search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Police Accumulation"

    • சின்னசேலம் பள்ளியில் இறந்த மாணவியின் சொந்த ஊரில் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது.
    • போராட்டத்தில் ஊடுருவிய சமூக விரோதிகள் பெரும் வன்முறையில் ஈடுபட்டு கலவரம் ஏற்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். அவரது மகள் ஸ்ரீமதி (17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்திலுள்ள தனியார் பள்ளியில் பிளஸ்2 படித்த நிலையில், கடந்த 13ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்நிலையில் மாணவி சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவி உடலை வாங்க மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம் மாணவி படித்த தனியார் பள்ளி முன் ஸ்ரீமதியின் இறப்புக்கு நீதி கேட்டு இளைஞர்கள், பொதுமக்கள் போராட்டம் செய்தனர். இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    போராட்டத்தில் ஊடுருவிய சமூக விரோதிகள் பெரும் வன்முறையில் ஈடுபட்டு கலவரம் ஏற்பட்டது. கலவரத்தை கட்டுப்படுத்த கள்ளக்குறிச்சி, சின்னசேலம், நைனார்பாளையம் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதேபோல் வேப்பூர் பகுதிகளிலும் மாணவியின் இறப்புக்கு நீதி கேட்டு கிராம மக்கள் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் தலைமையில் 250-க்கும் மேற்பட்டபோலீசார் வேப்பூர் கூட்ரோடு, பெரியநெசலூர், தொண்டாங்குறிச்சி, கழுதூர் உள்ளிட்ட பகுதிகளில்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் தண்ணீர்பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா வாகனம் வேப்பூர் போலீஸ் நிலையத்தில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மாணவியின் இறுதி சடங்கு முடியும் வரை வேப்பூர் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட அறிவுத்தப்பட்டுள்ளது.

    ×