என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "payment dues"
- கட்டண சேவையாக கூகுள் 11 சதவீதத்திலிருந்து 26 சதவீதம் வரை வசூலித்து வந்தது
- சுமார் 3 வருடங்களுக்கும் மேல் தவணை வழங்கினோம் என கூகுள் தெரிவித்தது
இணையதள தேடல் இயந்திரங்களில் (search engines), உலகின் முன்னணியானது அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படும் கூகுள் (Google) நிறுவனத்தின் "கூகுள் தேடல் இயந்திரம்."
உலகெங்கும் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கும் பல நிறுவனங்கள் பயனர்கள் தங்கள் ஸ்மார்போன்களில் பயன்படுத்தும் வகையில் அவர்கள் நிறுவன மென்பொருள் "ஆப்" (app) எனப்படும் செயலிகளை கூகுள் தேடல் இயந்திரத்தின் பதிவிறக்க தளமான "ப்ளே ஸ்டோர்" எனும் தளத்தில் கட்டமைத்து இருந்தன.
ப்ளே ஸ்டோர் ஆப்பிலிருந்து பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் இத்தகைய செயலிகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்காக அந்த நிறுவனங்கள் கூகுளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
கட்டண சேவையாக கூகுள் 11 சதவீதத்திலிருந்து 26 சதவீதம் வரை வசூலித்து வந்தது.
இந்நிலையில் நேற்று, கூகுள் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
கூகுள் நிறுவனம் அறிவித்ததாவது:
எந்த விசாரணை அமைப்புகளோ அல்லது நீதிமன்றங்களோ, கட்டணம் வசூலிக்க கூகுள் நிறுவனத்திற்கு உள்ள உரிமையை தடை செய்யவோ அல்லது ரத்து செய்யவோ இல்லை. எங்களுக்கு உரிமையள்ள தொகையை கேட்டும் இதுவரை தராத பிரபலமான 10 இந்திய நிறுவனங்களின் செயலிக்கள், ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது. இந்த நிறுவனங்களுக்கு சுமார் 3 வருடங்களுக்கும் மேல் தவணை வழங்கினோம்; ஆனால், அவை கட்டணத்தை கட்ட தவறின. எனவே, அவற்றை நீக்கி விட்டோம்.
இவ்வாறு கூகுள் தெரிவித்துள்ளது.
ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட செயலிகளில், இந்தியாவின் பிரபலமான வேலை தேடுவோருக்கான செயலியான "நவுக்ரி.காம்" (naukri.com), ரியல் எஸ்டேட் சேவைக்கான செயலியான "நைன்டிநைன் ஏக்கர்ஸ்.காம்" (99acres.com), திருமண சேவைக்கான "பாரத்மேட்ரிமோனி.காம்" (bharatmatrimony.com) மற்றும் "ஷாதி.காம்" (shaadi.com) உள்ளிட்டவை அடங்கும்.
பாரத் மேட்ரிமோனி நிறுவனர் முருகவேல் ஜானகிராமன் (Murugavel Janakiraman), "இது இந்திய இணைய சேவை காலகட்டத்தில் ஒரு கருப்பு தினம்" என கூறினார்.
"இந்திய நிறுவனங்களின் செயலிகளுக்கு என பிரத்யேகமான ஒரு "ஆப் ஸ்டோர்" (app store) தேவை" என நவுக்ரி.காம் நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ் பிக்சந்தானி (Sanjeev Bikhchandani) தெரிவித்தார்.
இந்நிறுவனங்கள் கூகுளுக்கு கட்டண பாக்கியை செலுத்தும் வரை, இந்த சேவையை பயன்படுத்துபவர்களுக்கு சிக்கல் நீடிக்கும் என தெரிகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்