search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pixel 9 Pro Fold"

    • இரட்டை மாத்திரை வடிவ கேமரா கட்அவுட்களுடன் கூடிய அசத்தலான வடிவமைப்பை காட்டுகிறது.
    • பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் மாடல் கூகுள் பிக்சல் 8 ப்ரோவின் வடிவமைப்பை ஒத்திருக்கிறது.

    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கூகுள் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் மற்றும் பிக்சல் 9 ப்ரோவின் வெளியீட்டு விவரங்களை கூகுள் ஒருவழியாக வெளியிட்டது. கூகுள் நிறுவனம் பிக்சல் 9 ப்ரோ மற்றும் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் ஸ்மார்ட்போன்களை ஆகஸ்ட் 13-ந் தேதி வெளியிட உள்ளது.

    கூகுள் எக்ஸ் தளத்தில், வரவிருக்கும் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் அதிகாரப்பூர்வ போஸ்டரை வெளியிட்டது. டீஸர்களின் படி புது சாதனங்கள் ஜெமினி ஏஐ வசதி கொண்டிருக்கும் என்பதை காட்டுகிறது.

    அதிகாரப்பூர்வ டீசர்களின் படி இரட்டை மாத்திரை வடிவ கேமரா கட்அவுட்களுடன் கூடிய அசத்தலான வடிவமைப்பை காட்டுகிறது. கேமராக்கள் பின்புற பேனலின் மேல்-இடது மூலையில் செவ்வக வடிவம் கொண்ட பகுதியில் வைக்கப்பட்டுள்ளன.

    இந்த நிகழ்வானது இந்திய நேரப்படி ஆகஸ்ட் 13 ஆம் தேதி இரவு 10.30-க்கு நடைபெற உள்ளது. இந்த தகவலைத் தவிர, வரவிருக்கும் ஸ்மார்ட்போன்கள் பற்றிய வேறு எந்த தகவலையும் கூகுள் வெளியிடவில்லை. இருப்பினும், ஆன்லைனில் புது சாதனங்கள் குறித்து பல தகவல்கள் வெளியாகி உள்ளன.

    டீசரில் ஸ்மார்ட்போனின் உள்பக்க திரையில் கேமராவை வெளிப்படுத்தவில்லை. என்றாலும், திரையின் இடது பக்கத்தில் பஞ்ச்-ஹோல் ரக செல்பி கேமராவைக் கொண்டிருக்கும் என்று கூறப்பிடுகிறது.

    பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் மாடல் அப்சிடியன் (Obsidian) மற்றும் போர்சிலைன் (Porcelain) கலர்களில் கிடைக்கிறது. இதன் எதிர்பார்க்கப்படும் விலை 256 GB மாடலுக்கு EUR1,899 (தோராயமாக ரூ. 1,68,900) மற்றும் 512 GB மாடலுக்கு EUR 2,029 (தோராயமாக ரூ. 1,80,500) ஆகும்.

    பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் மாடல் கூகுள் பிக்சல் 8 ப்ரோவின் வடிவமைப்பை ஒத்திருக்கிறது. இதன் பேனலில் டிரிபிள் ரியர் கேமராக்கள், ஃபிளாஷ் மற்றும் லேசர் ஆட்டோஃபோகஸ் கொண்ட சிறிய கேமரா உள்ளது.

    வரவிருக்கும் பிக்சல் 9 ப்ரோ மற்றும் பிக்சல் 9 ப்ரோ XL ஆகியவை ஒரே மாதிரியான மூன்று 50MP பின்புற கேமரா அமைப்பை பகிர்ந்து கொள்ளும். ஆனால் திரை அளவு மற்றும் பேட்டரி திறன் ஆகியவற்றில் வேறுபடும். இது பயனர்களுக்கு நிலையான மற்றும் பெரிய மாடலுக்கு இடையே தேர்வை வழங்குகிறது.

    பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் அப்சிடியன் (Obsidian), போர்சிலைன் (Porcelain), ஹசல் (Hazel) சேஜ் கிரீன், (sage green) மற்றும் பின்ர் (Pink) போன்ற கலர்களில் கிடைக்கிறது.

    இதன் எதிர்பார்க்கப்படும் விலைகள் 128 ஜிபிக்கு EUR1,099 (தோராயமாக ரூ. 97,500), 256 ஜிபிக்கு EUR1,199 (தோராயமாக ரூ. 1,06,400), மற்றும் 256 ஜிபிக்கு EUR1,329 (தோராயமாக ரூ. 1,18,000). இதுதொடர்பான விரிவான தகவல்கள் வெளியீட்டின்போது, கூகுள் பிக்சல் வாட்ச் 3 ஐ வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • இந்த ஸ்மார்ட்போன் இதே பெயரில் தான் விற்பனைக்கு வரும்.
    • இந்த ஸ்மார்ட்போன் கொமெட் என்ற பெயரில் உருவாக்கப்படுகிறது.

    கூகுள் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பிக்சல் 9 ப்ரோ போல்டு எனும் பெயரில் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இதே பெயரில் தான் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

    இது தொடர்பாக வெளியாகி இருக்கும் தகவல்களில் கூகுள் நிறுவனம் 2024 ஆண்டு வெளியாகும் பிக்சல் சாதனங்களின் பெயரை மாற்ற இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதன்படி பிக்சல் 9 மாடல் டோகே எனும் குறியீட்டு பெயரிலும், பிக்சல் 9 ப்ரோ கைமேன் என்ற பெயரிலும், பிக்சல் 9 ப்ரோ XL மாடல் கொமோடோ என்ற பெயரிலும் பிக்சல் 9 ப்ரோ போல்டு மாடல் கொமெட் என்ற பெயரிலும் உருவாக்கப்படுகிறது.

    முன்னதாக கொமெட் பெயரில் உருவாக்கப்படும் ஸ்மார்ட்போன் பிக்சல் போல்டு 2 எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது. தற்போது இந்த சாதனம் பிக்சல் 9 ப்ரோ போல்டு பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. எனினும், இது தொடர்பாக இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.

    பெயரிடும் வழக்கத்தை கூகுள் மாற்றும் பட்சத்தில், அந்நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பிக்சல் 9 சீரிசில் இணைக்கப்படும். இது சாத்தியமாகும் படச்த்தில் பிக்சல் போல்டபில் சாதனங்களில் குறிப்பிடத்தக்க மாற்றமாக அமையும். 

    ×