என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Pond puddles"
- குளத்தில் நிரம்பி வழியும் உபரிநீர், வாய்க்கால் வழியாக சென்று ஊத்துக்குளி அருகே நொய்யலில் கலக்கிறது.
- குளத்தில் உள்ள பறவைகள், மீன்களை உட்கொள்வதால், அவற்றிக்கும் நோய் பரவும் அபாயம் உள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில், நொய்யல் ஆற்றை ஆதாரமாக கொண்ட குளம், குட்டைகள் உள்ளன. மாவட்டத்தின் முதல் குளமாக இருப்பது சாமளாபுரம் குளம். செந்தேவிபாளையம் அணைக்கட்டில் இருந்து குளத்துக்கு தண்ணீர் கொண்டுவரப்படுகிறது.
ஏற்கனவே 80 சதவீத தண்ணீருடன் நிரம்பியிருந்த சாமளாபுரம் குளம் தற்போது நிரம்பி வழிகிறது. சாமளாபுரம் குளத்தில் இருந்து வெளியேறும் உபரிநீர், வழங்குவாய்க்கால் வழியாக பள்ளபாளையம் குளம் செல்கிறது.
பள்ளபாளையம் குளமும் வேகமாக நிறைந்து, உபரிநீர் பரமசிவம்பாளையம் ஓடை வழியாக வெளியேறிக்கொண்டிருக்கிறது. வாய்க்கால்கள் புனரமைக்கப்பட்டு பள்ளபாளையம் குளத்தின் கசிவு நீரும் வாய்க்கால்களில் சென்று கொண்டிருக்கிறது.
இதேபோல், ஆண்டி பாளையம் குளமும் நிரம்பி, அடர்மரங்கள் வளர்ந்த இரு தீவுகளுடன் கண்கொள்ளா காட்சியாக, அமைந்துள்ளது. முக்கியமான குளங்கள் நிரம்பியுள்ளதால் நஞ்சராயன் குளத்துக்கு வரும் பறவைகள், ஓய்வு நேரத்தில், சாமளாபுரம், பள்ளபாளையம், ஆண்டிபாளையம் குளங்களுக்கும் திரும்பி கொண்டிருக்கின்றன.பருவமழையால் குளம், குட்டைகள் நிரம்பி வருவதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயருமென விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அவிநாசி, திருமுருகன்பூண்டி வழியாக வரும் நல்லாறு, திருப்பூர் மாநகராட்சி பகுதி வழியாக செல்கிறது. நல்லாற்றின் குறுக்கே, 450 ஏக்கரில் நஞ்சராயன் குளம் அமைந்துள்ளது. குளத்தில் நிரம்பி வழியும் உபரிநீர், வாய்க்கால் வழியாக சென்று ஊத்துக்குளி அருகே நொய்யலில் கலக்கிறது.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுகள் நேரடியாக நல்லாற்றில் கலக்கின்றன. முறைகேடாக இயங்கும் சில சாயப்பட்டறைகள், 'பட்டன் - ஜிப்' பட்டறைகள் நல்லாற்றில் சாயக்கழிவை வெளியேற்றுகின்றன.
நல்லாறு முழுமையாக மாசுபட்டு, கடும் துர்நாற்றத்துடன், ஆகாயத்தாமரை படர்ந்து காணப்படுகிறது. சிறிய மழை பெய்தாலும், சாயக்கழிவை நல்லாற்றில் திறந்துவிடுவதாகவும், பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதற்கு ஆதாரமாக, நஞ்சராயன் குளத்தில் செத்து மிதக்கும் மீன்களை சாட்சியாக காட்டுகின்றனர்.
கடந்த சில நாட்களாக தொடர் மழை காரணமாக நல்லாற்றிலும் மழைநீர் செல்கிறது. இந்நிலையில், சாயக்கழிவை கலந்துவிடுவதால் குளத்தில் இருக்கும் மீன்கள் ஆங்காங்கே செத்து மிதப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், மழை பெய்யும் வாரங்களில், குளத்தில் உள்ள மீன்கள் செத்து மிதக்கும்.பல நாட்களுக்கு அகற்றாமல் இருக்கும் போது, கடும் துர்நாற்றம் வீசுகிறது. குளத்தில் உள்ள பறவைகள், மீன்களை உட்கொள்வதால், அவற்றிக்கும் நோய் பரவும் அபாயம் உள்ளது.
வலை மூலமாகவும், தூண்டில் போட்டும் குளத்தில் மீன் பிடிக்கின்றனர். சில நேரம் ஆபத்தை உணராமல் குளத்திற்குள் இறங்கி மீன் பிடிக்கின்றனர். சில நேரங்களில் இங்கு பிடிக்கப்படும் மீன்கள் சாப்பிட தகுதியற்றவையாகவும் இருக்கும்.மாவட்ட நிர்வாகம், குளத்தில் அடிக்கடி மீன்கள் செத்து மிதப்பதற்கான காரணத்தை கண்டறிந்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்றனர்.
பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பினர் கட்டுப்பாட்டில் அவிநாசியில் தாமரைக்குளம், சங்கமாங்குளம், சேவூர், கிளாக்குளம், நடுவச்சேரி, கருவலூர், அவிநாசிபாளையம் உள்ளிட்ட இடங்களில் பல 100 ஏக்கர் பரப்பளவில் குளங்கள் உள்ளன.
இதில் கிளாக்குளம், புஞ்சை தாமரைக்குளம் உள்ளிட்ட சாலையை ஒட்டியுள்ள குளங்களில், அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்துக்கு, குழாய் பதிக்கும் பணி நடந்தது. தோண்டப்பட்ட குழி சரிவர மூடப்படாததால் குளக்கரை பலவீனமடைந்தது.
இதே போன்று புஞ்சை தாமரைக்குளமும் பலவீனமடைந்தது. அதோடு எஞ்சிய பிற குளங்களின் கரைகளை பலப்படுத்தவும், குளங்களை ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றவும் 7 கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது பணிகள் துவங்கியுள்ளன.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், சேவூர் அருகே தத்துனூர்ஊராட்சியில் 846 ஏக்கரில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க கடந்த அ.தி.மு.க., அரசு திட்டமிடப்பட்டது. இதற்காக தத்தனூர், புலிப்பார், புஞ்சைத்தாமரைக்குளம் என 3 ஊராட்சிகளில் உள்ள, 845 ஏக்கர் நிலம் சிப்காட் நிறுவனத்துக்கு ஒப்படைக்க நில அளவை பணி மேற்கொள்ளப்பட்டது.அங்கு பேட்டரி கார்களுக்கான உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் அமைய தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் ஏற்படுத்தப்பட்டது. இதனால், ஆயிரம் வேலை வாய்ப்பு பெறுவர் என தெரிவிக்கப்பட்டது.இத்திட்டத்துக்கு அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் விளைவாக, 'சிப்காட் திட்டம் கைவிடப்படுகிறது என அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட மாட்டாது என்பதே முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலினின் எண்ணம் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் தெரிவித்தார்.
தற்போது அவிநாசி அருகேயுள்ள அன்னூரில் தொழிற்பேட்டை அமைப்பது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்
தத்தனூர் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக பெய்யும் மழையால் பசுமை திரும்பியுள்ளது. குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. இப்பகுதியில் விவசாயம் மேற்கொள்ளவே விவசாயிகள் விரும்புகின்றனர். தத்தனூர் மட்டுமின்றி, புலிப்பார், புஞ்சை தாமரைக்குளம், போத்தம்பாளையம் உட்பட அருகிலுள்ள ஊராட்சிகளில் 'சிப்காட்' தொழிற்பூங்காவுக்கு ஆட்சேபனை தெரிவித்து, கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பியுள்ளோம். எனவே சிப்காட் தொழிற்பேட்டை வராது என நம்புகிறோம் என்றனர்.
- வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாகவே பல குட்டைகளில் நீர் தேங்கியுள்ளன. சில குட்டைகள் நிரம்பும் தருவாயில் உள்ளன.
- பனங்குட்டையில் பாதி அளவுக்கு மேல் தண்ணீர் நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கிறது.
அவிநாசி:
அவிநாசி ஒன்றியத்திலுள்ள ஊராட்சிகளில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் குளம், குட்டைகள் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்டன. இதனால் மழையின் போது அவை நிரம்பி நிலத்தடி நீர்மட்டம் உயர வழிவகை ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாகவே பல குட்டைகளில் நீர் தேங்கியுள்ளன. சில குட்டைகள் நிரம்பும் தருவாயில் உள்ளன.
அவ்வகையில் சேவூர் அருகேயுள்ள முறியாண்டம்பாளையம் ஊராட்சியில் உள்ள பனங்குட்டை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கத்தின் மூலம் 1.10 லட்சம் ரூபாய் செலவில் தூர்வாரப்பட்டது.இதன் விளைவாக மழையின் போது சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வழிந்தோடி வரும் தண்ணீர் இக்குட்டையில் நிரம்பியது.
கடந்த 2020 ஜூலையில் பெய்த மழையில் இக்குட்டை நிரம்பியது. மீண்டும் கடந்த ஆண்டு 2021 நவம்பர் மாதம் பெய்த மழையில் குட்டை நிரம்பியது. தொடர்ச்சியாக கடந்த வாரங்களில் இரவு நேரங்களில் இப்பகுதியில் தொடர் மழை பெய்தது. இதில் பனங்குட்டையில் பாதி அளவுக்கு மேல் தண்ணீர் நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கிறது.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், பனங்குட்டை நிரம்புவதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.போர்வெல் மூலம் தண்ணீர் வினியோகிப்பதில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பிரச்சினை இருக்காது.மாநிலத்தில் வடகிழக்குப்பருவ மழை துவங்கியுள்ள நிலையில் மழை கைகொடுத்தால் குட்டை நிரம்பி தண்ணீர் வெளியேறும் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்