search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Perambalur nurses protest"

    தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் பெரம்பலூர் ஆட்சியரகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    பெரம்பலூர்:

    தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் பெரம்பலூர் ஆட்சியரகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் சகுந்தலா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், நீதிமன்ற உத்தரவின்படி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இடமாறுதல் ஆணை பெற்று 8 மாதங்களாகியும் விடுவிக்கப்படாத செவிலியர்களை உடனே விடுவிக்க வேண்டும். அனைவருக்கும் ஏற்புடைய ஒரே மாதிரியான சீருடை வழங்கிட வேண்டும். சங்க மாநில நிர்வாகிகள் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசின் வழிகாட்டுதல்படி பட்டய, பட்டப்படிப்பு முடித்த செவிலியர்களை பணியமர்த்த வேண்டும்.

    பாகுபாட்டை களைந்து அனைத்து மகளிருக்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு கிடைக்க வழிவகை செய்திட வேண்டும். பணியில் சேர்ந்த நாள் முதல் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    மாவட்டச்செயலாளர் ஆனந்த், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் குமரிஅனந்தன், முன்னாள் மாவட்ட தலைவர் ஆளவந்தார், தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சிவக்குமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கினர்.

    ஆர்ப்பாட்டத்தில், சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் ராஜ்மோகன், சுகாதார ஆய்வாளர் சங்க மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம், நெடுஞ்சாலை பணியாளர் சங்க மாவட்டத்தலைவர் சுப்ரமணியன் உள்பட செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் பலர் பங்கேற்றனர். மாவட்டத் துணைத் தலைவர் ஜெயசித்ரா வரவேற்றார். சங்க நிர்வாகி சரண்யா நன்றி கூறினார்.
    ×