ஆயிரத்திலிருந்து அதிகபட்சமாகரூ 12 ஆயிரம் வரை இருப்பதாகவும் உடனடியாக கட்டவேண்டும் கோவில் நிர்வாகத்தின் தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

    இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான இந்த பகுதி மக்கள் இதுகுறித்து தஞ்சை மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளனர்.

    கோவில் நிர்வாகத்தால் தற்போது சொல்லப்படும் நிலுவைத் தொகையை ரத்து செய்ய வேண்டும்.

    வீடுகளுக்கான வாடகைத்தொகையை தற்போது குடியிருப்பவரிடம் கலந்து பேசி நிர்ணயம் செய்ய வேண்டும்.

    50 ஆண்டுகளுக்குமேலாக குடியிருக்கும் தங்களுக்கு இதே இடத்தில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு ஒன்றை அளித்து நியாயமான பதில் வரும் என்று காத்துக் கொண்டுள்ளனர்.

    மேலும் இதுகுறித்து முதல்-அமைச்சருக்கும் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.

    • கடந்த 2000-ம் ஆண்டு தமிழக அரசால் இலவசமாக வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டன.
    • அத்துமீறி நுழைந்து கற்களை ஊன்றி ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார்.

    மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    ஒரத்தநாடு தாலுகா கருக்காடிப்பட்டி ஊராட்சி அம்மையன்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் கிராமத்தில் சுமார் 20 -க்கும் மேற்பட்ட விவசாயக் கூலி தொழிலாளிகளுக்கு கடந்த 2000-ம் வருடம் தமிழக அரசால் இலவசமாக வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டன.

    இந்த மனைகளில் ஓட்டு மற்றும் குடிசை வீடுகளை கட்டி குடியிருந்து வருகிறோம்.மேலும் குடிநீர் கட்டணம், வீட்டு வரி, மின்சாரக் கட்டணங்கள் கட்டி அதற்கான ரசீதும் சட்டப்படி பெற்று உள்ளோம்.

    இந்த நிலையில் ஒரு நபர், அரசு வழங்கிய அந்த இடத்திலும் வீட்டிற்குள்ளும் அத்து மீறி நுழைந்து கற்களை ஊன்றி ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.

    அவரிடம் கேட்டதற்கு இது எனது இடம் என்று கூறி வருகிறார். எனவே அந்த நபரிடமிருந்து , இடங்களை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மின்சாரம், குடிநீர், கழிவுநீர் இணைப்பு பெற சமீபத்தில் விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்.
    • குடிமனை பட்டாக்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும்.

    பேராவூரணி:

    கோவில் மனை நிலங்களுக்கு வாடகை முறையை ரத்து செய்து முந்தைய பகுதி அல்லது குத்தகை முறையை அமல்படுத்த வேண்டும், மின்சாரம், குடிநீர், கழிவுநீர் இணைப்பு பெற சமீபத்தில் விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும், கருணாநிதி அளித்த குடிமனை பட்டாக்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில் மனையில் குடியிருப்போர் சங்கத்தினர் பேராவூரணியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் ராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை, சி.பி.ஐ. மாவட்ட குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் தொடக்கி வைத்தார்.

    இதில் ஜெயராஜ், சி.பி.ஐ. நகர செயலாளர் மூர்த்தி, விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கருணாமூர்த்தி, நகர விவசாய சங்க பொறுப்பாளர் சித்திரவேலு மற்றும் கோவில் மனை குடியிருப்போர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    முடிவில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ரவி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.

    • பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலு வலர்களுடன் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலை மையில் நடைபெற்றது
    • மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அலு வலர்களுக்கு உத்தரவிட்டார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலு வலர்களுடன் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலை மையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிற னாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் நேரில் அளித்தனர். குறைதீர்வு கூட்டத்தில் பட்டா தொடர்பான 47 மனுக்களும், முதியோர் உதவித்தொகை தொடர்பாக 26 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 19 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 32 மனுக்களும், மாற்றுதிறனாளி நல அலுவலகம் தொடர்பாக 22 மனுக்களும், இதர மனுக்கள் 147 ஆக மொத்தம் 293 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதார ருக்கு தீர்வு வழங்க வேண்டும்.

    மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும். மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அலு வலர்களுக்கு உத்தரவிட்டார். குறைதீர்வு கூட்டத்தின் வாயிலாக கடலூர் வட்டத்தை சேர்ந்த 4 மாற்று திறனாளி பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா விற்கான ஆணையை கலெக்டர் பாலசுப்ரமணியம் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகன், தனித்துணை ஆட்சியர் கற்பகம் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ஒரு மாதம் என்பது இலக்கு தான். 15 நாட்களுக்குள் தீர்வு காண்கிறோம்.
    • 2900 மனுக்கள் மட்டுமே நிலுவையில் உள்ளது. அந்த மனுக்களும் விரைவில் தீர்வு காணப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை தாலுகாவில் பசலி 1432-க்கான வருவாய் தீர்வாய (ஜமாபந்தி) கணக்குகள் தணிக்கை யானது இன்று தஞ்சை தாலுகா அலுவலகத்தில் தொடங்கியது.

    இதற்கு கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா தலைமை தாங்கினார். தாசில்தார் சக்திவேல் முன்னிலை வகித்தார்.

    தொடக்கநாளான இன்று தஞ்சை தாலுகா பெரம்பூர் சரகத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களது பட்டா மாற்றம் தொடர்பான மனுக்களை கூடுதல் கலெக்டர் சுகபுத்ராவிடம் வழங்கினர்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுக்காவிலும் ஜமாபந்தி நிகழ்ச்சி தொடங்கியது. பட்டா மாற்றம் தொடர்பான மனுக்கள் வரப்பெற்றன. பட்டா மாற்றம் தொடர்பான மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு அளிக்கப்பட்டு வருகிறது. மனு அளிக்கப்பட்டதில் இருந்து அதனை பரிசீலித்து அதிகபட்சம் ஒரு மாதத்திற்குள் தீர்வு காணப்பட்டு வருகிறது.

    ஒரு மாதம் என்பது இலக்கு தான். 15 நாட்களுக்குள் தீர்வு காண்கிறோம். தமிழ்நாடு அரசின் புதிய அரசாணைப்படி பட்டா மாற்றத்திற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தலின் பேரில் உடனுக்குடன் தீர்வு காணப்படுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு 13650 மனுக்கள் நிலுவையில் இருந்தது.

    ஆனால் தற்போது பெரும்பாலான மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு 2900 மனுக்கள் மட்டுமே நிலுவையில் உள்ளது. அந்த மனுக்களும் விரைவில் தீர்வு காணப்படும். இவைகள் அனைத்தும் அரசு புதிய அரசாணை மற்றும் மாவட்ட கலெக்டரின் நடவடிக்கைகளை காரணமாகும்.

    இது தவிர பட்டா மாற்றம் தொடர்பான மனுக்களுக்கு உடனடி தீர்வு காண தற்போது வி.ஏ.ஓ.க்களுக்கும் சர்வேயர் மூலம் தகுந்த பயிற்சி அளிக்கபட்டு வருகிறது. இதன் மூலமும் மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்படுகிறது.

    இன்று தொடங்கிய ஜமாபந்தி நிகழ்ச்சி அடுத்ததாக வருகிற 16-ஆம் தேதி வல்லம் சரக்கத்திற்கும், 17-ந் தேதி தஞ்சை சரக்கத்திற்கும், 18-ந் தேதி ராமாபுரம், 19-ந் தேதி நாஞ்சிகோட்டை சரகத்திற்கும் நடைபெற உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு) சீமான், மாவட்ட வேளாண்மை உதவி இயக்குனர் ஐயம்பெருமாள் ,தனி வட்டாட்சியர் பாலசுப்ரமணியம், ஆதிதிராவிடர் நலன் ரகுராமன், ஏ.டி.எஸ்.ஓ. ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அனல்மின் நிலைய விரிவாக்க பணிக்காக அருகில் உள்ள கிராமங்களில் வசித்த 531 குடும்பத்தினர் தங்களது இடங்களை வழங்கினர்.
    • கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் பட்டா வழங்க தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட கலெக்டர் ஆல் பி ஜான் வர்க்கீசிடம் மனு அளித்தனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் கடந்த 32 வருடங்களுக்கு முன்னர் வட சென்னை அனல்மின் நிலைய விரிவாக்க பணிக்காக அருகில் உள்ள கிராமங்களில் வசித்த 531 குடும்பத்தி னர் தங்களது இடங்களை வழங்கினர். அவர்களுக்கு அருகில் மாற்று இடம் வழங்கப்பட்டது. ஆனால் நிலம் உரிமையாக்க பட்டா வழங்கப்படவில்லை.

    இதையடுத்து தங்களது நிலத்துக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கிராம மக்கள் பல கட்ட போராட் டங்கள் நடத்தினர். ஊராட்சி மன்றம், வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தனர். எனினும் அவர்களுக்கு நிலப்பட்டா வழங்கப்படவில்லை. இதனால் கிராமமக்களின் போராட்டம் கடந்த 32 ஆண்டுகளாக நீடித்து வந்தது.

    இதற்கிடையே சமீபத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் பட்டா வழங்க தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட கலெக்டர் ஆல் பி ஜான் வர்க்கீசிடம் மனு அளித்தனர்.

    இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யாவிடம் கலெக்டர் உத்தரவிட்டார். சம்பந்தப்பட்ட இடத்திற்கு சார் ஆட்சியர் ஐஸ்வர்யா நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    இதைத்தொடர்ந்து வடசென்னை அனல் மின்நிலைய விரிவாக்க பணிக்காக நிலம் வழங்கி மாற்று இடத்தில் வசிக்கும் 531 குடும்பத்தினருக்கு பட்டா வழங்க கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார். இதற்காக வருவாய்துறை அதிகாரிகள், ஊராட்சி தலைவர் சுகந்தி வடிவில், துணைத் தலைவர்கதிர்வேல் முன்னிலையில் தற்போது வீடுகளை அளவிடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, இப்பகுதியில் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் பட்டா வழங்க அளவீடு செய்யும் பணி நடந்து வருகிறது. இது இரண்டு மாதத்திற்குள் முடிக்கப்படும். விரைவில் வடசென்னை அனல் மின் நிலைய விரிவாக்கபணிக்கு இடம் வழங்கிய கிராம மக்களுக்கு பட்டா வழங்கப்படும் என்றார்.

    • ஒவ்வொரு மனையும் அளவீடு செய்யப்பட்டு கற்கள் நடப்பட்டு பட்டா வழங்குவது முதற்கட்டமாகும்.
    • ஒவ்வொரு வீடும் 320 சதுரடியில் மழை நேரங்களில் தண்ணீர் புகாதபடி உயர்த்தி கட்டப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் செந்தமிழ் நகர் என்னும் விளிம்பு நிலை மக்களுக்காக பட்டா வழங்கி வீடுகள் கட்டும் திட்டம் மாவட்ட நிர்வாகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படு த்தப்பட்டு வருகிறது.

    இதுவரையில் மாவட்டம் முழுவதும் 10 செந்தமிழ் நகர் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டம் 2 கட்டங்களை உள்ளடக்கியது.

    பட்டா கொடுப்பதற்காக தகுதியான இடத்தை நேரடி பேச்சுவார்த்தை அந்த மூலம் தனியாரிடம் இருந்து பெறப்பட்டு அனைத்து அடிப்படை வசதிகளும் குறிப்பாக குடிநீர், நல்ல சாலை, கழிவு நீர் வசதி மற்றும் தெருவிளக்கு வசதிகள் செய்யப்பட்டு ஒவ்வொரு மனையும் அளவீடு செய்யப்பட்டு கற்கள் நடப்பட்டு பட்டா வழங்குவது முதற்கட்ட மாகும்.

    2-வது கட்டமாக ஒவ்வொரு பயனாளிக்கும் நல்ல தரமான வீடுகள் கட்டி கொடுப்பது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

    இதில் முதல் கட்டமாக 10 செந்தமிழ் நகர் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    2-வது கட்டமாக 4 செந்தமிழ் நகரில் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது பூதலூர் ஒன்றியம் புதுக்குடி ஊராட்சியில் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்க ளுக்கு 13 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டது.

    இந்த வீடுகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., ஒன்றியக்குழு தலைவர் செல்லக்கண்ணு ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார்.

    முன்னதாக கலெக்டர் உள்ளிட்டோரை நரிக்குறவர் சமுதாய மக்கள் வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளித்தனர்.

    இந்த வீடுகள் மாவட்ட கலெக்டரின் தன் விருப்பநிதி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கடனுதவி திட்டத்தின் மூலமாகவும் நிறைவேற்றப்ப ட்டுள்ளது. வீடுகளை திறந்து வைத்த பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களிடம் கூறி யதாவது:-

    விளிம்பு நிலை மக்களின் நலனில், மிகுந்த அக்கறை கொண்டு, கடந்த ஆண்டு, அவர்களின் குடியிருப்புக்கு நேராக சென்று, அவர்களோடு உணவு சாப்பிட்டு குறைகளை கேட்டு, நிவர்த்தி செய்வதற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்தார்.

    மேலும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் விளிம்புநிலை மக்களுக்கு சென்றடைய வேண்டும்.

    குறிப்பாக, சாதி சான்றிதழ் போன்ற, அடிப்படை தேவைகளை, நிவர்த்தி செய்ய வேண்டும்.

    அடுத்த கட்டமாக வீடு, மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார்.

    அதன் அடிப்படையில் தற்போது தஞ்சை மாவட்டம் புதுக்குடி கிராமத்தில் 40 சென்ட் நிலத்தை தனியார் ஜனகராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் விலையின்றி இந்த இடத்தை விளிம்பு நிலை மக்களுக்கு அளித்தனர்.

    இதையடுத்து இங்கு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    நல்ல தரமான வீடுகளாக கட்டப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு வீடும் 320 சதுர அடியில் மழை நேரங்களிலே, தண்ணீர் புகாதபடி உயர்த்தி கட்டப்பட்டுள்ளது.

    இந்த 13 வீடுகளும் திறந்து வைக்கப்ப ட்டுள்ளது.

    இதனால், இந்த விளிம்புநிலை மக்கள், மிகவும் மகிழ்ச்சி அடைந்து ள்ளனர். முதல்-அமைச்சரின் இந்த சிறப்பு திட்டத்தில் இந்த வீடுகளை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ, ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் உஷா புண்ணிய மூர்த்தி, பூதலூர் ஒன்றியக் குழுத் தலைவர் அரங்கநாதன், தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொற்செல்வி, ராஜா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்டம் முழுவதும் பத்து செந்தமிழ் நகர்கள் உருவாக்கப்பட்டு உள்ளது.
    • ஒவ்வொரு மனையும் அளவீடு செய்யப்பட்டு கற்கள் நடப்பட்டு பட்டா வழங்குவது முதற்கட்டமாகும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஒன்றியம் அண்ணலகராஹரம் ஊராட்சி முகுந்தநல்லூரில் விளிம்புநிலை மக்களுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாவினை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் கல்யாணசுந்தரம் எம்.பி, அன்பழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.

    பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்ததாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க தஞ்சாவூர் மாவட்டத்தில் செந்தமிழ் நகர் என்ற விளிம்பு நிலை மக்களுக்காக பட்டா வழங்கி வீடுகள் கட்டும் திட்டம் தஞ்சாவூர் மாவட்ட நிர்வா கத்தால் அறிமுகப்ப டுத்தப்பட்டு செயல்படுத்த ப்பட்டு வருகிறது.

    இதுவரையில் மாவட்டம் முழுவதும் பத்து செந்தமிழ் நகர்கள் உருவாக்கப்பட்டு உள்ளது.

    இத்திட்டம் இரண்டு கட்டங்களை உள்ளடங்கியது. முதல் கட்டம் அந்த பட்டா கொடுப்பதற்கான தகுதியான இடங்களை நேரடி பேச்சுவார்த்தை மூலம் தனியாரிடமிருந்து பெறப்பட்டு அனைத்து அடிப்படை வசதிகளும் குறிப்பாக குடிநீர், நல்ல சாலை, கழிவுநீர் வசதி மற்றும் தெருவிளக்கு வசதிகள் செய்யப்பட்டு ஒவ்வொரு மனையும் அளவீடு செய்யப்பட்டு கற்கள் நடப்பட்டு பட்டா வழங்குவது முதற்கட்டமாகும்.

    இரண்டாவதாக ஒவ்வொரு பயனாளிகளுக்கும் நல்ல தரமான வீடுகள் கட்டிக் கொடுப்பது திட்டத்தின் நோக்கம் ஆகும். அந்த வகையில் கும்பகோணம் ஒன்றியம் அண்ணலகராஹரம் ஊராட்சி முகுந்தநல்லூர் விளிம்புநிலை மக்களுக்கு 38 விலையில்லா வீட்டு மனை பட்டா மற்றும் மின் இணைப்பு வழங்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா, கும்பகோணம் ஒன்றிய குழு தலைவர் காயத்ரி அசோக்குமார், தாசில்தார் வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சூரிய நாராயணன், உதவி பொறியாளர்கள் சிவப்பிரகாசம், ஐயப்பன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×