search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "People Evacuated"

    கனடாவின் கிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளதையடுத்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். #CanadaFlooding
    மாண்ட்ரியல்:

    வடஅமெரிக்க நாடான கனடாவின் கிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழைபெய்து வருகிறது. உறைந்து கிடந்த பனியும் உருகத்தொடங்கியது.

    இதன் காரணமாக கியூ பெக் மற்றும் நியூ புரூன்ஸ்விக் ஆகிய பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கியூபெக் பகுதியில் ஓடும் செயின்ட் லாரன்ஸ் ஆற்றின் கடை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.

    இதனால் ஒட்டாவா, பியூஸ், கியூபிக் நகரங்களில் வாழும் மக்கள் வெளியேற்றப்பட்டனர். சுமார் 1500 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

    வெள்ளம் பாதித்த பகுதியில் ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நியூபெக்கில் மட்டும் 200 ராணுவ வீரர்களும், ஒட்டாவாவில் 400 பேரும் முகாமிட்டுள்ளனர். இவை தவிர நியூ புரூன்ஸ்விக்கில் 120 கூடுதல் ராணுவ வீரர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

    ஒட்டாவாவில் மழை வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். அவரது காரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. #CanadaFlooding
    உக்ரைனில் ராணுவ ஆயுத கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். #Ukraine
    கிவ்:

    உக்ரைன் நாட்டில் வட செர்னிகிவ் பகுதியில் டிருஷ்பா என்ற கிராமத்தில் ராணுவ ஆயுத கிடங்கு உள்ளது. இது 1700 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.

    அங்கு நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. 6-வது பிரிவு ஆயுத கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் அங்கிருந்த வெடி பொருட்கள் வெடித்து சிதறின. ஒரு நிமிடத்துக்கு ஒன்று வீதம் வெடி பொருட்கள் வெடித்தன.

    இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. நெருப்பு பந்துகள் வானில் எழுந்தன. உடனே தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.


    இந்த தீ விபத்து காரணமாக ராணுவ ஆயுத கிடங்கு உள்ள பகுதிகளில் தங்கியிருக்கும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தோர் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. அதே நேரத்தில் புகை மூட்டத்தில் சிக்கி 60 பேர் மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. #Ukraine
    ×