என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "police investiation"
- பல்லடம் போலீசார் உடனடியாக தாராபுரம் சோதனை சாவடி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
- தாராபுரம் சோதனை சாவடி போலீசார் காரை வழிமறித்து, அபிஷேக், பரணிதரன் ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரித்தனர்.
பல்லடம்:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் அபிஷேக். இவரது நண்பர் பரணிதரன். கோவையில் வேலை பார்த்து வந்தனர். இருவரும் சொந்த ஊரில் நடைபெறும் கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக இன்று அதிகாலை 3 மணியளவில் திருப்பூர் பல்லடம் - தாராபுரம் பிரிவு சாலையில் காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே லாரி ஒன்று வந்துள்ளது. அதனை ஓட்டி வந்த டிரைவர் கார் எதிரே நிறுத்தி, ஹெட்லைட்டை ஏன் இப்படி எரிய விட்டு கொண்டு வருகிறீர்கள் என்று கேட்டுள்ளார். இதில் 2 தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து காரை எடுத்து சிறிது தூரம் சென்ற அபிஷேக் திடீரென்று சென்று கொண்டிருந்த லாரியின் எதிரே காரை குறுக்கே நிறுத்தி துப்பாக்கியை காட்டி சுட்டுக்கொன்று விடுவேன் என்று டிரைவரை மிரட்டியுள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த லாரி டிரைவர் இதுகுறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
பல்லடம் போலீசார் உடனடியாக தாராபுரம் சோதனை சாவடி போலீசாருக்கு தகவல் அளித்தனர். தாராபுரம் சோதனை சாவடி போலீசார் காரை வழிமறித்து, அபிஷேக், பரணிதரன் ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்தது பொம்மை துப்பாக்கி என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வெங்டேசன் என்பவர் சிறுநீர் கழிக்க செல்வதாக கூறி தப்பி ஓடி அருகில் உள்ள வைக்கோல் போர் மேல் ஏறி மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
- தகவல் அறிந்த வெங்கடேசன் பெற்றோர், உறவினர்கள் ஒன்று திரண்டனர். வெங்கடேசன் தற்கொலைக்கு போலீசார்தான் காரணம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேல்மலையனூர்:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள கீழ்செவெலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த 18 வயது பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் செஞ்சி அனைத்து மகளிர் போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த சம்பத், ராமலிங்கம், வெங்கடேசன் ஆகிய 3 பேரை இன்று கைது செய்தனர். பின்னர் போலீஸ் வாகனத்தில் ஏற்றி விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர்.
அப்போது வெங்டேசன் என்பவர் சிறுநீர் கழிக்க செல்வதாக கூறி தப்பி ஓடி அருகில் உள்ள வைக்கோல் போர் மேல் ஏறி மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
தகவல் அறிந்த வெங்கடேசன் பெற்றோர், உறவினர்கள் ஒன்று திரண்டனர். வெங்கடேசன் தற்கொலைக்கு போலீசார்தான் காரணம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். இறந்தவர் உடலை வாங்க மறுத்து அங்கிருந்து எடுத்து செல்லவும் விடாமல் உறவினர்கள் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்