என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "police searching"
களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் யாதவர் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 43). சமையல் தொழிலாளி. கடந்த 22-ம் தேதி மோட்டார் சைக்கிளில் வயலுக்குச் சென்ற போது அவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட முன்விரோதத்தில் முருகன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேர் கும்பலை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய சிங்கி குளத்தை சேர்ந்த ஐகோர்ட் ராஜா(34), ராமச்சந்திரன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் கோதைசேரியை சேர்ந்த சுரேஷ் என்ற சொக்கலிங்கம் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் சரண் அடைந்தார்.
இதையடுத்து இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபரான அ.தி.மு.க. பிரமுகர் வானமாமலை என்ற சுரேஷ் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.
அவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- இருசக்கர வாகனத்தில் அங்கு வந்து 5 பேர் கொண்ட கும்பல், இதயத்துல்லா உசேனை வழிமறித்து பணம் கேட்டுள்ளனர்.
- இந்நிலையில் காயம் அடைந்த இதயத்துல்லா உசேனை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி ஏரல் சேதுவாய்க்காலை சேர்ந்தவர் இதயத்துல்லா உசேன் (வயது 51).
லாரி டிரைவரான இவர் தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே 4-ம் கேட்டு அருகே மீளவிட்டான் சாலையில் உள்ள லாரி செட்டில் இவருடைய லாரியை நிறுத்திவிட்டு டீ குடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்து 5 பேர் கொண்ட கும்பல், இதயத்துல்லா உசேனை வழிமறித்து பணம் கேட்டுள்ளனர். அவர் கொடுக்க மறுத்ததால் அந்த கும்பல் இதயத்துல்லா உசேனை அரிவாளால் வெட்டினர்.
தொடர்ந்து அவரிடம் இருந்த ரூ. 4 ஆயிரம் பணம், செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இந்நிலையில் காயம் அடைந்த இதயத்துல்லா உசேனை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இது குறித்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட அந்த கும்பலை வலைவீசி தேடி வருகிறார்.
- செல்வமுருகன் ,முத்துகாளி 3 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கோவைக்கு சென்று அங்குள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
- இந்நிலையில் சமீபத்தில் அவர்களுக்குள் தகராறு ஏற்படவே, ஆத்திரம் அடைந்த செல்வமுருகன் தனது மனைவியை தாக்கி கடித்து வைத்ததாக கூறப்படுகிறது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள புளியம்பட்டியை சேர்ந்தவர் செல்வமுருகன் (வயது 24). இவர் அதே ஊரை சேர்ந்த முத்துகாளி (22) என்பவரை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கோவைக்கு சென்று அங்குள்ள கோவி லில் திருமணம் செய்து கொண்டனர். தற்போது முத்துமாரி கர்ப்பமாக உள்ளார். பின்னர் அங்கேயே குடியிருந்த நிலையில் திடீரென செல்வமுருகன் மாயமானார். தகவல் அறிந்த முத்துமாரியின் பெற்றோர் அங்கு விரைந்து சென்று தங்களது சொந்த ஊருக்கு அழைத்து வந்து போலீசில் புகார் அளித்தனர். பின்னர் போலீசார் செல்வமுருகனை தேடி கண்டுபிடித்து 2 பேரையும் சேர்ந்து வாழ வைத்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் அவர்களுக்குள் தகராறு ஏற்படவே, ஆத்திரம் அடைந்த செல்வமுருகன் தனது மனைவியை தாக்கி கடித்து வைத்ததாக கூறப்படு கிறது. இதுகுறித்த புகாரில் சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து செல்வ முருகனை தேடி வருகின்றனர்.
- நாங்குநேரி அருகே உள்ள வெங்கட்ரங்கபுரத்தை சேர்ந்தவர் சுடலைமுத்து. இவரை திருட்டு வழக்கு தொடர்பாக விஜயநாராயணம் போலீசார் தேடி வருகின்றனர்.
- வெங்கட்ராயபுரம்-செட்டிகுளம் சாலையில் சிதம்பரபுரம் விலக்கு அருகே சென்ற போது எதிரில் சுடலைமுத்து வருவதை கண்ட போலீசார் அவரை பிடித்தனர்.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள வெங்கட்ரங்கபுரத்தை சேர்ந்தவர் சுடலைமுத்து. இவரை திருட்டு வழக்கு தொடர்பாக விஜயநாராயணம் போலீசார் தேடி வருகின்றனர். சம்பவத்தன்று விஜயநாராயணம் போலீஸ் நிலையத்தில் போலீசாராக பணிபுரியும், அந்தோணி பிரபு, சரவணக்குமார் ஆகியோர் தலைமறைவான சுடலைமுத்துவை கைது செய்ய அவரை தேடி சென்றனர்.
வெங்கட்ராயபுரம்-செட்டிகுளம் சாலையில் சிதம்பரபுரம் விலக்கு அருகே சென்ற போது எதிரில் சுடலைமுத்து வருவதை கண்ட போலீசார் அவரை பிடித்தனர். அவரிடம் விசாரித்து கொண்டிருந்த போது அங்கு வந்த சுடலைமுத்துவின் தாயார் சீதாலெட்சுமி, மனைவி பேச்சியம்மாள், அதே ஊரைச் சேர்ந்த சேர்மதுரை ஆகியோர் போலீஸ்காரர் அந்தோணிபிரபுவை கீழே தள்ளி தாக்கினர்.
மேலும் அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தனர். அத்துடன் போலீஸ்காரர்கள் பிடித்து வைத்திருந்த சுடலைமுத்துவுடன் 3 பேரும் தப்பி ஓடி விட்டனர்.
இதுபற்றி போலீஸ்காரர் அந்தோணி பிரபு விஜயநாராயணம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நாககுமாரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இதுதொடர்பாக சுடலைமுத்து உள்பட 4 பேரையும் தேடி வருகிறார்.
சென்னையை அடுத்துள்ள பெருங்குடி குப்பை கிடங்கில் கடந்த மாதம் 21-ந்தேதி இரவு பெண்ணின் கால்கள், வலது கை ஆகியவை கிடைத்தது. இது தொடர்பாக பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
சுமார் 35 வயதுக்குட்பட்ட பெண் ஒருவரை யாரோ கொலை செய்து உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி வீசி சென்றிருப்பதுவிசாரணையில் தெரிய வந்தது. இருப்பினும் கொலை செய்யப்பட்ட பெண் யார்? என்பது உடனடியாக தெரியாமலேயே இருந்தது.
கொலையுண்ட பெண்ணை கண்டு பிடிப்பதற்காக துணை கமிஷனர் முத்துசாமி மேற்பார்வையில் உதவி கமிஷனர் கெங்கைராஜ், இன்ஸ்பெக்டர் ஆல்வின்ராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிரமாக துப்பு துலக்கி வந்தனர்.
மாயமான பெண்கள் பற்றி விசாரணை நடத்தப்பட்ட அதே வேளையில் மீட்கப்பட்ட பெண்ணின் வலது கையில் பச்சை குத்தப்பட்டிருந்த டிராகன், சிவன்-பார்வதி உருவங்களை வைத்தும் விசாரணை நடத்தினர்.
கடந்த 16 நாட்களாக தொடர்ச்சியாக நடத்தப்பட்ட இந்த விசாரணையில் நேற்று துப்பு துலங்கியது. கொலை செய்யப்பட்ட பெண் நாகர்கோவில் பூதப்பாண்டி அருகே உள்ள ஞாலம் பகுதியைச் சேர்ந்த சந்தியா என்பது தெரிய வந்தது.
தூத்துக்குடியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரை கடந்த 2000-ம் ஆண்டில் திருமணம் செய்த சந்தியாவுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். தூத்துக்குடியில் இவர்கள் படித்து வரும் நிலையில் கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சந்தியா விவாகரத்து வழக்கு தொடர்ந்தார்.
இதன் பின்னர் கணவரை பிரிந்து தாய் வீட்டுக்கு சென்ற அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னைக்கு வந்து சைதாப்பேட்டையில் ஒரு விடுதியில் தங்கினார். சினிமா வாய்ப்புக்காகவே கணவரை பிரிந்து தனியாக தங்கிய சந்தியா, சில படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
சந்தியாவின் நடத்தை சரியில்லாமல் இருப்பதாகவும் பாலகிருஷ்ணன் சந்தேகப்பட்டார். இதுபற்றி அவர் பலமுறை கண்டித்தும் சந்தியா கேட்கவில்லை.
இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்ட பாலகிருஷ்ணன், ஜாபர்கான் பேட்டையில் தான் தங்கியிருந்த வீட்டுக்கு நைசாக அழைத்துச் சென்று சுத்தியலால் தலையில் அடித்து கொலை செய்தார்.
பின்னர் உடலை 7 பாகங்களாக துண்டித்து 4 பார்சல்களாக கட்டி குப்பை தொட்டிகளிலும், அடையாறு ஆற்றங்கரையிலும் வீசினார்.
இதனை கண்டுபிடித்து பாலகிருஷ்ணனை நேற்று கைது செய்த போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். சந்தியாவின் கால்கள் மற்றும் பச்சை குத்தப்பட்ட வலது கை ஆகியவை கடந்த 21-ந்தேதியே கிடைத்துவிட்ட நிலையில், இடுப்பில் இருந்து முழங்கால் வரையிலான உடல் பாகத்தை காசி தியேட்டர் அருகே வீசி இருப்பதாக பாலகிருஷ்ணன் கூறினார். இதனை தொடர்ந்து அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் நேற்று இடுப்பு பகுதியை மீட்டனர். ஒரு சாக்கு மூட்டையில் அது கட்டி போடப்பட்டிருந்தது.
இதன் மூலம் உடல் பாகங்களில் 2 பார்சல்கள் கிடைத்து விட்டன. தலையை ஒரு பார்சலாகவும், கழுத்துக்கு கீழ் இடுப்பு வரையிலான உடல் பகுதி மற்றும் இடது கை ஆகியவற்றை இன்னொரு பார்சலாகவும் பாலகிருஷ்ணன் கட்டி வீசியதும் தெரிய வந்தது.
இந்த உடல் பாகங்கள் எங்கே? என்று போலீசார் தேடி வருகிறார்கள்.
இடுப்பு பகுதியை மட்டும் அடையாறு ஆற்றங்கரையோரமாக வீசிய பாலகிருஷ்ணன், மற்ற பார்சல்கள் அனைத்தையும் குப்பை தொட்டிகளிலேயே வீசியுள்ளார். இதில் ஒரு பகுதிதான் (2 கால்கள், வலது கை பார்சல்) பெருங்குடி குப்பை மேட்டில் கிடைத்தது.
தலை மற்றும் உடல் பாகத்தை தனித்தனி பார்சல்களாக ஜாபர்கான்பேட்டையில் உள்ள குப்பை தொட்டிகளிலேயே பாலகிருஷ்ணன் வீசி இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.
இங்கு சேகரிக்கப்படும் குப்பைகளும் பெருங்குடி குப்பை கிடங்குக்கு கொண்டு சென்றே கொட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம், சந்தியாவின் தலை, உடல் மற்றும் இடது கை ஆகியவையும் பெருங்குடி குப்பை கிடங்கிலேயே குப்பையோடு குப்பையாக கொட்டப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பெருங்குடி குப்பை கிடங்கில் போலீசார் நேற்று முழுவதும் தேடிப் பார்த்தனர். ஆனால் தலை உள்ளிட்ட உடல் பாகங்கள் சிக்கவில்லை. இன்று 2-வது நாளாக தலையை தேடும் படலம் முடுக்கி விடப்பட்டுள்ளது.
இதற்கிடையே கைதான பாலகிருஷ்ணன், போலீஸ் விசாரணைக்கு பின்னர் இன்று காலை 11.30 மணியளவில் ஆலந்தூர் கோர்ட்டில் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.
பாலகிருஷ்ணனிடம் விசாரணை நடத்திய நீதிபதி அவரை வருகிற 19-ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்படுகிறார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். #Sandhya #Balakrishnan
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே உள்ள முகவூரைச் சேர்ந்தவர் மகேஷ் (வயது30), பிரபல ரவுடி. பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய மாடசாமி என்பவரை கொன்ற வழக்கிலும் இவர் சேர்க்கப்பட்டுள்ளார். வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராகி வந்த மகேஷ் மலைப்பகுதியில் தங்கி வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் மலையில் அவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் நேற்று முன்தினம் மாலை வரை மகேசுடன் அவரது நண்பர் முகவூர் பூபேஸ் குப்தா நகரைச் சேர்ந்த வீரமணிகண்டன் (32) என்பவர் சுற்றி திரிந்ததை சிலர் பார்த்துள்ளனர்.
ஆனால் தற்போது வீரமணிகண்டன் தலைமறைவாகி விட்டார். எனவே அவர்தான் மகேசை கொலை செய்து இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அதன் அடிப்படையில் அவரை போலீசார் தேடி வருகின்றனர். அவர் பிடிபட்டால்தான் கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியவரும்.
என்.ஜி.ஓ.காலனி:
நாகர்கோவில் அருகே உள்ள என்.ஜி.ஓ. காலனி குஞ்சன்விளையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சுபிதா (26).
இந்த தம்பதிக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. 2 மகள்கள் உள்ளனர். மேலும் சுபிதா 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதனால் அவர் அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்து வந்தார்.
சமீப காலமாக சுபிதாவுக்கும் கணவர் மணிகண்டனுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
கடந்த 23-ந்தேதி மணிகண்டன், தான் வைத்திருந்த ரூ.200-ஐ எடுத்ததாக கூறி மனைவி சுபிதாவிடம் தகராறில் ஈடுபட்டார். அவர் அதை மறுத்தபோதும் கர்ப்பிணி என்றும் பாராமல் சுபிதாவை சரமாரியாக அடித்து, உதைத்து உள்ளார். மேலும் காலாலும் அவரை உதைத்ததாக தெரிகிறது. அக்கம், பக்கத்தினர் மணிகண்டனை தடுத்து அவர்களை சமரசம் செய்து வைத்தனர். கணவர் தாக்கியதில் உடல் நலம் பாதிக்கப்பட்டாலும் சுபிதா ஆஸ்பத்திரிக்கு உடனே செல்லாமல் வீட்டிலேயே மருந்து எடுத்துக் கொண்டதாக தெரிகிறது. இந்த நிலையில் சுபிதாவுக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டதால் அவர் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்த்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார்.
டாக்டர்கள் சுபிதாவிடம் விசாரித்த போது கணவர் தாக்கியது பற்றி அவர் கூறினார். சுபிதாவின் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்ததால் இதுபற்றி சுசீந்திரம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசாரும் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சுபிதாவிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது நடந்த சம்பவங்களை சுபிதா கூறியதை தொடர்ந்து மணி கண்டன் மீது கர்ப்பிணி மனைவியை தாக்கியதாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதனால் பயந்துபோன சுபிதா ஆஸ்பத்திரியில் பாதியிலேயே சிகிச்சையை நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். அதன் பிறகு அவரது உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால் மீண்டும் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். ஆனால் அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுபிதா நேற்று மாலை பரிதாபமாக இறந்து விட்டார்.
இதைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டு உள்ளது. சுபிதா மரணமடைந்ததால் அவரது கணவர் மணிகண்டன் மீது போலீசார் கொலை வழக்குபதிவு செய்து உள்ளனர்.
மேலும் தலைமறைவாக உள்ள மணிகண்டனை கைது செய்ய 2 போலீஸ் தனிப்படையும் அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படைகள் அவரை கைது செய்ய தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். சுபிதாவுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.
போலீசாரால் தேடப்படும் மணிகண்டன் மீது அவரது தாயை தற்கொலைக்கு தூண்டியதாக ஏற்கனவே வழக்கு உள்ளது. மணிகண்டன் தனது தாய் பேபியிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு செய்து உள்ளார். அப்போது அவரை பெற்ற தாய் என்று கூட பார்க்காமல் சரமாரியாக மணிகண்டன் தாக்கி உள்ளார். இதனால் மனவேதனை அடைந்த பேபி தனது வீட்டின் முன்பு நடுரோட்டில் வைத்து உடலில் மண்எண்ணையை ஊற்றி தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றிய வழக்கில் மணிகண்டனை போலீசார் தேடி வந்த நிலையில்தான் மனைவியை அடித்து கொன்ற வழக்கும் அவர் மீது பதிவாகி உள்ளது. தற்போது ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் ஒரே நேரத்தில் மணிகண்டனின் தாய் பேபி, மனைவி சுபிதா ஆகியோர் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு இருப்பது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மணிகண்டன்-சுபிதா தம்பதிக்கு 5 வயதிலும், 1¾ வயதிலும் 2 பெண் குழந்தைகள் உள்ளது. மணிகண்டன் தாக்கியதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட சுபிதா இறந்து விட்டார். போலீசார் தேடுவதால் மணிகண்டன் தலைமறைவாகி விட்டார். ஆதரவாக இருந்த பாட்டி பேபியும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் அந்த 2 குழந்தைகளும் தற்போது தவித்தபடி உள்ளன.
தூத்துக்குடி:
தூத்துக்குடி எஸ்.எஸ்.பிள்ளை மார்க்கெட் பேட்ரிக் சர்ச் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவருடைய மகன் மகாராஜன் (வயது 20), கட்டிட தொழிலாளி. இவரும், முத்துலட்சுமி என்பவரும் கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.
கடந்த சில மாதங்களாக தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இரவு நேரங்களில் மகாராஜன் கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுக பகுதியில் மகாராஜன் கத்திக்குத்து காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தார்.
இதை பார்த்த அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மகாராஜன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து முத்துலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மகாராஜன் வேலை பார்த்து கொண்டு இருந்தார்.
அந்த சமயத்தில் அங்கு தூத்துக்குடி மட்டக்கடையை சேர்ந்த கிராஸ்வின், புதுத்தெருவை சேர்ந்த கிளிப்டன் உள்ளிட்ட 4 பேர் வந்தனர். அப்போது, மகாராஜனுக்கும், கிராஸ்வின் உள்பட 4 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் நேற்று முன்தினம் இரவு மகாராஜனை கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிராஸ்வின், கிளிப்டன் உள்ளிட்ட 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். இதற்காக போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.
வேலூர்:
காட்பாடி பர்னீஷ்புரம் மிஷின் காம்பவுண்டு பகுதியை சேர்ந்தவர் வில்லியம்ஸ். இவரது மனைவி இந்திராணி (80). இவரது மகள் நளினி (40). சி.எம்.சி.யில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இந்திராணி, நளினி இருவரும் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். இரவு 2 மணிக்கு முகமூடி அணிந்த 6 பேர் கொண்ட வடமாநில கொள்ளை கும்பல் அங்கு வந்தனர். அவர்கள் 2 பேரையும் தனி அறையில் பூட்டி நாற்காலியில் கட்டிபோட்டு 35 பவுன் நகைகள், ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இது தொடர்பாக நளினி காட்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். எஸ்.பி. பிரவேஷ்குமார், டி.எஸ்.பி. லோகநாதன், இன்ஸ்பெக்டர் புகழ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக 8 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். அவர்கள் அந்த பகுதியில் கொள்ளை நடந்த நேரத்தில் பதிவான செல்போன் எண்களை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை கும்பல் ஆந்திராவுக்கு தப்பி சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்தவர் உதயகுமார் (வயது30). பிரசவத்திற்காக இவரது மனைவியை மதுரை நெல்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தார்.
நேற்று இரவு ஊரில் இருந்து மதுரை எம்.ஜி.ஆர். பஸ் நிலையம் வந்து இறங்கிய உதயகுமார் ஆஸ்பத்திரி செல்வதற்காக ஷேர் ஆட்டோவில் ஏறினார். நள்ளிரவு என்பதால் அவர் மட்டுமே பயணம் செய்தார்.
இந்த நிலையில் ஷேர் ஆட்டோ நெல்பேட்டைக்கு செல்லாமல் செல்லூர் பகுதியில் உள்ள மீனாட்சி புரம் விலக்கு சென்றது. அங்கு ஆட்டோ டிரைவர் தனது கூட்டாளிகள் 2 பேருடன் சேர்ந்து கொண்டு உதயகுமாரை தாக்கினர்.
தொடர்ந்து அவரிடம் இருந்த செல்போன், 2½ பவுன் நகை, ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பினர்.
இதுகுறித்து செல்லூர் போலீசில் உதயகுமார் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை -பணத்தை பறித்த 3 பேரை தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்