என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "police fine"
- கடைவீதிக்கு வரும் வாகனங்களை சிலர் தாறுமாறாக நிறுத்தி விட்டுச் செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
- விதிகளை பின்பற்றாமல் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பல்லடம் :
பல்லடம் என். ஜி.ஆர் ரோடு கடைவீதி போக்குவரத்து நிறைந்த இடமாகும். வணிக வளாகங்கள், வியாபாரக் கடைகள் நிறைந்திருப்பதால் எந்த நேரமும் அங்கு போக்குவரத்து நெரிசல் இருக்கும்.
இந்த நிலையில் கடைவீதிக்கு வரும் வாகனங்களை சிலர் தாறுமாறாக நிறுத்தி விட்டுச் செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது .வாகனங்கள் நிறுத்த போக்குவரத்து போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் மஞ்சள் கோடுகளை வரைந்துள்ளனர். ஆனால் சிலர் விதிகளை பின்பற்றாமல் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனையடுத்து பல்லடம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசர் தலைமையிலான போலீசார் விதிகளை மீறி மஞ்சள் கோட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு பூட்டு போட்டனர்.
பின்னர் அவற்றை எடுக்க வந்த உரிமையாளர்களுக்கு தலா 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, மீண்டும் அவ்வாறு நிறுத்தக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சென்னை:
சென்னை ஜார்ஜ் டவுனில் உள்ள பிரபல ஓட்டலில் மேலாளராக பணியாற்றியவர் ரவி. இவரது மனைவி அம்பிகா.
கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி 24-ந்தேதி அம்பிகா கொலை செய்யப்பட்டார். இவர் போரூரில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் நடந்த மோசடிகள் குறித்து புகார் செய்து வந்தார். இந்த நிலையில்தான் அவர் மகன் கண்முன்னே போலீஸ் உடையில் வந்த 2 பேரால் கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக ரவி, அவரது மகனை மாங்காடு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது போலீசார் தன்னையும், மகனையும் தாக்கி சித்ரவதை செய்ததாக மாநில மனித உரிமை ஆணையத்தில் ரவி புகார் அளித்தார்.
அதில் எனது மனைவி கொலை தொடர்பாக என்னையும், மகனையும் மாங்காடு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது எங்களை சட்ட விரோதமாக அடைத்து வைத்தனர்.
பின்னர் எங்களை தாக்கி சித்ரவதை செய்து குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி மிரட்டினர். 2012-ம் ஆண்டு ஜனவரி 25-ந்தேதி முதல் பிப்ரவரி 4-ந்தேதி வரை போலீஸ் நிலையத்தில் வைத்து தொடர்ந்து சித்ரவதை செய்தனர். அதன்பின் எனது உறவினர்கள் கேட்டுக் கொண்டதால் பிப்ரவரி 7-ந்தேதி விடுவித்தனர்.
எனவே இதில் சம்பந்தப்பட்ட சங்கர்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிமூலம், சைதாப்பேட்டை உதவி கமிஷனர் அழகு, மாங்காடு சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ண குமார், லாரன்ஸ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
இந்த குற்றச்சாட்டு போலீஸ் தரப்பில் மறுக்கப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி டி.ஜெயசந்திரன் அளித்த தீர்ப்பில் சாட்சியம் ஆவணங்களை வைத்து பார்க்கும்போது 4 போலீஸ் அதிகாரிகள் மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது.
இதனால் அவர்கள் 4 பேருக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இதில் ரூ.3 லட்சத்தை ரவிக்கும், ரூ.1 லட்சத்தை அவரது மகனுக்கும் தமிழக அரசு 4 வாரத்திற்குள் வழங்க வேண்டும்.
இந்த தொகையை போலீஸ் அதிகாரிகள் சம்பளத்தில் பிடித்தம் செய்து கொள்ளலாம். மேலும் போலீஸ் அதிகாரிகள் 4 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கையும், குற்ற நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்