search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "photos of kids"

    ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில், குழந்தைகளின் நிர்வாண படங்கள் பெருமளவில் காணப்படுவதாக புகார் எழுந்ததையடுத்து கடந்த 3 மாதங்களில் 87 லட்சம் குழந்தை நிர்வாண படங்கள் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Facebook
    சான்பிரான்சிஸ்கோ :

    உலகமெங்கும் உள்ள இணையதள ஆர்வலர்களின் ஆதரவைப் பெற்றுள்ள ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில், குழந்தைகளின் நிர்வாண படங்கள் பெருமளவில் காணப்படுவதாக புகார் எழுந்தது. இதைக் கண்ட உபயோகிப்பாளர்கள் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனத்தின் கவனத்துக்கு எடுத்துச்சென்றனர்.

    அது மட்டுமல்ல, காமன்ஸ் ஊடகக்குழுவின் தலைவர் டேமியன் காலின்ஸ், இதற்காக ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தை கடுமையாக சாடினார். இது தொடர்பாக பி.பி.சி., ஒரு ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில், ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் ரகசிய குழுக்களால் குழந்தைகளின் ஆபாச படங்கள் பகிர்ந்து கொள்ளப்படுவது தெரிய வந்தது.



    இதையடுத்து கடந்த 3 மாதங்களில் 87 லட்சம் குழந்தை நிர்வாண படங்கள் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், புதிதாக இதற்கெனவே அந்த நிறுவனம் ஒரு மென்பொருள் (சாப்ட்வேர்) உருவாக்கி உள்ளது. அந்த மென்பொருள், ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்துக்கு எந்தவொரு குழந்தையின் நிர்வாண படங்களோ, ஆபாச படங்களோ வந்தால், அதைத் தானாகவே நீக்கி விடும் என்பது குறிப்பிடத்தக்கது. #Facebook 
    ×