search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Permit to build houses on rainwater harvesting"

    • மழைநீர் சேகரிப்பு ெதாட்டி, 2 மரக்கன்றுகள் நட்டால்தான் வீடு கட்ட அனுமதி வழங்கப்படும்.
    • ஊராட்சி மன்ற தலைவரின் முயற்சிக்கு பாராட்டுகள் குவிகின்றன.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கல்லல் அருகே சொக்கநாதபுரம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றி வரு பவர் கண்ணன். இவர் பத வியேற்ற மூன்றரை வருட காலத்தில் ஊராட்சிக்குட்பட்ட முத்தனங்கோட்டை, கத்தப் பட்டு, பைக்குடிபட்டி, புத்த டிபட்டி, முத்துப்பட்டினம், ஆலகுத்தான்பட்டி, கோவில் பட்டி, சொக்கநாதபுரம் உள் ளிட்ட பல்வேறு கிராமங்க ளில் சுமார் 50 ஏக்கர் பரப்ப ளவுக்கு தரிசு நிலமாக இருந்து வந்த வறண்ட பூமியை கிராம மக்கள் மற்றும் 100 நாள் பணியாளர்கள் உதவியோடு அரசுக்கு வருவாயீட்டும் வகை யில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு மிகப்பெரிய சோலை யாக மாற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    இவர் மேற்கொண்ட இந்த முயற்சியினால் சுமார் எட்டு இடங்களில் அரசுக்கு சொந்த மான தரிசு நிலங்களில் தற்ச மயம் முந்திரி, மா, பலா, நாவல், எலுமிச்சை போன்ற பலன் தரும் பழவகை மரக்கன் றுகளையும், ரோஜா, மல் லிகை, செம்பருத்தி, அழகு ராணி, ஸ்பீக்கர் பூ, டேபிள் ரோஜா, இட்லிப்பூ, உன்னிப்பூ போன்ற பலதரப்பட்ட பூ செடிகளையும் பதியம் (நர்சரி) செய்தும் பெங்களூரு, ஐதரா பாத் போன்ற பகுதிகளிலிருந்து விலைக்கு வாங்கியும் நடவு செய்து பராமரித்து வருகிறார்.

    மேலும் இவரின் இத்தகைய விடாமுயற்சியை கண்டு மாவட்ட கலெக்டரும், திட்ட இயக்குனரும் நேரில் சென்று பார்வையிட்டு பாராட்டிய தோடு தொடர்ந்து இவரின் முயற்சிக்கு ஆக்கமும் ஊக்க மும் அளித்து வருகின்றனர்.

    இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் கூறுகையில், நான் மன்ற தலைவராக பொறுப்பேற்கும் போது இக்கிராமத்தைச் சுற்றி யுள்ள தரிசு நிலங்களில் புளிய மரக்கன்றுகள் மட்டும் நடவு செய்யப்பட்டு முறை யான பராமரிப்பு இல்லாத நிலையில் காணப்பட்டது. எனக்கு சிறுவயதில் இருந்து விவசாயத்தின் மீது அதீத நாட்டம் உண்டு. இதனால் எனது கிராமத்தை வறண்ட பகுதியில் இருந்து மீட்டெடுக்க வேண்டிய எண்ணம் உருவா னது.

    இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்கை யில் அவர்கள் மாவட்டத்தி லேயே என்னையும் என் கிராமத்தையும் மட்டும் தேர்வு செய்து வேளாண் பயிற்சி பெறுவதற்காக அண்டை மாநிலமான பெங்களூருக்கு இது குறித்த பயிற்சி பெற என்னை அனுப்பி வைத்தனர். அங்கு வறண்ட பூமியில் விவ சாயம் மேற்கொள்வது குறித் தும், நீர் மேலாண்மை குறித் தும் எனக்கு பயிற்சி அளிக்கப் பட்டது.

    இதற்கு ஊக்கம் அளித்தால் வருங்காலத்தில் சிவகங்கை மாவட்டமானது ஒரு செழிப்பு மிக்க விவசாய மண்டலமாக மாறுவதில் எந்த ஒரு ஆச்சரி யமும் இல்லை என்றார்.

    மேலும் என்னுடைய ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிதாக வீடு கட்டுபவர்கள் கட்டாயமாக மழை நீர் சேகரிப்பு தொட்டியும், இரண்டு மரக்கன்றுகளை யும் நட்டால் மட்டுமே மன்ற நிர்வாகத்தில் இருந்து அதற் கான அனுமதி வழங்கி வருகி றோம். தொடர்ந்து அரசுக்கு முன் வைக்கும் கோரிக்கையாக வருடம் முழுவதும் விவசாய மேற்கொள்ளவும், மரக்கன்று களை நட்டு பராமரிக்கவும் தங்களது கிராமத்திற்கு ஆரம்ப காலத்தில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் வந்த வரத்து கால்வாயை மீண்டும் தூர்வாரி தருமாறு கிராம மக்க ளின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.

    ×