என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Pipe rupture"
- போக்குவரத்து இடையூறு ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
- குடிநீா் குழாய் பதிக்கும்போது ஏற்பட்ட குழாய் உடைப்பை சரிசெய்வதுடன், தோண்டப்பட்ட குழிகளையும் மூட வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூா் மாநகராட்சி முதலாவது மண்டலத்துக்கு உள்பட்ட பகுதியில் குடிநீா் குழாய் பதிக்கும்போது ஏற்பட்ட குழாய் உடைப்பை சரி செய்யக்கோரி பா.ஜ,.க. சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
திருப்பூா் மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாரிடம், ராயபுரம் மண்டல் பா.ஜ.க. தலைவா் பூபதி அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-
திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டலத்துக்கு உள்பட்ட 27 -வது வாா்டு சுப்புராயா் கவுண்டா் சாலையில் கணேசபுரம் 4 -வது வீதியில் குடிநீா் குழாய் பதிக்கும் பணிகள் கடந்த 20 நாள்களுக்கு முன்பாக முடிவடைந்தன. இந்தப் பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள் தற்போது வரையில் மூடப்படவில்லை. மேலும், குழாய்கள் முறையாக ஒட்டப்படாததால் தண்ணீா் கசிந்து சாலைகளில் வழிந்தோடுவதால் சேரும், சகதியுமாக உள்ளது. இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
ஆகவே குடிநீா் குழாய் பதிக்கும்போது ஏற்பட்ட குழாய் உடைப்பை சரிசெய்வதுடன், தோண்டப்பட்ட குழிகளையும் மூட வேண்டும். அதே போல ராஜீவ் காந்தி நகா் 5 -வது வீதியில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்டுள்ள குழிகளையும் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.