என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » poll candidates
நீங்கள் தேடியது "Poll Candidates"
சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்ற விவரங்களை பத்திரிகை மற்றும் ஊடகங்களில் விளம்பரப்படுத்த வேண்டும் என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. #ElectionCommission #SupremeCourt
புதுடெல்லி:
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது மீதான வழக்குகள் மற்றும் குற்ற பின்னணி குறித்த விவரங்களை பத்திரிகை மற்றும் ஊடகங்களில் விளம்பரம் செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. அதை நடைமுறைப்படுத்த தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதற்கான உத்தரவை மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளது. அதில், சுப்ரீம் கோர்ட் வழி காட்டுதலை தாமதமின்றி உடனடியாக நிறைவேற்ற வேண்டும். சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவை வேட்பாளர்களிடம் உறுதிபடுத்த வேண்டும்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்த பின் தன்மீதுள்ள குற்ற வழக்குகள் மற்றும் வழக்குகளில் பெற்ற தண்டனை விவரங்களை பத்திரிகை மற்றும் ஊடகங்களில் விளம்பரப்படுத்த வேண்டும்.
அதன் மூலம் அவரது வேட்பு மனுவை பரிசீலிப்பதா அல்லது ஒப்புதல் அளிப்பதா என முடிவு செய்து ஆணையம் முன்பு சில நாட்களில் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள மாநில சட்டசபை தேர்தல்களில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. #ElectionCommission #SupremeCourt

×

X