என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "perambalur collector office"
- திமுக-வினரைத் தவிர வேறு யாரிடமும் ஒப்பந்தப் புள்ளி பெறக்கூடாது என்று மிரட்டி அராஜகத்தில் ஈடுபட்டதாக, அனைத்து ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வந்துள்ளன.
- வியாபாரிகள், தொழிலதிபர்கள், அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரை மிரட்டி அராஜகத்தில் ஈடுபடுவது தொடர்கதையாகிவிட்டது.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று கல்குவாரிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்பட்ட நிகழ்வு நடைபெற்றுள்ளது. போக்குவரத்து மந்திரியின் உதவியாளர் மற்றும் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளர் மற்றும் திமுக நிர்வாகிகள் என்ற பெயரில் சுமார் 300 குண்டர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து கல்குவாரி டெண்டரை தங்களுக்கே தர வேண்டும் என்றும், திமுக-வினரைத் தவிர வேறு யாரிடமும் ஒப்பந்தப் புள்ளி பெறக்கூடாது என்றும் மிரட்டி அராஜகத்தில் ஈடுபட்டதாக, அனைத்து ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வந்துள்ளன.
இத்தனை களேபரம் நடந்தும், காவல் துறை உயர் அதிகாரிகளோ, மாவட்ட ஆட்சியரோ சம்பவ இடத்திற்கு விரைந்து வரவில்லை. அராஜகத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வியாபாரிகள், தொழிலதிபர்கள், அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரை மிரட்டி அராஜகத்தில் ஈடுபடுவது தொடர்கதையாகிவிட்டது.
இத்தகைய வன்முறைச் செயல்களுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். அராஜகத்தில் ஈடுபட்டு வருபவர்களைக் கட்டுப்படுத்தத் தவறிய தி.மு.க.வுக்கு, வருகின்ற பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் விளைச்சல் பாதிக்கப்பட்ட மக்காசோள பயிருடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜாசிதம்பரம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நீலகண்டன், நிர்வாகிகள் வேணுகோபால், செல்லதுரை, வரதராஜன், புஷ்பராஜன், மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கரும்பு விவசாயிகள் சங்க மநில துணை செயலாளர் ராஜேந்திரன், தமிழக ஏரி மற்றும் ஆற்றுநீர்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விசுவநாதன் உட்பட பலர் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினர்.
இதில் அமெரிக்கன்படை புழு தாக்குதலினால் 50 சதவீதத்திற்கு மேல் விளைச்சல் பாதிக்கப்பட்ட மக்கா சோளத்திற்கு வறட்சியால் காய்ந்துபோன கரும்புக்கும் பிரதம மந்திரி வேளாண் காப்பீடு திட்டத்தின் பயிர் காப்பீடு செய்த மற்றும் பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். படைப்புழு தாக்கத்தை உடனடியாக கட்டுப்படுத்தவேண்டும்.
மக்காசோளத்தில் படைப்புழு தாக்கத்தின் காரணமாக அருகில் சாகுபடி செய்துள்ள வெங்காயம், நெல், கரும்பு, பருத்தி உள்ளிட்ட பயிருக்கும், அதே படைப்புழு தாக்கம் ஏற்படாமல் ஆய்வு செய்து படைப்புழுவினால் கட்டுப்படுத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், பிரதம மந்திரி வேளாண் பயிர் காப்பீடு திட்டத்தின் கரும்புக்கு காப்பீடு செய்த விவசாயிகளுக்கும், காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கும் காய்ந்து போன கரும்பு பற்றி கணக்கு எடுத்து நஷ்ட ஈடாக ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் தமிழக அரசு இயற்கை இடர்பாடு நிதியிலிருந்து வழங்க வேண்டும் என கோஷமிட்டபடி, படைப்புழு தாக்குதால் விளைச்சல் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிருடன் சாலையில் அமர்ந்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மாவட்ட விளையாட்டு மைதானம், வேளாண்மை துறை அலுவலகம், வனத்துறை அலுவலகம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் அலுவலகம் உள்பட பல்வேறு அரசுத்துறை அலுவலகங்கள் உள்ளது. மேலும் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசத்துறை அலுவலகங்கள் இயங்கி வருகின்றனர்.
மேற்கண்ட அலுவலகங்களுக்கு பொதுமக்கள், அங்கு பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் செல்வதற்கு கலெக்டர் அலுவலக வளாக நுழைவு வாயிலின் வழியே தான் பிரதான பாதையாக பயன்படுத்தி வருவார்கள். இதனால் கலெக்டர் அலுவலக வளாக நுழைவு வாயிலின் கதவுகள் பகல் நேரங்களில் எப்போதும் திறந்தே கிடக்கும். இரவு நேரங்களில் அடைக்கப்படுவது வழக்கம். அரசு விடுமுறை நாட்களிலும் கூட கலெக்டர் அலுவலக வளாக நுழைவு வாயிலின் கதவுகள் பகல் நேரங்களில் திறந்திருக்கும். ஆனால் நேற்று நுழைவு வாயிலின் கதவுகள் அடைக்கப்பட்டு பூட்டுகள் போடப்பட்டிருந்தன.
நுழைவு வாயில் அருகே நடந்து செல்வதற்கு வசதியாக வழியின் கதவுகள் மட்டுமே திறந்திருந்தன. பிரதான நுழைவு வாயிலின் கதவுகள் அடைக்கப்பட்டிருந்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், விளையாட்டு மைதானத்திற்கு விடுமுறை நாட்களிலும் கூட அலுவலகத்தில் முக்கிய கோப்புகளை பார்வையிட கார், மோட்டார் சைக்கிள்களில் வரும் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளே செல்ல முடியாமல் தவித்தனர். பின்னர் அவர்கள் திரும்பி மாற்று வழியில் தங்களது அலுவலகங்களுக்கு சிரமத்துடன் சென்றனர். எப்போதும் பகல் நேரங்களில் திறந்திருக்கும் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலின் கதவுகள் ஏன் நேற்று அடைக்கப்பட்டது என்பது அரசு அதிகாரிகளுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்