என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "plastic"

    • தேங்காய் சிரட்டைகள், டீகப்புகள், பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றை சேகரித்து அப்புறப்படுத்தினர்.
    • தண்ணீரில் லார்வா புழுக்கள் உற்பத்தியாகியிருந்ததை சேகரித்து அதனை ஆய்வுக்கு உட்படுத்திடனர்.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி சார்பில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் டெங்கு கொசுக்கள்உற்பத்தியை தடுத்து காய்ச்சல்ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படு த்தப்பட்டு உள்ளது.

    முதல்கட்டமாக பள்ளி, கல்லூரிகளில் டெங்கு கொசு உற்பத்தியாகும் பகுதிகளை டெங்கு தடுப்பு பணியாளர்கள் ஆய்வு செய்து கண்டறிந்து அழித்து வருகின்றனர்.

    பள்ளி குடிநீர் தொட்டிகள், கழிவறை, கைகள் சுத்தம் செய்யும் பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தி யாவதை தடுக்க மருந்து தெளிக்கப்பட்டது.

    மேலும் பள்ளிவளாகங்களை சுற்றி பழையடயர்கள், உடைந்த பாட்டில்கள், தேங்காய் சிரட்டைகள், டீகப்புகள், பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றை சேகரித்து அப்புறப்படுத்தப்பட்டு பிளிசிங் பவுடர் தெளித்தும் மருந்து தெளித்தும் தூய்மைபடுத்தினர்.

    மேலும் பள்ளி ஒன்றில் தண்ணீரில் லார்வா புழுக்கள் உற்பத்தியாகியிருந்ததை சேகரித்து அதனை ஆய்வுக்கு உட்படுத்திட பாட்டிலில் களபணியாளர்கள் எடுத்து சென்றனர்.

    • ராவுத்தர் கோவில் மற்றும் பள்ளி வளாகத்தில் தூய்மை பணி.
    • பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மேற்கொண்டனர்.

    திருவோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம் ஆனந்த கோபாலபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது

    இதில் பாதிரங்கோட்டை தெற்கு பஞ்சாயத்தில் அமைந்துள்ள கருப்பட்டி தெருவில் உள்ள வலம்புரி விநாயகர் கோவில், மற்றும் ஆண்டாாங்கொள்ளையில் உள்ள ராவுத்தர் கோவில், மற்றும் பள்ளி வளாக தூய்மை பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டனர் மேலும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மேற்கொண்டனர்6வது நாள் நிகழ்ச்சி யாக மரக்கன்றுநடுவிழா நடைபெற்று மரக்கன்று களை தொடர்ந்து பராமரிப்போம் என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது மேலும் நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர், செல்லத்துரை, தலைமை தாங்கினார், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சுதாகர், வரவேற்று பேசினார், மேலும் சிறப்பு விருந்தினராக முதுநிலை வருவாய் ஆய்வாளர் பாரதிதாசன் கலந்து கொண்டு சிறப்பு ரையாற்றினார், இறுதியாக நாட்டு நலப்பணித் திட்ட மாணவன், அகத்தீஸ்வரன் நன்றி கூறினார்.

    • பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.
    • தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    மீனம்பாக்கம் :

    நாடு முழுவதும் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகள், பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை பயன்படுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இந்த நிலையில் சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் விமான நிலைய ஆணையகம், தனியார் அமைப்புடன் இணைந்து பயணிகள் மற்றும் ஊழியர்களிடம் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப்பைகளை பயன்படுத்த வலியுறுத்தி பயணிகளுக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டன.

    • நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பிள்ளா நல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரி தலைமையில் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
    • அப்போது, கடைகளில் விற்பனை, பயன்பாட்டிற்கு வைத்திருந்த தடை செய்யப்பட்ட 26 கிலோ பிளாஸ்டிக் கேரி பேக்குகளை பறிமுதல் செய்தனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பிள்ளாநல்லூர் பேரூராட்சி பகுதியில் உள்ள மளிகை கடை, உணவகம், பழக்கடை, காய்கறி மற்றும் பூக்கடைகளில், பிள்ளா நல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரி தலைமையில் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது, கடைகளில் விற்பனை, பயன்பாட்டிற்கு வைத்திருந்த தடை செய்யப்பட்ட 26 கிலோ பிளாஸ்டிக் கேரி பேக்குகளை பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளர்களுக்கு ரூ.1200 அபராதம் விதித்த னர். கடையின் உரிமையா ளர்கள், தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அல்லது விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். இந்த ஆய்வின்போது துப்புரவு மேற்பார்வையாளர் மற்றும் அலுவலக பணியா ளர்கள் உடனிருந்தனர்.

    • சபரிமலை செல்லும் பக்தர்கள் அனைவரும் பழனி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
    • கழிவுகளை வீசி செல்கின்றனர். குறிப்பாக தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    பழனி:

    பழனியில் தற்போது கார்த்திகை மாதம் என்பதால் அய்யப்ப பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சபரிமலை செல்லும் பக்தர்கள் அனைவரும் பழனி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் வாகனங்கள் நிறுத்தும் இடத்திலேயே உணவு சமைத்து சாப்பிட்டு கழிவுகளை சாலையோரம் வீசி வருகின்றனர்.

    பக்தர்களை குறிவைத்து அடிவாரம் , கிரிவீதி உள்ளிட்ட பகுதிகளில் சாலையோர கடைகள் முளைத்து வருகின்றன. இவர்களும் பல்வேறு கழிவுகளை வீசி செல்கின்றனர். குறிப்பாக தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    பல்வேறு கோவில்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில் பழனியில் அதுபோன்ற எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் பக்தர்கள் மட்டுமின்றி வியாபாரிகளும் பல்வேறு குப்பைகளை சாைலயோரம் வீசிச்செல்கின்றனர். இதனை கடந்து செல்லும் நபர்கள் முகம்சுழித்து செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது.

    எனவே நகராட்சி மற்றும் தேவஸ்தானம் சார்பில் போதிய ஊழியர்களை நியமித்து குப்பைகளை அகற்றவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • மாநிலத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் சாதாரணமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    • பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது.

    மும்பை :

    மகாராஷ்டிரா அரசு கடந்த 2018-ம் ஆண்டு ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. எனினும் மாநிலத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் சாதாரணமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் மாநில அரசு பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. இதன்படி மக்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் கப், தட்டு, ஸ்ட்ரா, போர்க், ஸ்பூன் போன்ற பொருட்களை உற்பத்தி செய்ய பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது.

    அதே நேரத்தில் இந்த பொருட்களை உற்பத்தி செய்ய உற்பத்தியாளர்கள் கண்டிப்பாக மத்திய பிளாஸ்டிக் என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திடம் அனுமதி பெற வேண்டும் என அரசு தெரிவித்து உள்ளது.

    மாநில அரசின் இந்த முடிவு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களுக்கு நிவாரணமாக இருக்கும் என மாநில சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை செயலாளர் சதீஷ் தாரடே தெரிவித்தாா்.

    • நிரந்தர உபகரணமான சார்பும், டிஸ்கஸ் இரும்பினால் இல்லாமல் கார்பன் கலந்து ரப்பரால் இருக்கிறது.
    • கால்பந்து போஸ்ட் ரிலே பேட்டர்சன், ஈட்டி ஏறிதல் போன்றவை பிளாஸ்டிக் உபகரணமாக உள்ளது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் சங்கம் மாநில பொருளாளர் கரு. தமிழ்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டம் அனைத்து அரசு மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்க பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி துறை சார்பாக விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    ஆனால் இந்த உபகரணங்கள் தரமற்றதாகவும் மாணவர்கள் பயிற்சி செய்ய பயனற்றதாகவும் உள்ளன.

    நிரந்தர உபகரணமான சார்பும், டிஸ்கஸ் இரும்பினால் இல்லாமல் கார்பன் கலந்து ரப்பரால் இருக்கிறது. கால்பந்து போஸ்ட் ரிலே பேட்டர்சன், ஈட்டி ஏறிதல் போன்றவை பிளாஸ்டிக் உபகரணமாக உள்ளது.

    இதை மாணவர்கள் பயிற்சி செய்யவும் பயன்படுத்தவும் முடியாது.

    பல பொருட்கள் உடைந்து உள்ளன.

    அவையாவும் பயன்படுத்த முடியாது. எனவே அனைத்து பொருட்களும் திரும்ப பெற்று தரமான இரும்பினால் ஆன பொருட்கள் உரிய முறையில் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிவகங்கை மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்ற கல்வி நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்பட்டது.
    • இதற்கான விண்ணப்பப் படிவங்கள் சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் https://sivagangai.nic.in என்ற இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மீண்டும் மஞ்சப்பை பிரசா ரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மஞ்சப்பை விருதுகளை அறிவித்தார்.

    ஒருமுறை உபயோகித்து தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிற தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக மஞ்சப்பை (மஞ்சள் துணிப்பை) மாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு இந்த மஞ்சப்பை விருது வழங்கப்படும்.

    தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக தங்களுடைய வளாகங்கள், சுற்றுப்புறங்கள் மற்றும் வளாகப்பகுதியை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்ற ஊக்குவிப்பதில் முன்மாதிரியாக திகழும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மஞசப்பை விருதுகளை வழங்கி கவுரவிக்க முன் வந்துள்ளது.

    இதற்கான விண்ணப்பப் படிவங்கள் சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் https://sivagangai.nic.in என்ற இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பப் படிவத்தில் தனிநபர், நிறுவனத்தலைவர் முறையாக கையொப்பமிட வேண்டும்.

    கையொப்பமிட்ட பிரதிகள் 2 நகல்கள் மற்றும் குறுவட்டு பிரதிகள் (2 எண்ணிக்கைகள்) மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற மே மாதம் 1-ந் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 20 கிலோ புகையிலை பொருட்கள், 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கல்.
    • சுமார் 40 ஆயிரம் மதிப்பிலான புகையிலை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்.

    திருவையாறு:

    தஞ்சை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சித்ராவுக்கு வந்த புகாரின் பேரில் அவர் தலைமையில் அலுவலர்கள் சசிகுமார், பாலகுரு, சுப்பிரமணி, ரெங்கராஜன் ஆகியோர் போலீசார் உதவியுடன் திருவையாறு அந்தணர்குறிச்சியில் உள்ள ரெங்கராஜ் மகன் மகேஷ்வரன் (வயது 35) என்பவரது குடோனில் ஆய்வு செய்தனர்.

    அப்போது, அரசால் தடைசெய்யப்பட்ட 20 கிலோ புகையிலை பொருட்கள், 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் 40 ஆயிரம் ஆகும். உடனே புகையிலை மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது.

    • பழைய கழிவுகள், பிளாஸ்டிக், துணிகள் போன்றவற்றை எரிப்பதை தவிர்க்க வேண்டும்.
    • பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    புகையில்லாபோகி பண்டிகை கொண்டாட வேண்டி மயிலாடுதுறை நகராட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    தியாகி நாராயணசாமி மேல்நிலைப்பள்ளியில் இருந்து பேரணியை நகர்மன்ற தலைவர் குண்டாமணி என்ற செல்வராஜ் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

    பேரணிக்கு நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி தலைமை தாங்கினார்.

    நகர்நல அலுவலர் லெஷ்மி நாராயணன், நகர்மன்ற துணை தலைவர் சிவக்குமார், சுகாதார ஆய்வாளர்கள் ராமையன், பிச்சமுத்து, டேவிட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பேரணியில் ஞானாம்பிகை கல்லூரி மாணவிகள், தியாகி நாராயணசாமி மேல்நி லைப்பள்ளி மாணவர்கள், டி.பி.டி.ஆர். மாணவர்கள் கலந்து கொண்டு பொது இடங்களில் பழைய கழிவுகள், பிளாஸ்டிக், துணிகள் போன்றவற்றை எரிப்பதை தவிர்க்க வேண்டியும், வடிகால்களில் திடக்கழிவுகள் கொட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    பொதுமக்கள் தங்களது திடக்கழிவுகளை நகராட்சி தூய்மை பணியாளரிடம் வழங்கி புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட வேண்டும் என்றனர்.

    நகராட்சி சார்பில் பொது மக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோ கிக்கப்பட்டது.

    பேரணியில் மயிலாடு துறை மிட்டவுன் ரோட்டரி சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

    • மெலட்டூர் பேரூராட்சி பகுதியில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாட வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • போகி பண்டிகையை முன்னிட்டு தேவையற்ற பழைய பொருள்களையும், பிளாஷ்டிக், கழிவுகளையும் பொது இடங்களில் தூக்கி வீசுவது, தீவைத்து கொளுத்துவதால் சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படும்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், மெலட்டூர் பேரூராட்சி பகுதியில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாட வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் இலக்கியாபட்டாபிராமன் பேரணியை துவக்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார்.

    பேரணியில் வரும் போகி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தேவையற்ற பழைய பொருள்களையும், பிளாஷ்டிக், கழிவுகளையும் பொது இடங்களில் தூக்கி வீசுவது, தீவைத்து கொளுத்துவதால் சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுவதோடு காற்று மாசுபடுகிறது ஆகையால் வரும் போகி பண்டிகை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் தேவையற்ற பொருட்களை தங்கள் வீடுதேடி வரும் பேரூராட்சி தூய்மை பணியாளர்களிடம் அல்லது பேரூராட்சி குப்பைகளை சேமித்து பிரிக்ககூடிய வளம் மீட்பு பூங்காவில் வழங்கி புகையில்லாத போகி பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடுமாறு பேரூராட்சி சார்பில் பேர ணியில் வலியுறுத்தப்பட்டது.

    இதில் பேரூராட்சி செயல் அலுவலர் குமரேசன், துணை தலைவர் பொன்னழகுசீனு, உறுப்பினர் காஞ்சிதுரை மற்றும் பேரூராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். பேரணி பேரூராட்சி அலுவலகத்தில் துவங்கி முக்கிய வீதிகளை சுற்றி மீண்டும் அலுவலகம் வந்தடைந்தது.

    • 25-வது வார்டுயில் உள்ள பெண்களுக்கு பிளாஸ்டிக் இல்லா மாநகராட்சி மற்றும் புகையில்லா போகி என்ற தலைப்பில் கோலப்போட்டி நடத்தது.
    • கோலத்திற்கு சிறப்பு பரிசுகளும் கலந்து கொண்டவர்களுக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சி 25-வது வார்டுக்கு உட்பட்ட தத்தோஜியப்பா சந்தில் பிளாஸ்டிக் இல்லா மாநகராட்சி மற்றும் புகையில்லா போகி என்ற தலைப்பின் கீழ் கோலப்போட்டி நடத்தப்பட்டது.

    இதற்கு 25-வது வார்டு கவுன்சிலர் ஆர்.தெட்சணாமூர்த்தி தலைமை தாங்கினார்.

    மாநகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி மற்றும் துப்புரவு ஆய்வாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் பெண்கள் விழிப்புணர்வு கோலங்கள் இட்டனர்.

    சிறந்த கோலத்திற்கு சிறப்பு பரிசுகளும் கலந்து கொண்டவர்களுக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.

    மேலும் புகையில்லா போகி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பிரசுரங்கள் கொடுக்கப்பட்டன.

    ×