search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Periyar Dam crossed 137 feet"

    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • ரூல்கர்வ் முறைப்படி அணையில் இருந்து கேரளாவுக்கு உபரி நீர் திறப்பதை தவிர்க்க தமிழக பகுதிக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வைகை அணையில் தேக்கப்பட்டது.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 137.35 அடியாக உள்ளது. வரத்து 2497 கன அடியாகவும், திறப்பு 1867 கன அடியாகவும் உள்ளது. நீர் இருப்பு 6458 மி.கன அடியாக உள்ளது.

    152 அடி உயரம் உள்ள முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரை தேக்கிகொள்ள வும், பேபி அணையை பலப்படுத்திய பின்பு 152 அடி வரை தண்ணீைர தேக்கிக் கொள்ளவும் கடந்த 2014-ம் ஆண்டு மே 7ந் தேதி உச்சநீதிமன்றம் உத்தர விட்டது. அதே ஆண்டில் நவம்பர் 21, 2015-ல் டிசம்பர் 7, 2018ல் ஆகஸ்ட் 16 ஆகிய தேதிகளில் அணையின் நீர்மட்டம் 142 அடிக்கு தேக்கப்பட்டது.

    இந்நிலையில் கேரள அரசு கிளப்பிய சர்ச்சையால் ரூல்கர்வ் முறையை மத்திய நீர் வள ஆணையம் அறிவித்தது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் பலத்த மழை மற்றும் வெள்ள ப்பெருக்கு காலத்தில் 10 நாட்களுக்கு ஒருமுறை நீர்தேக்கும் அளவுக்கு கால நிர்ணய அட்டவணை தயார் செய்யப்பட்டது.

    அதன்படி செப்டம்பர் 1ந் தேதி முதல் 10ந் தேதி வரை 140.90 அடி வரையும், செப்டம்பர் 11ந் தேதி முதல் 20ந் தேதி வரை 142 அடி வரையிலும் தண்ணீர் தேக்க அனுமதி க்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 21ந் தேதியில் இருந்து அணையின் நீர்மட்டத்தை படிப்படியாக குறைத்து நவம்பர் 30ந் தேதிக்கு பின்னர் மீண்டும் 142 அடி வரை தண்ணீர் தேக்கவும் அனுமதிக்கப்பட்டு ள்ளது.

    கடந்த ஆகஸ்ட் 5ந் ேததி பெரியாறு அணையின் நீர்மட்டம் 136.95 அடியாக இருந்தபோது அணையில் இருந்து கேரள பகுதிக்கு உபரிநீர் திறக்கப்பட்டது. இதனால் ரூல்கர்வ் முறைப்படி அணையில் இருந்து கேரளாவுக்கு உபரி நீர் திறப்பதை தவிர்க்க தமிழக பகுதிக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வைகை அணையில் தேக்கப்பட்டது.

    தற்போது அணையின் நீர்மட்டம் 137 அடிைய கடந்துள்ளதால் செப்டம்பர் 10ந் தேதி வரை 140.90 அடியாக தேக்க நடவடிக்கை எடுக்கவும் அதனைத் ெதாடர்ந்து 142 அடி வரை ேதக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    வைகை அணையின் நீர்மட்டம் 70.70 அடியாக உள்ளது. வரத்து 2220 கன அடி. திறப்பு 2360 கன அடி இருப்பு 6013 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி. வரத்து 460 கனஅடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.54 அடி. வரத்து 111 கனஅடி. திறப்பு 3 கன அடி.

    பெரியாறு 22, தேக்கடி 9.2, உத்தமபாளையம் 1.2, வீரபாண்டி 3.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    ×