என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "pm party debacle"
திம்பு:
இந்தியாவுக்கு அருகே இமயமலை சாரலில் உள்ள நாடு பூடான். இங்கு பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் பிரதமர் ஷெரிங் தோபே தலைமையிலான ஆளும் மக்கள் ஜனநாயக கட்சி போட்டியிட்டது.
அதை எதிர்த்து டி.என்.டி. மற்றும் டி.பி.டி. ஆகிய எதிர்க்கட்சிகள் மோதின. அதில் 2 லட்சத்து 91 ஆயிரம் பேர் வாக்களித்தனர். நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது.
இதில் டி.என்.டி. கட்சி 92,722 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. அதற்கு அடுத்த படியாக டி.பி.டி. கட்சி 2-வது இடம் பிடித்துள்ளது. இக்கட்சி 90 ஆயிரத்து 20 ஓட்டுகள் பெற்றுள்ளது.
இத்தேர்தலில் பிரதமர் தோபேவின் ஆளும் பி.டி.பி. (மக்கள் ஜனநாயக கட்சி) படுதோல்வி அடைந்து 3-வது இடத்தை பிடித்துள்ளது. பூடான் அரசியல் சட்டப்படி முதல் சுற்று தேர்தலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் கட்சிகளுக்கு இடையே 2-வது சுற்று போட்டி நடைபெறும்.
அதில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சி அமைக்கும். அதன்படி வருகிற அக்டோபர் 18-ந் தேதி நடக்கும் 2-வது சுற்று தேர்தலில் டி.என்.டி. மற்றும் டி.பி.டி. கட்சிகள் போட்டியிடுகின்றன. அக்கட்சிகளின் வேட்பாளர்களுக்கு பிரதமர் தோபே வாழ்த்து தெரிவித்துள்ளார். #Bhutanparliamentaryelection