search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pineapple Rice"

    பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவிற்கு கலந்த சாதமாக செய்து கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள். இன்று பைனாபிள் புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - 1 கப்
    அன்னாசிப் பழத் துண்டுகள் (தோல் சீவி நறுக்கியது) - 1 கப்
    அன்னாசி பழச்சாறு - அரை கப்
    வெங்காயம் - அரை கப்
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    சர்க்கரை, கரம் மசாலாத் தூள், மிளகாய்த் தூள் - தலா அரை டீஸ்பூன்
    பட்டை, பிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ, ஏலக்காய் - தலா 1
    முந்திரி, பாதாம் - தலா 10
    எண்ணெய் - அரை டேபிள் ஸ்பூன்
    நெய் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கு
    தண்ணீர் - முக்கால் கப்



    செய்முறை :

    வெங்காயத்தை மெல்லிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    பாசுமதி அரிசியைக் கழுவி 15 நிமிடம் ஊறவையுங்கள்.

    குக்கரில் எண்ணெய் ஊற்றி, பட்டை, பிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ, ஏலக்காய் ஆகியவற்றைப் போட்டுத் தாளித்த பின்னர் வெங்காயம், பைனாப்பிள் இரண்டையும் சேர்த்து நன்றாக வதக்குங்கள்.

    அடுத்து அதில் மஞ்சள் தூள், கரம் மசாலாத் தூள், மிளகாய்த் தூள் ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்குங்கள்.

    அடுத்து அதில் அரிசியைச் சேர்த்து நன்றாகப் புரட்டுங்கள்.

    உப்பு, சர்க்கரை, அன்னாசிச் சாறு, தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து குக்கரை மூடுங்கள்.

    இரண்டு விசில் வந்தவுடன் இறக்கிவிடுங்கள்.

    விசில் போனவுடன் நெய்யில் முந்திரி, பாதாம் வறுத்துப் போட்டுக் கிளறுங்கள்.

    வெங்காயப் பச்சடியுடன் சேர்த்துப் பரிமாறுங்கள்.

    பைனாபிள் புலாவ் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×