search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Petrol Diesel price rises. சென்னை"

    சென்னையில் 5 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை 18 காசு உயர்ந்து ரூ.85.87-க்கு விற்பனை செய்யப்பட்டது. டீசல் விலை 10 காசு அதிகரித்து 78 ரூபாய் 20 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. #PetrolDieselPrice #PetrolPriceHike
    சென்னை:

    சென்னையில் நேற்று பெட்ரோல் விலை 18 காசு உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.85.87-க்கு விற்பனை செய்யப்பட்டது. 5 நாட்களாக மாற்றம் இல்லாமல் இருந்த டீசல் விலையானது நேற்று 10 காசு உயர்ந்து ஒரு லிட்டர் டீசல் 78 ரூபாய் 20 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் இந்திய ரூபாய் மதிப்பின் ஏற்ற இறக்கத்தால் பெட்ரோல், டீசல் விலையானது கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் டீசல் விலை மட்டும் கடந்த 18-ந் தேதி முதல் 5 நாட்களாக மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் டீசல் 78 ரூபாய் 10 காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.



    இந்த நிலையில் டீசல் விலையானது 5 நாட்களுக்கு பிறகு நேற்று 10 காசு அதிகரித்து ஒரு லிட்டர் டீசல் 78 ரூபாய் 20 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் விலையானது நேற்று 18 காசு அதிகரித்தது.

    அதன்படி, நேற்று முன்தினம் 85 ரூபாய் 69 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்று 85 ரூபாய் 87 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. பெட்ரோல் விலையை பொறுத்தவரையில் இன்னும் 13 காசுகள் அதிகரித்தால் 86 ரூபாயை எட்டும் நிலையில் உள்ளது.

    தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் பெரிதும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக பெரும்பாலான வாகன ஓட்டிகள் தங்கள் பயண திட்டங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி சொந்த வாகனங்களில் பயணிப்பதை குறைத்து, பொது வாகன பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  #PetrolDieselPrice #PetrolPriceHike 
    ×