search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Placement Camp"

    • மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
    • வேலை அளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட நிர்வா கம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து வரும் 30-ந் தேதி ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இம்முகாமை அமைச்சர் சு.முத்துசாமி பங்கேற்று பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார். இவ்வேலை வாய்ப்பு முகா மில் 200-க்கும் மேற்பட்ட தனியார் துறை வேலை அளிப்பவர்கள் கலந்து கொண்டு 10 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட காலிப்பணி யிடங்களுக்கு தங்கள் நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர்.

    8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பிளஸ்-2 தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப் படிப்பு படித்தவர்கள், ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறி யியல் பட்டம் படித்தவர்கள், கணினி இயக்குபவர்கள், ஓட்டுநர்கள், செவிலியர், மருந்தாளுநர் பயிற்சி முடித்தவர்கள் என அனை த்து கல்வித் தகுதியினரும் கலந்து கொள்ளலாம்.

    இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசமானதாகும். இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் மூலம் வேலை வாய்ப்பு பெறுவதற்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில் முனைவோர்களு க்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் குறித்த வழிகாட்டு தல்கள் ஆகியன மேற்கொ ள்ளப்பட உள்ளது.

    வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் நடத்தப்படும் இவ்வேலை வாய்ப்பு முகாம், வேலை நாடுநர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது.

    எனவே ஈரோடு மாவட்ட த்தில் தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடை யுமாறும்,

    இம்முகாமின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார் துறையில் பணிய மர்த்தம் செய்யப்படும் வேலைநாடுநர்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது.

    மேலும் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 0424-2275860, 94990 55942 மின்னஞ்சல்முகவரி: erodemegajobfair@gmail.com வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.

    • கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
    • அமைச்சர் முத்துசாமி பங்கேற்று பணிநியமன ஆணைகளை வழங்க உள்ளார்.

    ஈரோடு:

    டாக்டர். கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு ஈரோடு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து வரும் 12-ந் தேதி கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இம்முகாமில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி பங்கேற்று பணிநியமன ஆணைகளை வழங்க உள்ளார்.

    இவ்வேலை வாய்ப்பு முகாமில் ஈரோடு, கோவை, திருப்பூர், சென்னை, சேலம் ஆகிய மாவட்டங்களில் இரு ந்து 200-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பல்வேறு துறை சார்ந்த, 10,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர்.

    8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பிளஸ்-2 தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப் படிப்பு படித்தவர்கள், ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொ றியியல் பட்டம் படித்தவர்கள், மருத்துவத்துறை சா ர்ந்த செவிலியர்கள், ஆய்வ க உதவியாளர்கள், லேப் டெக்னிசீயன்கள், கணினி இயக்குபவர்கள், ஓட்டுநர்கள் என அனைத்து வித கல்வித் தகுதியினரும் கல ந்து கொள்ளலாம்.

    இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசமானதாகும். இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, அயல்நா ட்டு வேலை வாய்ப்பு நிறுவ னத்தின் மூலம் வேலை வாய்ப்பு பெறுவதற்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனை வோர்களுக்கான ஆலோசனைகள், ஆகியன மேற்கொ ள்ளப்பட உள்ளது.

    வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் நடத்தப்படும் இவ்வேலை வாய்ப்பு முகாம் வேலைநாடு நர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது.

    இம்முகாமின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார்துறையில் பணி யமர்த்தம் செய்யப்படும் வேலைநாடு நர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்ப டமாட்டாது.

    மேலும் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழி ல்நெறி வழிகாட்டும் மைய த்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண்.0424-2275860, 9499055942 அல்லது மின்னஞ்சல் முகவ ரி. erodemegajobfair@gmail.com வாயிலாகவும் தொ டர்பு கொள்ளலாம்.

    எனவே ஈரோடு மாவட்டத்தில் தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார். 

    • தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
    • வேலை அளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறிவழி காட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் 3-ம் வெள்ளிக் கிழமை அன்று தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

    இவ்வேலை வாய்ப்பு முகாமில் பல்வேறு தனியார் துறை வேலை அளிப்பவர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான எழுதப்படிக்க தெரிந்த நபர்கள் முதல் பட்டப் படிப்பு படித்த நபர்கள் வரை மற்றும் டெய்லர்கள், கணினி இயக்குபவர்கள், தட்டச்சர்கள், ஓட்டுநர்கள் போன்ற பணிகளுக்கு தகுதியுள்ள நபர்களை தேர்வு செய்து தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யப்பட்டு வருகின்றனர்.

    இதன் மூலம் மாதந்தோறும் 100-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர். மேலும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்களும் கலந்து கொண்டு திறன் பயிற்சிக்கு தேவையான நபர்களை தேர்வு செய்து பயிற்சி அளித்து வருகின்றனர்.

    அதன்படி வரும் 21-ந் தேதி (வெள்ளிக் கிழமை) தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் காலை 10 மணிக்கு ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறிவழி காட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.

    வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் நடத்தப்படும் இவ்வேலை வாய்ப்பு முகாம் வேலை நாடுநர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது.

    எனவே ஈரோடு மாவட்டத்தில் தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறும்,

    இம்முகாமின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார் துறையில் பணிய மர்த்தம் செய்யப்படும் வேலை நாடுநர்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது என்றும் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

    மேலும் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறிவழி காட்டும் மையத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண்.0424-2275860, மின்னஞ்சல் முகவரி:erodemegajobfair@gmail.com வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.

    • வேலைவாய்ப்பு முகாமில் கல்லூரி மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் துறையை சேர்ந்த 43 மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்பு பெற்றனர்.
    • துறை வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் டெல்டா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன அதிகாரிகளின் கலந்துரையாடல் நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி மற்றும் கிருஷ்ணகிரி, டெல்டா எலக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கல்லூரி வளா கத்தில் கையெழுத்தானது.

    வேலைவாய்ப்பு

    இதில், கல்லூரி இயக்குநர் எஸ். சண்முகவேல், முதல்வர் கே. காளிதாச முருகவேல், டெல்டா எலக்ட்ரானிக்ஸ் தைவான் கிளையின் மனிதவளத்துறை மேலாளர் பால் மற்றும் இந்திய மனிதவளத்துறை அதிகாரி சுவாதி கோயல் ஆகியோர் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.

    தொடர்ந்து நடைபெற்ற வளாக வேலைவாய்ப்பு முகாமில் கல்லூரி மெக்கா னிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் துறையை சேர்ந்த 43 மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்பு பெற்றனர்.

    கலந்துரையாடல்

    முன்னதாக, கல்லூரி முதல்வர் வரவேற்று பேசினார். மின்னியல் மற்றும் மின்னணு பொறி யியல் துறைத்தலைவர் எம். வில்ஜூஸ் இருதயராஜன், எந்திர பொறியியல் துறை தலைவர் எஸ். அய்யாராஜா, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல்துறை தலைவர் எஸ். தமிழ்செல்வி, மற்றும் துறை வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பா ளர்கள் மற்றும் டெல்டா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன அதிகாரி களில் கலந்துரையாடல் நடைபெற்றது.

    முடிவில் கல்லூரி வேலைவாய்ப்பு பிரிவு ஒருங்கிணைப்பாளர் வி. மணிமாறன் நன்றி கூறினார்.

    ஏற்பாடுகளை கல்லூரி இயக்குநர் மற்றும் முதல்வர் ஆகியோர்களின் வழிகாட்டு தலின்படி தகவல் தொழில் நுட்ப பொறியியல்துறை தலைவர் கே. சீனிவாசகன், வேலைவாய்ப்பு பிரிவு ஒருங்கிணைப்பாளர் மற்றும் அனைத்து வேலை வாய்ப்பு துறை ஒருங்கிணைப் பாளர்கள் செய்திருந்தனர்.

    பாலக்கோடு மூகாம்பிகை பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
    பாலக்கோடு, 

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மாதம் பட்டியில் இயங்கிவரும் ஸ்ரீ மூகாம்பிகை பாலிடெக்னிக் கல்லூரி  இறுதியாண்டில் பயிலும் மாணவ ,மாணவிகளுக்கு. சென்னையில் இயங்கி வரும் பிரபலமான ராயல் என்பீல்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவன வேலைவாய்ப்பு முகாம் கல்லூரியில் நடைபெற்றது.  

    இம்முகாமில் லக்ஷ்மி சரஸ்வதி கல்வி அறக்கட்டளையின் சார்பாக பொருளாளர் ராஜா கவுண்டர் முன்னிலை வகித்தார்.  கல்லூரியின் முதல்வர் கந்தசாமி விழாவில் கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்று பேசும்போது, டிப்ளமோ படித்த மாணவர்கள் தங்கள் தனித்திறமையை மேம்படுத்திக்கொண்டு நல்லதொரு எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார். இவ்விழாவில் அறக்கட்டளை செயல் இயக்குனர் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார். 

    ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அலுவலர் பார்த்திபன் தங்கள்  நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் நிறுவனத்தில் பணிபுரியும் போது கடைப்பிடிக்கவேண்டிய விதிமுறைகள் குறித்து அங்கு பணிபுரிவோருக்கு விளக்கினார். வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது. 

    இறுதியாக 42 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் கல்லூரி வேலை வாய்ப்பு அலுவலர் சக்திவேல் நன்றி கூறினார்.
    • தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது.
    • காலை 7 மணிக்கு வந்து நுழைவுப்படிவம் பெற்று வருகை பதிவேட்டில் பதிந்து கொள்ள வேண்டும்.

    மதுரை

    மதுரையில் போலீசார், தீயணைப்பு படை மற்றும் ஊர்க்காவல் படை ஆகியவற்றில் வேலை பார்க்கும் ஊழியர்களின் வாரிசுகளுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை 25-ந் தேதி மற்றும் நாளை மறுநாள் 26-ந்தேதிகளில் நடக்க உள்ளது.

    மதுரை விமான நிலையம் அருகே வலையப ட்டியில் உள்ள நாகரத்தினம் அங்காளம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

    தமிழ்நாடு போலீசார் குடும்பத்தினருக்கான மெகா சிறப்பு வேலை வாய்ப்பு முகாமில் கடந்த ஆண்டு 230 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. 4009 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 1054 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

    எனவே மதுரையில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்கள் மட்டும் நடக்கும் வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விரும்புவோர், காலை 7 மணிக்கு வந்து நுழைவுப்படிவம் பெற்று வருகை பதிவேட்டில் பதிந்து கொள்ள வேண்டும்.

    மேற்கண்ட தகவலை தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. ஆஸ்ரா கர்க், மதுரை சரக டி.ஐ.ஜி பொன்னி, போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    • செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரியில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நாளை மறுநாள் நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் வருகிற 18-ந்தேதி (சனிக்கிழமை) லாந்தை செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் நடக்கிறது.

    அமைச்சர் ராஜ கண்ணப்பன் தலைமையில் நடக்கும் வேலை வாய்ப்பு முகாமில் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு முன்னணி தனியார் நிறுவ னங்கள் கலந்துகொண்டு வேலை நாடுநர்களை தேர்வு செய்ய இருக்கின்றன.

    ராமநாதபுரம் மாவட்ட த்தை சேர்ந்த வேலை வாய்ப்பற்ற 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்களும், ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல் பட்டதாரிகளும், முதுகலை, இளங்கலை பட்டதாரி ஆசிரியர்கள், செவிலியர் மற்றும் லேப் டெக்னீசியன் கல்வித்தகுதியுடைய அனைவரும் இம்முகாமில் கலந்துகொண்டு பயன் பெறலாம்.

    இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள தனியார் நிறுவனங்கள் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது ramnademployment2020@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ, தொடர்பு கொள்ளலாம்.

    இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி யமர்த்தம் செய்யப்படும் நபர்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு எக்கா ரணத்தைக் கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

    எனவே வேலை நாடுநர்கள் தங்களது முழு பயோ டேட்டா, அனைத்து அசல் கல்விச்சான்றுகள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் இத்தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயனடை யலாம்.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

    • 'மெகா' தனியார் வேலைவாய்ப்பு முகாம் - சிக்கண்ணா அரசு கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது.
    • 34 பல்வேறு துறை சார்ந்த வேலைவாய்ப்பு தரும் நிறுவனங்கள் நுாற்றுக்கணக்கில் பங்கேற்கவுள்ளன.

    திருப்பூர் : 

    திருப்பூரில் வரும், 11ம் தேதி நடைபெறும் மெகா வேலை வாய்ப்பு முகாமில், 25 ஆயிரத்துக்கும் மேற்ப ட்டோருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் முயற்சி மேற்கொ ள்ளப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, திருப்பூர் மாநகராட்சி சார்பில் 'மெகா' தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும், 11ம் தேதி காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை, சிக்கண்ணா அரசு கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது.

    தகவல் தொழி ல்நுட்பம், கணினி துறை சார்ந்த நிறுவனங்கள், ஆட்டோமொபைல், மெக்கானிக்கல், கெமிக்கல், ஓட்டல், சுற்றுலா துறை, ஷிப்பிங், போக்குவரத்து, தளவாட உற்பத்தி நிறுவனங்கள், ஜவுளி, வங்கி துறை சார்ந்த நிறுவனங்கள் என, 34 பல்வேறு துறை சார்ந்த வேலைவாய்ப்பு தரும் நிறுவனங்கள் நுாற்றுக்கணக்கில் பங்கேற்க வுள்ளன.

    • கள்ளக்குறிச்சியில் இலவச மாதிரி தேர்வு -வேலை வாய்ப்பு முகாம் கலெக்டர் ஸ்ரீதர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • இளைஞர்கள் இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் செய்தி குறிப்புகளை வெளியிட்டுள்ளார் அதில் கூறியுள்ளதாவது, கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு ப்பணியாளர் தேர்வா ணையத்தால் 7,301 பணியிட ங்களுக்கான (கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர்) டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, இத்தேர்வு வருகிற 24-ம் தேதியன்று நடைபெறவுள்ளது. எனவே, மேற்காணும் போட்டித் தேர்வுக்கு தயாராகும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தினை சேர்ந்த போட்டி தேர்வர்கள் பயனடையும் வகையில் அதற்கான இலவச மாதிரி தேர்வுகள் 10.07.2022 மற்றும் 17.07.2022 ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில் சேலம் மெயின் ரோடு, இந்திலியில் அமைந்துள்ள ஆர்.கே.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை தேர்வுகள் நடைபெறவுள்ளது.

    இந்த மாதிரி தேர்வுகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 விண்ணப்ப நகல் மற்றும் புகைப்படத்துடன் 08.07.2022 அன்று மாலை 5 மணிக்குள் கள்ளக்குறிச்சி, 18/63 நேப்பால் தெருவில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலோ அல்லதுhttp://shorturl.at/fJSZ3 என்ற உரலி வழியாகவோ (கூகுள் பார்ம்) பதிவு செய்து கொண்டு, 10.07.2022 அன்று நடைபெறவுள்ள இலவச மாதிரி தேர்வுகளை எழுதி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள மற்றொரு செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, தனியார்துறை நிறுவனங்கள் மூலம் சிறிய அளவிலான "வேலைவாய்ப்பு முகாம்" மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாதத்தின் இரண்டாம் மற்றும் நான்காம் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் உள்ள முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது பணிக்காலியிடம் மற்றும் கல்வித்தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளதால், பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த ஆண், பெண் ஆகியோர் கலந்துகொள்ள www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் CANDIDATE LOGIN-ல் தங்களது விபரங்களை பதிவு செய்துகொண்டு, இம்முகாமில் கலந்து கொள்ளலாம்.

    இதன் மூலம் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. மேலும், 08.07.2022 அன்று காலை 10.00 மணி முதல் கள்ளக்குறிச்சி நேபால் தெருவில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், சிறு, குறு மற்றும் தனியார் தனியார்துறை நிறுவனங்களில் காலியாகவுள்ள பணியிடங்களை தங்களது நிர்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரிலோதேர்வு செய்யவுள்ளனர். எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை பயன்படுத்தி க்கொள்ளலாம் இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • 5 பேருக்கு வாரிசு அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
    • வேலைவாய்ப்பு முகாமை படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பாக நடத்திட வேண்டும்.

    காங்கயம்:

    காங்கயம் கரூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்தான கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தலைமை தாங்கினார். ஈரோடு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி வீரராக வராவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    இதில் தொழிலாளர் நலத்துறை சார்பில் 42 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சத்து 43 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும், பல்லடம் வட்டம் மின்வாரியத் துறை சார்பில் 5 பேருக்கு வாரிசு அடிப்படையில் பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது குறித்து முதல் நிலை கூட்டம் நடைபெற்றது.

    அமைச்சர் சி.வி.கணேசன் பேசுகையில், தமிழக முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க இந்த ஓராண்டு காலத்தில் ஒவ்வொரு வேலைவாய்ப்பு முகாமிலும் 72 ஆயிரம் பேர் கலந்து கொண்டு 8,782 பேர் வேலை வாய்ப்பை பெற்றனர். இதுவரையில் தமிழகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு 85 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். அனைத்து துறைகளும் ஆயத்தப் பணிகளை துரிதமாக செய்ய வேண்டும். அந்த வகையில் நடைபெறவுள்ள மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமை படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பாக நடத்திட வேண்டும் என தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் ஆணையர் எஸ்.பொன்னுசாமி, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ஏ.ராஜ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
    • ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் கொரோனா காரணமாக உயிரிழந்த பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களின் வாழ்வாதாரத்துக்கான சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

    இந்த முகாமிற்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி ஜோதி தலைமை தாங்கினார். கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார்.

    இதில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்தனர்.

    இதில் 124 குடும்பத்தினர் கலந்து கொண்டனர். அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு தகுதியானவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

    இதில் ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொறுப்பு) சதீஷ்குமார், இலவச சட்ட ஆலோசனை மையத்தின் வக்கீல் கவிதா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வில்லியம்ஸ் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×