search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pennagaram Govt School"

    • வெகுநேரம் முடிந்தும் கேட்டின் பூட்டு திறக்கப்படாமல் இருந்ததால் ஆத்திரமடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் கேட்டின் பூட்டை கற்களை கொண்டு உடைத்தனர்.
    • பள்ளியில் செய்முறை தேர்வு நடைபெற்று வருவதால் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ மாணவிகள் காலை முதலே பள்ளிக்கு வர தொடங்கி விடுகின்றனர்.

    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே தாளப்பள்ளம் (குள்ளனூர்) அரசு மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இப்பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். தருமபுரி ஒகேனக்கல் நெடுஞ்சாலை என்பதால் எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும். இப்பள்ளியில் அரங்காபுரத்தை சேர்ந்த வேலு என்பவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் பள்ளி முடிந்து மாலை 5 மணிக்கு பள்ளியின் கேட்டை தலைமை ஆசிரியர் முன்னிலையில் பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் காலை 8 மணிக்கு கேட்டின் பூட்டை திறக்க வேண்டும். ஆனால் 9 மணியை கடந்தும் கேட்டின் பூட்டு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் கேட்டின் முன்பு குவிந்தனர்.

    வெகுநேரம் முடிந்தும் கேட்டின் பூட்டு திறக்கப்படாமல் இருந்ததால் ஆத்திரமடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் கேட்டின் பூட்டை கற்களை கொண்டு உடைத்தனர். அதனை தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகள் உள்ளே சென்றனர்.

    இப்பள்ளியில் செய்முறை தேர்வு நடைபெற்று வருவதால் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ மாணவிகள் காலை முதலே பள்ளிக்கு வர தொடங்கி விடுகின்றனர். ஆனால் அரசு பள்ளி நிர்வாகமோ மாவட்ட கல்வி துறையோ இது போன்று அலட்சியமாக இருந்து மாணவ மாணவிகளின் எதிர்காலத்தை சிதைத்து விடுகின்றனர்.

    இப்பள்ளிக்கு நீண்ட நாட்களாகவே காவலாளி வேலு காலதாமதமாகவே வந்து பள்ளி திறந்து வைக்கிறார் என்றும், இதுகுறித்து பல முறை தலைமை ஆசிரியர் கண்டித்தும் அலட்சியமாகவே இருந்து வருகிறார் என பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×