என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Perambalur accident"
- பலியான கோவிந்தராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
- விபத்துக்கு காரணமான டிப்பர் லாரி டிரைவர் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் தண்ணீர் பந்தல் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(வயது 24). கூலி தொழிலாளி. இவரது மனைவி ரேணுகா(20). நேற்றிரவு இவர்கள் மோட்டார்சைக்கிளில் பண்ணக்காரன்பட்டி திருமண விழாவிற்கு சென்றனர்.
கோவிந்தராஜ் மோட்டார்சைக்கிளை ஓட்டினார், ரேணுகா பின்னால் அமர்ந்திருந்தார். செஞ்சேரி பைபாஸ் ரோட்டில் தனியார் கல்லூரி அருகே சென்றபோது அந்த வழியாக ஒரு டிப்பர் லாரி வந்தது. எதிர்பாராதவிதமாக லாரி கோவிந்தராஜ் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதில் கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ரேணுகா பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினார். இதை அறிந்த அந்த பகுதி மக்கள் விரைந்து வந்து ரேணுகாவை மீட்டு பெரம்பலூர் தலைமை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே ரேணுகா பரிதாபமாக இறந்தார். விபத்தில் கணவன்-மனைவி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பலியான கோவிந்தராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ரேணுகாவின் உடலை உறவினர்கள் வீட்டுக்கு எடுத்து சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்.
விபத்துக்கு காரணமான டிப்பர் லாரி டிரைவர் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
சபரிமலை சீசன் தொடங்கி உள்ளதையடுத்து தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து பஸ், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் யாத்திரை சென்று வருகிறார்கள்.
அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தாலுகா கொளம்பாக்கம் மற்றும் மதுராந்தகம் பகுதியை சேர்ந்த ஐய்யப்ப பக்தர்கள் 6 பேர் ஒரு காரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சபரிமலைக்கு புறப்பட்டனர். காரை செய்யூரை சேர்ந்த கணேசன் (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார்.
வழியில் பல்வேறு கோவில்களுக்கு சென்ற அவர்கள் நேற்று ஐய்யப்பனை தரிசனம் செய்தனர். இதையடுத்து நேற்று மாலை அவர்கள் மீண்டும் ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர். நள்ளிரவில் திருச்சி வந்தடைந்த அவர்கள் சற்று ஓய்வெடுத்துவிட்டு, இன்று அதிகாலை அங்கிருந்து கிளம்பினர்.
இன்று அதிகாலை 4 மணி அளவில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூர் பிரிவு பாதை அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த மைல் கல் மீது வேகமாக மோதியது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தாலுகா கொளப்பாக்கத்தை சேர்ந்த ஆனந்த் (27), சூர்யா (40), ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் கொளப்பாக்கத்தைச் சேர்ந்த ரமேஷ் (50), மதுராந்தகத்தை சேர்ந்த செல்வமணி (25), லட்சுமணன் (30), கார் டிரைவர் கணேசன் (40) ஆகியோர் பலத்த காயமடைந்து பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து மங்களமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சபரிமலைக்கு சென்று திரும்பிய பக்தர்கள் விபத்தில் பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை வேளச்சேரி மற்றும் கோட்டூர்புரத்தை சேர்ந்தவர்கள் ராஜேஷ் குமார், ராஜா, விஜயக்குமார், வின்சன்ட் தேவன், ரோச் (வயது 45) ஆகிய 5 பேரும் நெல்லையில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டத்தில் பங்கேற்று விட்டு காரில் சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
வின்சென்ட் தேவன் காரை ஓட்டிச்சென்றார். அந்த கார் நேற்று காலை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே மங்களமேடு என்ற இடத்தில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ரோச் என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 4 பேரும் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் மங்களமேடு போலீசார் விரைந்து சென்று 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் சாத்தனார் தெருவை சேர்ந்த ஒரு குடும்பத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 62). இவர் சமீபத்தில் புதிய ஆம்னி வேன் ஒன்றை வாங்கினார். அந்த வாகனத்திற்கு பூஜை போடுவதற்காக கோவிலுக்கு செல்ல முடிவெடுத்தார்.
இதையடுத்து நடராஜன் மற்றும் அவரது உறவினர்கள் உள்பட மொத்தம் 8 பேர் கடந்த 22-ந்தேதி காலை ஆத்தூரில் இருந்து புதிய வேனில் புறப்பட்டனர். வேனை உறவினரான மனோஜ்குமார் (20) ஓட்டினார்.
முதலில் சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கோவிலுக்கு சென்றனர். அங்கு தரிசனத்தை முடித்துவிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வந்தனர். நேற்று பகல் முழுவதும் மதுரையில் உள்ள பல்வேறு இடங்களுக்கு சென்றுவிட்டு மீண்டும் அவர்கள் திருச்சி வழியாக சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.
தொடர் பயணத்தால் ஏற்பட்ட களைப்பை போக்க திருச்சியை அடுத்த டோல்கேட் அருகே வாகனத்தை நிறுத்தி ஓய்வெடுத்தனர். பின்னர் இன்று அதிகாலை எழுந்த அவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.
காலை 4 மணியளவில் அவர்களது வேன் பெரம்பலூர் மாவட்டம் எசனை மாரியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் காற்று பலமாக வீசியது. இதில் அந்த வேன் சாலையில் சற்று அலைக்கழிக்கப்பட்டது.
இதையடுத்து வேனை நிறுத்த டிரைவர் மனோஜ்குமார் முயற்சி செய்தார். ஆனால் பலனளிக்காமல் வேமாக சென்ற வேன் சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதியது.
இதில் வேனின் இடிபாடுகளுக்குள் சிக்கி ஜெயரெத்தினம் (73), அவரது மகன் ராஜா (53), முருகன் (48), அவரது சகோதரர் நடராஜன் (68) ஆகிய 4 பேரும் பலியானார்கள்.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பெரம்பலூர் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் காருக்குள் சிக்கி உயிருக்கு போராடிய காயத்ரி, சுகுணா, யோகதர்ஷினி, டிரைவர் மனோஜ்குமார் ஆகியோரை மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்சு மூலம் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். புதிய வாகனத்திற்கு பூஜை போட சென்றவர்கள் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அவர்களது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்