என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » plus 2 student molested
நீங்கள் தேடியது "Plus 2 student molested"
அரூர் அருகே மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். #DharmapuriGirlStudent #GirlMolested #PMK #AnbumaniRamadoss
சென்னை:
பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த சிட்லிங் மலைக்கிராமத்தில் விடுமுறைக்காக வந்திருந்த மாணவி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அதனால் ஏற்பட்ட உடல்நல பாதிப்புகள் காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
மாணவியின் உயிரிழப்புக்கு சம்பந்தப்பட்ட கயவர்கள் மட்டுமின்றி காவல்துறையும், அரசு நிர்வாகமும் சேர்ந்தே பொறுப்பேற்க வேண்டும்.
அந்த மாணவிக்கு எந்தவிதமான மருத்துவமும் வழங்காமல், வழக்குப் பதிவு செய்து தருமபுரியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்த காவல்துறையினர், அத்துடன் தங்களின் கடமை முடிந்து விட்டதாகக் கருதி ஒதுங்கிக் கொண்டனர்.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உடனடியாக மருத்துவம் அளிக்கப்பட்டிருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்க முடியும். ஆனால், அதற்கான நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொள்ளவில்லை.
காப்பகத்தில் சேர்க்கப்பட்ட மாணவிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு, மோசமடைந்த நிலையில் மிகவும் தாமதமாகவே தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, அவரது உயிரிழப்புக்குக் காரணமாக இருந்த கயவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் காவல்துறை மிகவும் அலட்சியம் காட்டி வருகிறது. இந்தக் கொடூரம் நடந்து ஒரு வாரம் ஆகியும் இன்று வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இரு குற்றவாளிகளில் ஒருவரான ரமேஷின் தாயார் அப்பகுதியில் அரசு மதுபானங்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருவதாகவும், இதற்காக கோட்டைப்பட்டி காவல்துறையினருக்கு கையூட்டு தருவதாகவும், அதனால் தான் குற்றவாளிகள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இப்புகார் உண்மை என்றால் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மாணவியின் இல்லத்தில் பயன்படுத்தத் தக்க வகையில் கழிப்பறை வசதி இருந்திருந்தால் அம்மாணவிக்கு இத்தகையக் கொடுமை நிகழ்ந்திருக்காது. மலைவாழ் மக்களுக்கு கழிப்பறை வசதிகளை கட்டித்தருவது உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அத்திட்டங்களை செயல்படுத்தித் தராததும் இதற்கு காரணம் ஆகும். அந்த வகையில் மாணவியின் சாவுக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும்.
மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் காவல்துறை இனியும் அலட்சியம் காட்டாமல் குற்றவாளிகளை கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும். இந்த வழக்கை விரைவாக நடத்தி குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும். மாணவியின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி உதவி வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DharmapuriGirlStudent #GirlMolested #PMK #AnbumaniRamadoss
பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த சிட்லிங் மலைக்கிராமத்தில் விடுமுறைக்காக வந்திருந்த மாணவி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அதனால் ஏற்பட்ட உடல்நல பாதிப்புகள் காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
மாணவியின் உயிரிழப்புக்கு சம்பந்தப்பட்ட கயவர்கள் மட்டுமின்றி காவல்துறையும், அரசு நிர்வாகமும் சேர்ந்தே பொறுப்பேற்க வேண்டும்.
அந்த மாணவிக்கு எந்தவிதமான மருத்துவமும் வழங்காமல், வழக்குப் பதிவு செய்து தருமபுரியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்த காவல்துறையினர், அத்துடன் தங்களின் கடமை முடிந்து விட்டதாகக் கருதி ஒதுங்கிக் கொண்டனர்.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உடனடியாக மருத்துவம் அளிக்கப்பட்டிருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்க முடியும். ஆனால், அதற்கான நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொள்ளவில்லை.
காப்பகத்தில் சேர்க்கப்பட்ட மாணவிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு, மோசமடைந்த நிலையில் மிகவும் தாமதமாகவே தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆனால், அங்கு தீவிர மருத்துவம் அளித்தும் பயனின்றி உயிரிழந்துள்ளார். மிகக்கொடூரமான பாலியல் தாக்குதலுக்கு ஆளான மாணவியைக் காப்பாற்றும் விஷயத்தில் அக்கறையும், சமூகப் பொறுப்பும் இல்லாமல் மிகவும் அலட்சியமாக நடந்து கொண்ட காவல்துறை உள்ளிட்ட அனைவரின் செயலும் கண்டிக்கத்தக்கது.
மாணவியின் இல்லத்தில் பயன்படுத்தத் தக்க வகையில் கழிப்பறை வசதி இருந்திருந்தால் அம்மாணவிக்கு இத்தகையக் கொடுமை நிகழ்ந்திருக்காது. மலைவாழ் மக்களுக்கு கழிப்பறை வசதிகளை கட்டித்தருவது உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அத்திட்டங்களை செயல்படுத்தித் தராததும் இதற்கு காரணம் ஆகும். அந்த வகையில் மாணவியின் சாவுக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும்.
மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் காவல்துறை இனியும் அலட்சியம் காட்டாமல் குற்றவாளிகளை கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும். இந்த வழக்கை விரைவாக நடத்தி குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும். மாணவியின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி உதவி வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DharmapuriGirlStudent #GirlMolested #PMK #AnbumaniRamadoss
வீட்டில் கழிவறை வசதி இல்லாததால் வெளியில் சென்ற போது 2 வாலிபர்களிடம் சிக்கிய மாணவி அது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார். #DharmapuriGirlStudent #GirlMolested
தர்மபுரி:
மாணவி சவுமியா கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், புகாருக்குள்ளான 2 வாலிபர்களும் அவரை கடுமையாக ‘செக்ஸ்’ சித்ரவதை செய்துள்ளனர்.
மாணவி சவுமியாவின் வீட்டில் கழிவறை வசதி இல்லை. இதனால் அவர் இயற்கை உபாதையை கழிப்பதற்காக அருகில் உள்ள ஓடைப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போதுதான் வாலிபர்கள் ரமேஷ், சதீஷ் இருவரும் நைசாக பின் தொடர்ந்து சென்றனர்.
சவுமியா இயற்கை உபாதையை கழித்துக் கொண்டிருந்த போது சதீஷ் பின்னால் சென்று கை குட்டையால் வாயை பொத்தி கீழே தள்ளிவிட்டார். பின்னர் சவுமியாவிடம் தவறாக நடந்துள்ளார்.
இந்த நேரத்தில் ரமேஷ், சவுமியாவை திமீறி எழ முடியாத அளவுக்கு கெட்டியாக பிடித்துக் கொண்டார். 2 பேரும் சேர்ந்து மாணவியை செக்ஸ் சித்ரவதை செய்துள்ளனர். 2 பேரின் பிடியில் இருந்தும் சவுமியாவால் உடனடியாக மீண்டு வரமுடியவில்லை. நீண்ட போராட்டத்துக்கு பிறகே, அவர்களின் கோர செக்ஸ் பிடியில் இருந்து அவரால் மீள முடிந்தது.
பின்னர் உயிரை கையில் பிடித்தபடி அங்கிருந்து சவுமியா வீட்டுக்கு ஓடி வந்தார். இந்த நேரத்தில் அவரது தாய் - தந்தை இருவருமே வீட்டில் இல்லை. மாலையில் அவர்கள் வந்தவுடன் தனக்கு நேர்ந்த கொடுமையை பற்றி சவுமியா கதறி அழுதபடியே கூறியுள்ளார்.
கடந்த 5-ந்தேதி அன்று கற்பழிப்பு சம்பவம் நடந்துள்ளது. சவுமியாவின் வீட்டில் வாகன வசதி எதுவும் இல்லாததாலும் இரவு 7 மணி அளவிலேயே தாய்-தந்தை வந்ததாலும் உடனடியாக அவர்களால் புகார் அளிக்க முடியவில்லை. இதனால் மறுநாள் காலையில் சென்றே புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக மாணவி சவுமியா அளித்துள்ள புகாரில் திடுக்கிடும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
மாணவி அளித்த புகார் விவரம் வருமாறு:-
நான் 10-ம் வகுப்பு வரை சிட்லிங் கிராமத்தில் படித்து விட்டு பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளயில் படித்தேன். இந்தாண்டு அதே பள்ளியில் பிளஸ்-2 அறிவியல் பிரிவில் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வந்தேன். 3-ந் தேதியன்று தீபாவளி விடுமுறைக்காக பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து வீட்டிற்கு வந்தேன்.
5-ந்தேதி பகல் 2 மணியளவில் என் தாய், தந்தையர் வேலைக்கு சென்றிருந்த நிலையில் நான் மட்டும் அங்குள்ள காட்டுக்கு மலம் கழிக்க சென்றேன்.
அப்போது எங்கள் ஊரை சேர்ந்த சாமிகண்ணுவின் மகன் சதீஷ், மற்றும் அவருடைய நண்பர் பெருமாள் மகன் ரமேஷ் என்பவரும் பின் தொடர்ந்தனர். நான் காட்டுப்பகுதியில் செடி மறைவில் மலம் கழிக்க முற்பட்ட போது சதீஷ் என் பின்னால் வந்து அவன் கையை வைத்து என் வாயை பொத்தி அவன் ஆடையை அவிழ்த்து என்னை தள்ளி கெடுக்க முயன்றான்.
அப்போது ரமேஷ் என்னை பிடித்துக் கொண்டு நான் திமிராத படி சதீசுக்கு உதவி செய்தான். நான் சுதாரித்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டேன். விடுடா, விடுடா என சொல்லி அவனிடமிருந்து திமிறி வீட்டு பக்கம் ஓடி வந்து விட்டேன். வந்த களைப்பால் படுத்து மயங்கி விட்டேன்.
2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாணவியின் தந்தை அண்ணாமலை போலீசில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது:-
ஆளில்லாத நேரத்தில் என் மகள் கழிவறை சென்ற போது என் மகளை வழி மறித்து வாயில் துணியை வைத்து தூக்கி சென்றுள்ளனர்.
இந்த வேலை செய்தவர்கள் சிட்லிங் கிராமத்தை சேர்ந்தவர்கள் சாமிகண்ணுவின் மகன் சதீஷ், பெருமாளின் மகன் ரமேஷ் என்பவர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு, கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சிட்லிங் மலை கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அங்கு வசிப்பவர்களில் 30 சதவீதம் பேரின் வீடுகளில் மட்டுமே கழிவறை வசதி உள்ளது. இதனால் பெரும்பாலானவர்கள் திறந்த வெளியிலேயே மலம் கழிக்கின்றனர். அந்த கிராமத்தை சுற்றியுள்ள ஓடை பகுதியையே அவர்கள் அதற்கு பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற சம்பவங்களை தடுக்க சிட்லிங் கிராமத்தில் கழிவறை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #DharmapuriGirlStudent #GirlMolested

அரூர் அருகே பிளஸ்-2 மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். #DharmapuriGirlStudent #GirlMolested
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த சிட்லிங் மலை கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை - மலர் ஆகியோரின் மகள் சவுமியா (வயது17). பாப்பிரெட்டிப்பட்டியில் அரசு விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார்.
தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்த சவுமியா கடந்த 5-ந்தேதி இயற்கை உபாதையை கழிக்க வீட்டின் அருகே உள்ள புதர்கள் நிறைந்த பகுதிக்கு சென்றார்.
அப்போது அதே ஊரை சேர்ந்த ரமேஷ், சதீஸ் ஆகிய 2 வாலிபர்கள் மாணவியை வலுக்கட்டாயமாக தூக்கி சென்று கற்பழித்து விட்டனர். அப்போது மாணவி சத்தம் போடாமல் இருப்பதற்காக அவரது வாயில் துணியை வைத்து அழுத்தினார்கள். பின்னர் 2 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற மாணவி நேற்று காலை சிகிச்சை பலனின்றி பலியானார்.
இந்த சம்பவம் குறித்து கோட்டப்பட்டி போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து வாலிபர்கள் 2 பேரையும் தேடி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் போலீசார் சரியாக செயல்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. போலீசுக்கு எதிராக 2-வது நாளாக போராட்டம் நடத்து வருகிறது.
கடந்த 5-ந்தேதி கற்பழிப்பு சம்பவம் நடந்தபோது மாணவியின் தந்தை போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரை வாங்க போலீசார் மறுத்து விட்டனர்.
இதனால் அண்ணாமலை மற்றும் உறவினர்கள் குழந்தைகள் பாதுகாப்பு எண்ணான 1077க்கு போன் செய்து தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக கோட்டப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு போனில் பேசி மாணவியிடமும், அவரது பெற்றோரிடமும் புகார் வாங்குமாறு கூறி உள்ளனர்.
இதைத் தொடர்ந்து 6-ந்தேதி அன்று தான் மாணவியை நேரில் வரவழைத்து அவரிடம் புகார் பெற்றுள்ளனர். ஆனால் மாணவியை கற்பழித்ததாக புகார் வாங்காமல் கற்பழிக்க முயற்சி செய்ததாக புகார் வாங்கி உள்ளனர். மாணவியும், பெற்றோர்களும் தாமதமாக வந்து புகார் கொடுத்ததாகவும் எழுதி வாங்கி உள்ளனர்.
கற்பழிப்பு புகார் கூறப்பட்ட 2 வாலிபர்களையும் கைது செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சம்பவத்தையே மறைத்து விட்டனர் என்று போலீஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மாணவியையும், அவரது பெற்றோரையும் மிரட்டி, நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது என்றும், கற்பழிப்பு நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் உங்களுக்குத்தான் அவமானம் என்றும் கூறி மாணவியை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று உள்ளனர்.
அங்கு மாணவிக்கு காது வலி இருக்கிறது என்றும், மூச்சு திணறலால் அவதிப்படுகிறார் என்றும் கூறி விட்டு கற்பழிப்பு குறித்து டாக்டரிடம் போலீசார் எதுவும் கூறவில்லை.
மீண்டும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டும் அவரை காப்பாற்ற முடியாமல் போய் விட்டது.
மாணவி இறந்த பிறகு தான் அவர் கற்பழிக்கப்பட்ட சம்பவமே வெளி உலகத்துக்கு தெரிய வந்தது. மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரி முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர். மாணவியின் உடலையும் வாங்க மறுத்தனர். இதனால் பதட்டமான சூழ்நிலை உருவானது.
மாணவி மற்றும் அவரது தந்தை கொடுத்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காத கோட்டப்பட்டி இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை சஸ்பெண்டு செய்ய வேண்டும். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும். மாணவியை இழந்த குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவியின் உடலையும் வாங்க மறுத்து விட்டனர். இதனால் நேற்று மாணவியின் உடல் பிரேத பரிசோதனை நடைபெறவில்லை.
மாணவியின் சொந்த ஊரான சிட்லிங் கிராமத்திலும் நேற்று கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று 2-வது நாளாக மறியல் போராட்டம் நடக்கிறது. மலைவாழ் மக்களின் ஒரு பிரிவினர் இன்று உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
சிட்லிங் கிராமத்திற்கு மாவட்ட கலெக்டரும், எஸ்.பியும் நேரில் வர வேண்டும். கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் போலீசார் விசாரணை நடத்தினால் சரியாக இருக்காது. வருவாய்த்துறை அல்லது நீதித்துறை விசாரணை நடத்த வேண்டும், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு குற்றவாளிகளை தப்ப விட்ட கோட்டப்பட்டி இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை சஸ்பெண்டு செய்ய வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தி உள்ளனர்.
இதனால் சிட்லிங் கிராமத்தில் பதட்டம் நிலவி வருகிறது. எனவே அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாணவியின் உடலை வாங்க மறுத்து இன்று 2-வது நாளாக உறவினர்கள் ஆஸ்பத்திரி வளாகத்தில் குவிந்துள்ளனர்.
உதவி கலெக்டர் சிவன் அருள், தருமபுரி துணை போலீஸ் சூப்பிரண்டு காந்தி, இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் ஆகியோர் மாணவியின் உறவினர்களிடம் பேச்சு நடத்தி வருகிறார்கள்.
மாணவியின் மரணத்துக்கு உரிய நீதி கிடைக்கும் வரை மாணவியின் உடலை வாங்க மாட்டோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. டில்லிபாபு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறிய தாவது:-
மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் சிட்லிங் கிராமத்தில் கற்பழிப்பு சம்பவங்கள் நிறைய நடந்து வருகின்றன. அந்த சம்பவங்களை போலீசார் மறைத்து விடுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களையே போலீசார் மிரட்டுகிறார்கள்.
மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விஷயத்தில் போலீசார் குற்றவாளிகளை தப்ப விட்டு மாணவியின் குடும்பத்தினரை மிரட்டி இருக்கிறார்கள். இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தினால் சரியாக இருக்காது. எனவே ஆர்.டி.ஓ. அல்லது டி.ஆர்.ஓ. விசாரணை நடத்த வேண்டும் . நீதி விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கற்பழிப்பு புகாரில் சிக்கியுள்ள ரமேஷ், சதீஸ் ஆகிய 2 வாலிபர்களும் தப்பிஓடி தலைமறைவாகி விட்டனர். அவர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்திருக்கும் சம்பவம் தொடர்பாக போலீசார் 5 நாட்களுக்கு பிறகு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். தற்போது 2 வாலிபர்கள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக கொலை வழக்கு பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. #DharmapuriGirlStudent #GirlMolested

சிகிச்சை அளித்த பிறகு அந்த மாணவி சவுமியாவை தொப்பூர் அருகே உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைத்தனர். அங்கு வைத்து தான் மாணவியின் உடல்நிலை மோசமாகி இருக்கிறது.
போலீசாரால் தேடப்படும் கற்பழிப்பு குற்றவாளிகள் சதீஷ், ரமேஷ் ஆகியோரை படத்தில் காணலாம்.

×

X