search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pimples natural treatment"

    பரு வருவதற்கான அடிப்படைக் காரணத்தை அறிந்து அதற்கான முறையான வழிமுறைகளை மருத்துவர் ஆலோசனையுடன் துவங்கினால் நிரந்தரமாக இப்பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம்.
    மன அழுத்தம் இருப்பவர்களுக்கு ஹார்மோன் இன்பேலன்ஸ் காரணமாக முகப்பரு வருவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. மலச்சிக்கல் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனை இருப்பவர்களுக்கும், பொடுகு பிரச்சனை உள்ளவர்களுக்கும் முகப்பரு வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. பொடுகு மூலம் வரும் பருக்கள் நெற்றி, கழுத்து, முதுகுப் பகுதிகளில் பொறிப்பொறியாக வரும்.

    எனவே முதலில் எந்தக் காரணத்தினால் தனக்கு பரு வருகிறது என்பதைக் கண்டுபிடித்தல் மிகவும் முக்கியம். பரு வருவதற்கான அடிப்படைக் காரணத்தை அறிந்து அதற்கான முறையான வழிமுறைகளை மருத்துவர் ஆலோசனை அல்லது அழகுக்கலை நிபுணர்கள் ஆலோசனையோடு துவக்கத்திலே செய்யத் துவங்கினால் நிரந்தரமாக இப்பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம்.

    * விரல்களைக் கொண்டு பரு வந்த இடத்தை அடிக்கடி தொடுதல் கூடாது.

    * பருவினை அழுத்தி எடுக்கும் முறை தவறானது.

    * பருவை விரலால் அழுத்தத் துவங்கினால் அந்த இடம் தொற்றுக்குள்ளாகி சருமத்தில் பள்ளம் தோன்றத் துவங்கும். பிறகு பள்ளம் விழுந்த தோற்றம் முகத்தில் நிர‌ந்தரமாகிவிடும்.

    * பரு உள்ளவர்கள் எலுமிச்சை, தக்காளி, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் அமிலம் அதிகம் உள்ள பழங்களை முகத்தில் ஃபேஸ் பேக்காகப் போடுதல் கூடாது.

    முகப்பரு வந்துவிட்டால் சுயமாக எதையாவது செய்து, சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாமல், சரும மருத்துவர்கள் அல்லது அழகு நிலையங்களில் இதற்கென முறையான பயிற்சி பெற்ற அழகுக் கலை வல்லுநர்களை அணுகி, பருவில் இருக்கும் மார்க்கை முறைப்படி மெஷின் வைத்தும் எடுக்கலாம்.
    ×