என் மலர்
நீங்கள் தேடியது "police station"
- கைதிகள் உரிமைகள் மீறப்பட்டதாக கடுமையான குற்றசாட்டுகள்.
- சர்ச்சைக்கு போலீசார் இதுவரை பதில் அளிக்கவில்லை.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத், போதன் நகரை சேர்ந்த வாலிபர் மீது அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் குற்றம் சாட்டப்பட்ட நபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட நபரை போலீஸ் நிலையத்தில் உள்ள அறையில் அடைக்க வேண்டும். அதற்கு பதிலாக போலீசார் அந்த நபரின் கை கால்களில் கனமான இரும்பு சங்கிலியால் பிணைத்தனர்.
பின்னர் அந்த வாலிபரிடம் போலீஸ் நிலையம் முழுவதையும் சுத்தப்படுத்த வேண்டும் என கட்டாயப்படுத்தினர். இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்ட வாலிபர் துடைப்பத்தை கையால் பிடித்துக் கொண்டு மெதுவாக ஊர்ந்து ஊர்ந்து போலீஸ் நிலையம் முழுவதையும் தூய்மைப்படுத்தினார்.
அப்போது போலீஸ் நிலையத்திற்கு வந்த ஒருவர் அதனை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். இந்த காட்சிகளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.
கைதிகள் உரிமைகள் மீறப்பட்டதாக கடுமையான குற்றசாட்டுகள் எழுந்துள்ளன.
இது தெலுங்கானாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சைக்கு போலீசார் இதுவரை பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- செந்தில் நகர் பகுதி பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
- வெடிகுண்டு வீசுவதாக பேசிய வீடியோ பதிவு காட்சிகள், வாட்ஸ் அப்பில் வைரல் ஆகி வந்தது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி செந்தில் நகரில் வசிப்பவர்கள் நாகப்பட்டினம் மாவட்டம் திருமணஞ்சேரியை சேர்ந்த சந்தானகிருஷ்ணன் மகன்கள் வீரமணி(வயது 23) மற்றும் அன்புமணி(20). இவர்கள் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 18 ந்தேதி, நீலகிரி மாவட்டம் மசனகுடி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் திருமலை ராஜன் என்பவரின் மகன் பூபாலகிருஷ்ணன் கோவையில் இருந்து தாராபுரம் நோக்கி சென்ற போது அவரை வழிமறித்து, ரூ.20 ஆயிரம்,செல்போன் ஆகியவற்றை வீரமணி, அன்புமணி, மேலும் 2 கூட்டாளிகளுடன் சேர்ந்து வழிப்பறி செய்துள்ளனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வந்துள்ளனர். இந்த நிலையில், செந்தில் நகர் பகுதியில் இவர்களால் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகவும், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என செந்தில் நகர் பகுதி பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில், புகார் அளித்தவர்களை கொலை செய்வதாகவும், போலீஸ் நிலையத்தின் மீது வெடிகுண்டு வீசுவதாகவும் இவர்கள் பேசிய வீடியோ பதிவு காட்சிகள், வாட்ஸ் அப்பில் வைரல் ஆகி வந்தது. இதையடுத்து இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- தீரன் நகரில் விரைவில் புறக்காவல் நிலையம் அமைக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்
- 17 கேமராக்கள் பொருத்தப்பட்டு பார்வையிட்டார்
திருச்சி:
திருச்சி மாநகர் அருகில் உள்ள தீரன் நகரில் சுமார் 5000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள பாரதியார் மக்கள் நல சங்கம் சார்பாக முக்கிய இடங்கள் மற்றும் முக்கிய சாலைகள் சந்திப்புகளில் சுமார் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 17 கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதனை திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
தற்போதைய நிலையில் மூன்றாவது கண்ணாக கண்காணிப்பு கேமராக்கள் விளங்குகின்றன. கண்காணிப்பு கேமராக்கள் இருந்தாலே குற்றவாளிகள் நகருக்குள் வர பயப்படுவார்கள். குற்றம் நடந்தாலும் குற்றவாளிகளை எளிதில் கண்டறியலாம். பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கண்காணிப்பு கேமராகளை பொருத்துவதோடு மட்டும் நின்று விடுகிறார்கள். அதை சரியாக பராமரிப்பது இல்லை. முக்கிய குற்றங்கள் நடந்த பிறகு போலீசார் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்யும்போது, அது தற்போது செயல்படவில்லை என்ற பதில் மட்டுமே வருகிறது.
எனவே தற்போது தொடங்கி இருக்கும் இந்த கண்காணிப்பு கேமரா பணி தொடர்ந்து பராமரித்து செயல்பட வேண்டும். தீரன் நகரில் விரைவில் சோமரசம்பேட்டை காவல் நிலையம் சார்பாக புறங்காவல் நிலையம் நிலையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சோமரசம்பேட்டை காவல் ஆய்வாளர் உதயகுமார் பொது மக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு குற்ற சம்பவங்களை மேற்கோள் காட்டி மக்கள் தங்களையும் தங்கள் வீடுகளையும் எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார் .
இந்நிகழ்ச்சியில் ஜீயபுரம் துணை கண்காணிப்பாளர் பாரதிதாசன், சோமரசம்பேட்டை காவல் ஆய்வாளர் உதயகுமார், நாச்சி குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி கோவிந்தராஜ், ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். தீரன்நகர் பாரதியார் மக்கள் நல சங்க நிர்வாகிகள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
- கோவை எம்.பி., நடராஜன், திட்ட பணிகள் குறித்த ஆய்வை மேற்கொண்டு வருகிறார்.
- இப்பகுதிகளில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடக்கின்றன.
திருப்பூர் :
பல்லடம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கோவை எம்.பி., நடராஜன், திட்ட பணிகள் குறித்த ஆய்வை மேற்கொண்டு வருகிறார். அதன்படி பல்லடம் ஒன்றியம், கரைப்புதூர் ஊராட்சியில் நடந்த ஆய்வு கூட்டத்தில், கரைப்புதூர், கணபதிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.
அப்போது பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது :- திருப்பூர் மாநகராட்சியை ஒட்டியுள்ள கரைப்புதூர், கணபதிபாளையம் ஊராட்சிகளை சார்ந்து ஏறத்தாழ ஒரு லட்சம் மக்கள் வசிக்கின்றனர். தினசரி வேலை நிமித்தமாக வந்து செல்பவரின் எண்ணிக்கையும் அதிகம்.
தொழிலாளர்கள் நிறைந்த இப்பகுதிகளில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடக்கின்றன.புகார் அளித்து போலீசார் பல்லடத்தில் இருந்து வருவதற்குள் சம்பவங்களின் போக்கு மாறிவிடும். இப்பகுதியில், சமூக விரோத செயல்கள் நடக்காத நாட்களே கிடையாது என்று கூறலாம்.இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது. குற்ற சம்பவங்களை தடுக்க போலீசாரின் கூடுதல் கண்காணிப்பு அவசியமாகிறது.எனவே, அருள்புரத்தை மையமாக கொண்டு கூடுதல் போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும் என, நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம். பொதுமக்கள் அமைதியுடன், பாதுகாப்புடன் வசிக்கஇக்கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும்.இவ்வாறு அதில் அவர்கள் கூறினர்.மனுவை பெற்று கொண்ட எம்.பி., நடராஜன், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
- பல்லடம் அருகே கரைப்புதூரில் புதிய போலீஸ் நிலையம் அமைக்கவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
- வெளி மாவட்ட, மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் பல்லடத்தில் வசிக்கின்றனர்.
திருப்பூர் :
பல்லடம் அருகே கரைப்புதூரில் புதிய போலீஸ் நிலையம் அமைக்கவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு தலைவர் அண்ணாதுரை கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- பல்லடம் போலீஸ் எல்லை திருப்பூர், நொச்சிபாளையம் பிரிவிலிருந்து காரணம்பேட்டை வரை பரந்து விரித்துள்ளது. வெளி மாவட்ட, மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் பல்லடத்தில் வசிக்கின்றனர்.
திருட்டு, கொலை, கொள்ளை, போதைப்பொருட்கள் விற்பனை, சட்டஒழுங்கு பிரச்சினைகள் அதிகளவில் நடைபெறுவதால் பல்லடம் போலீசார் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆறுமுத்தாம்பாளையம், கரைப்புதூர், கணபதிபாளையம் ஊராட்சிகளில் மட்டும் ஒருலட்சத்துக்கும்மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.இந்த 3 ஊராட்சி பகுதிகளிலும் குற்ற செயல்கள் அதிக அளவில் நடக்கின்றன. எனவே, கரைப்புதூர் ஊராட்சியில் புதிய போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- இரு வீட்டாருடனும் போலீசார் சமரச பேச்சுவார்த்தை.
- திருமணத்தை ஏற்றுக் கொள்வதாக மணமகன் வீட்டார் உறுதி அளித்தனர்.
ஆரணி:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி அத்திகுளம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் ஹேமகுமார் (வயது24) என்பவரும், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், சிறுபுழல்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த வினிதா(வயது21) என்ற இளம் பெண்ணும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இரண்டு வீட்டாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், காதல் ஜோடி, ஐயர் கண்டிகை கிராமத்தில் உள்ள ஒரு கோவிலில் இன்று முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர். பின்னர், ஆரணி காவல் நிலையத்திற்கு வந்த இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதை தெரிவித்தனர். மேலும் திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரதாபன் தலைமையிலான போலீசார் இரண்டு வீட்டாருடனும் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடந்து மணமகன் ஹேமகுமாரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்களது மகனின் திருமணத்தை ஏற்றுக் கொள்வதாக உறுதி அளித்தனர். பின்னர் திருமண ஜோடியை தங்களது வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். இப்பிரச்சினையால் ஆரணி காவல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- ரூ.1கோடியே 30 லட்சம் மதிப்பில் புதிதாக காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளது.
- அமைச்சர்.மு.பெ.சாமிநாதன் காவல் நிலையத்தில் குத்துவிளக்கினை ஏற்றினார்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட திருமுருகன் பூண்டி,ராக்கியாபாளையம் பகுதியில் தமிழ்நாடு காவல்துறை வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் ரூ.1கோடியே 30 லட்சம் மதிப்பில் புதிதாக காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளது.
இந்த புதிய காவல் நிலையத்தினை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். திருமுருகன்பூண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்.மு.பெ. சாமிநாதன் காவல் நிலையத்தில் குத்துவிளக்கினை ஏற்றினார். நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார்,மாநகர காவல் ஆணையர் பிரபாகரன்,மாநகர துணை காவல் ஆணையர்கள் அபினவ் குமார்,வனிதா மற்றும் காவல் துறை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- 2 பேரும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. நாளடைவில் 2 பேரும் காதலித்து வந்தனர்..
- காதலர்கள் கோவளத்தில் உள்ள தர்காவில் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
விழுப்புரம்:
செங்கல்பட்டு பகுதியை சேர்ந்தவர் திவ்யா (வயது. 21). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிறுவனத்தில் திண்டிவனம் பகுதியைச் சேர்ந்தவர் முஹம்மத் அசன் (22) என்பவரும் ேவலை பார்த்து வருகிறார். அப்போது 2 பேரும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. நாளடைவில் 2 பேரும் காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் காதலர்கள் கோவளத்தில் உள்ள தர்காவில் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
அதன்பின்னர் இருவரும் பாதுகாப்பு கேட்டு திண்டிவனம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
- பி.பி.சி. ஆவணப்படத்தை தடுக்க முயன்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
- இதனால் காவல் நிலையத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டனர்.
அவனியாபுரம்
வில்லாபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பி.பி.சி. ஆவண படத்தை கம்யூனிஸ்டு கட்சியினர் வெளியிட முயன்றனர். இதுகுறித்த தகவலின்பேரில் அந்த திருமண மண்டபத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சசிகுமார் தலைமையில் சோலை மணிகண்டன், ஜெயகணேஷ், கருப்பையா, மதன், தமிழ்செல்வி உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவனியாபுரம் காவல் நிலையத்தில் போலீசாருக்கும் கைதான பா.ஜ.க. நிர்வாகிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தகவல் அறிந்த ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவர் காளிதாஸ்ல, பிரசார பிரிவு நிர்வாகி சடாச்சரம், அவனி ஆனந்த், மூர்த்தி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதன் பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரையும் விடுவித்தனர். இந்த சம்பவத்தில் மாவட்ட தலைவர் சசிகுமாரை, போலீசார் மற்றும் எதிர்தரப்பினர் தள்ளிவிட்டதாகவும் இதனால் அவர் காயமடைந்து மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிகிறது.
- கீழக்கரை மரைன் காவல் நிலையத்திற்கு செல்ல வழியில்லாமல் தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.
- நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மரைன் காவல் நிலையம் இல்லாமல் இருந்ததை தொடர்ந்து காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பல ஆண்டு களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
கீழக்கரை தொழிலதிபர் சலாவுதீன் தனது சொந்த இடத்தில் 30 சென்ட் இடத்தை மரைன் காவல் நிலையம் கட்ட அரசுக்கு தான மாக வழங்கினார். அந்த இடத்தில் 2017-ம் ஆண்டு திறக்கப்பட்டது. அப்போது முதல் இன்று வரை காவல் நிலை யத்திற்கு சென்று வர வழி ஏற்படுத்தவில்லை. இதனால் மரைன் காவல் நிலையத்திற்கு கடற்கரை வழியாகத்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. வெள்ளம் ஏற்படும் காலங்களில் காவல் நிலையத்திற்கு நடந்தோ, வாகனத்திலோ செல்வதற்கு முடியாமல் போலீசார் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆகவே காவல் நிலையத்திற்கு கடற்கரை வழியை தவிர்த்து மாற்று வழியை ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- புகார், மனுக்கள் மீது விரைந்து விசாரணையில் தமிழ்நாட்டில் முசிறி காவல் நிலையம் முதலிடம் பிடித்துள்ளது
- டி.ஜி.பி. சைலேந்திர பாபு வாழ்த்து
முசிறி
திருச்சி மாவட்டம் முசிறியில் சீர்மிகு சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையத்தில் கடந்த செப்டம்பர் மாதம் மத்திய உள்துறை அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்ட குழுவினர் நேரில் வந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். அப்போது காவல் நிலையத்தின் சுகாதாரம், பராமரிப்பு மற்றும் வரப்பெற்ற புகார்களின் மீது விரைந்து நடவடிக்கை, நீதிமன்றத்தில் வழக்குகளை விரைவாக முடித்தல் மற்றும் புகார் கொடுக்க வருபவர்களிடம் மேற்கொள்ளப்படும் அணுகுமுறை, காவல் நிலையத்தின் மீது பொதுமக்கள் மத்தியில் உள்ள நன்மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வுக்குழு முசிறி காவல் நிலையத்திற்கு தகுதி சான்றிதழுக்கு பரிந்துரை செய்திருந்தது. அதனடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள காவல் நிலையங்களில் சிறந்த முதல் காவல் நிலையமாக மத்திய உள்துறை அமைச்சகம் தேர்வு செய்து சான்றிதழை சென்னையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்திற்கு ஒன்றிய அரசு அனுப்பி வைத்திருந்தது. விருதுக்கான சான்றிதழை சென்னை சென்று நேரில் பெற்றுக் கொண்ட முசிறி காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் நாகராஜ், தலைமை காவலர் மகாமணி, காவலர் ஆனந்தராஜ், காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபுவிடம் நேரில் காண்பித்து வாழ்த்து பெற்றனர். அப்போது காவல்துறை கூடுதல் இயக்குனர் சட்டம் மற்றும் ஒழுங்கு சங்கர் உடனிருந்தார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன், டி.ஐ.ஜி. சரவணசுந்தர், எஸ்.பி. சுர்ஜித்குமார், முசிறி போலீஸ் டி.எஸ்.பி. யாஸ்மின் ஆகியோர் முசிறி காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் முசிறி காவல் நிலையம் முதலிடம் பெற்றுள்ள நிகழ்வு முசிறி நகர மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
- முத்துப்பேட்டையில் திருச்சி மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன் ஆய்வு மேற்கொண்டார்.
- விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கும் பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டைக்கு திருச்சி மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன் வருகை தந்தார்.
பின்னர் வருடாவருடம் நடைபெறும் விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கும் ஜாம்புவா னோடை சிவன்கோவில், பின்னர் ஊர்வலம் செல்லும் பாதையான தர்கா, சிவராமன் ஸ்தூபி, பதற்றம் நிறைந்த ஆசாத்நகர், திருத்துறைப்பூண்டி சாலை, பழைய பஸ் நிலையம், புது பள்ளிவாசல், கொய்யா முக்கம், பங்களா வாசல், ஓடக்கரை, பட்டுக்கோட்டை சாலை, செம்படவன்காடு, சிலை கரைக்கும் பாமணி ஆற்று படித்துறை ஆகிய பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் லகூன் செல்லும் பாதை, மற்றும் படகுத்துறை ஆகியவைகளை பார்வையிட்டார்.
தொடர்ந்து முத்துப்பேட்டை போலீஸ் நிலையம் வந்து அங்கு ஆய்வு செய்து அங்கிருந்த கோப்புகளையும் ஆய்வு நடத்தினார்.
அப்போது தஞ்சை சரக டி.ஐ.ஜி ஜெயசந்திரன், திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் உட்பட காவல்துறை உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.