என் மலர்
நீங்கள் தேடியது "pond"
- ரூ.8 லட்சம் மதிப்பில் அண்ணாநகர் குளம் சீரமைப்பு பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது
- சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.
கந்தர்வகோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் கோமாபுரம் ஊராட்சியில் அண்ணா நகர் பொதுமக்கள் பயன்படுத்தும் குளத்தின் கரைகளை பலப்படுத்தவும், புதிய படித்துறை கட்டித் தரவும், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியில் சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்பில் பணிகள் நடைபெறுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ் அய்யா, ஊராட்சி மன்ற தலைவர் அன்பு, துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் ராஜமாணிக்கம் |மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- ஊரணியின் கரைகளில் கட்டப்பட்டிருந்த சுற்றுச் சுவர்கள் இடிந்து 2 வருடங்கள் ஆகிறது.
- விபத்துக்கள் ஏற்படும் முன் சுற்றுச்சுவரை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியின் அருகே உள்ள ஊரணியின் கரைகளில் கட்டப்பட்டிருந்த சுற்றுச் சுவர்கள் இடிந்து 2 வருடங்கள் ஆகிறது. இதனை அதிகாரிகள் அனைவரும் பார்த்துவிட்டு உடனே சரி செய்து தருவதாக உறுதி அளித்து சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு எந்த ஒரு தீர்வும் காணப்படவில்லை.
ஆவுடையானூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த மாணவ- மாணவிகள், பள்ளி குழந்தைகள் இதன் அருகே செல்லும் சாலை வழியாக சென்று வருகின்றனர். எனவே மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதியும் வாகனங்கள் அவ்வழியே அதிகம் செல்வதால் பெரும் விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன்பாக உடனடியாக ஊரணியின் சுற்றுச்சுவரை புதிதாக கட்டிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ராம்குமார் என்பவர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
- கீழப்பாவூர் குளத்தில் ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களை அப்புறப்படுத்த நடவடிக்கை
- கால்வாய் அருகில் ராட்சத ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் அதிக அளவில் துள்ளி விளையாடின.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூர் குளம் சுமார் 250 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளத்துக்கு சிற்றாற்றில் இருந்து தண்ணீர் வருகிறது. மேலப்பாவூர் குளம், கீழப்பாவூர் குளம் ஆகியவை நிரம்பிய பின்னர் அருணாப்பேரி குளம், நாகல்குளம், ஆலங்குளம் தொட்டியான்குளம் உட்பட பல்வேறு குளங்களுக்கு தண்ணீர் செல்லும்.
இந்த நிலையில் தென்காசி, குற்றாலம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த பலத்த மழையால் கீழப்பாவூர் பெரிய குளத்துக்கு தண்ணீர் வந்தது.
இந்நிலையில், பாவூர்சத்திரம்- சுரண்டை சாலையில் கீழப்பாவூர் குளத்துக்கு தண்ணீர் வரும் கால்வாய் அருகில் ராட்சத ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் அதிக அளவில் துள்ளி விளையாடின. இதை ஏராளமான மக்கள் அங்கு உள்ள பாலத்தின் மீது அமர்ந்து வேடிக்கை பார்த்தனர்.
வழக்கமாக குளத்தில் இருக்கும் கெளுத்தி மீன்கள் ஒல்லியான உடல்வாக்குடன் நீளமாக காணப்படும். ஆனால் மிகப்பெரிய அளவில் 10 கிலோவுக்கு மேல் எடை இருக்கக்கூடிய அளவுக்கு இருந்த இந்த மீன்களை பார்த்த மக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
இந்த மீன்கள் இந்தியாவில் வளர்க்க தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அந்த மீன்களை வீடியோ எடுத்து மீன்வளத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் சிலருக்கு பொதுமக்கள் அனுப்பி விசாரித்தபோது அவை ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள்தான் என்பது உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து மீனை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- 500 கி.மீட்டருக்கு நீர்நிலைகளில் பல்வேறு நாட்டு மரங்களை நடவு செய்ய உள்ளோம்.
- பொதுமக்கள் அனைவரும் நீர் நிலைகளை பாதுகாக்க விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
தரங்கம்பாடி:
செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம், சந்திரப்பாடி ஊராட்சியில் தொண்டு நிறுவனம் சார்பில் கடல்நீர் உட்புகுதலை தடுத்து நிலத்தடி நீரினை நன்னீராக மாற்றம் செய்திடும் முயற்சியாக குளம் வெட்டும் பணி தொடக்க விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை வகித்தார்.
ராமலிங்கம் எம்.பி., நிவேதா முருகன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி மன்ற தலைவர் பிரமிளா ராஜ்குமார் வரவேற்றார்.
இதில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு குளம் வெட்டும் பணியை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் முகஸ்டா லின், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கடல்நீர் உள்ளே புகாத வகையில் கடல் முகதுவாரத்தில் தடுப்பணைகள் கட்டி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இந்தியாவில் இருக்கின்ற பல மாநிலங்களில் அதிகமான நீளமான கடற்கரையை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
அந்த வகையில் தமிழகத்தில் 14 கடற்கரை மாவட்டங்கள் உள்ளன.
இந்த கடற்கரையோர மாவட்டங்களை பாதுகா ப்பதற்காக கிட்டத்தட்ட 500 கிலோ மீட்டருக்கு நீர்நிலைகளில் பல்வேறு நாட்டு மரங்களை நடவு செய்ய உள்ளோம்.
நீர் நிலைகளையும், நீராதாரங்களையும் பாதுகாக்க அரசு, அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
இந்த ஊராட்சியில் விரைவில் கருவேல மரங்களை அகற்றிவிட்டு புங்க மரங்களை நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது இங்கு பணி செய்ய உள்ள தொண்டு நிறுவனம் நீர் நிலைகளை காப்பாற்றும் வகையில் பல்வேறு இடங்களில் குளங்களை வெட்டி உள்ளன.
எனது சொந்த ஊரிலேயும் இந்த தொண்டு நிறுவனம் குளங்களை வெட்டி வருகின்றனர். பொதுமக்கள் அனைவரும் நீர் நிலைகளை பாதுகாக்க விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மாவட்ட நீர்வளத்துறை செயற்பொறியாளர் சண்முகம், ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், ஒன்றிய ஆணையர் மீனா, மயிலாடுதுறை ஒன்றிய குழு தலைவர் காமாட்சி மூர்த்தி, தொண்டு நிறுவன நிர்வாகி நமல்ராகவன், தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணா சங்கரி, தாசில்தார் காந்திமதி, ஒன்றிய கவுன்சிலர் செல்வம், மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மீனவ கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
- குளங்கள் கழிவுநீராலும், குப்பைகளாலும் சூழந்து துார்ந்து போகும் நிலையில் உள்ளது.
- வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக செல்பவர்கள் இந்த குளங்களில் நீராடி செல்வார்கள்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் மஞ்சக்கொல்லை ஊரா ட்சிக்கு உட்பட்ட புத்துார் கிராமம் உள்ளது.
இந்த கிராமத்தில் 1000-த்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்கள் பயன்படுத்தும் வகையில் இங்கு சிவன்கோயில் தெரு குளம், அய்யனார்குளம், தாமரைக்குளம் ஆகிய 3 குளங்கள் உள்ளது.
இந்த குளங்கள் தற்போது கழிவுநீராலும், குப்பைகள், கருவேல மரங்கள் சூழந்து துார்ந்து போகும் நிலையில் உள்ளது.
மேலும் தேங்கி உள்ள தண்ணீரால் துர்நாற்றம் வீசி வருகிறது. இதிலிருந்து விஷ பூச்சிகள் அப்பகுதியில் உள்ள குழந்தைகளை கடிப்பதால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை குளத்தை மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
வேளாங்கண்ணிக்கு பாதை யாத்திரையாக செல்பவர்கள் இந்த குளங்களில் குளித்துவிட்டு செல்வார்கள்.
தற்போது இந்த குளங்கள் தூர்வாரப்படாததால் அதில் தேங்கியுள்ள நீர் அசுத்தமாகி நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் குளத்தை துா ர்வாரி மக்கள் பயன்பா ட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சுவரானது 10 ஆண்டுகளுக்கு முன்பு சிறிது சிறிதாக இடிந்து விழத் தொடங்கியது.
- மலையான்குளம், பேராமணி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலை அந்த குளக்கரை தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கடையம்:
கடையம் ஒன்றியம் பாப்பான்குளம் ஊராட்சிக்குட்பட்ட மைலப்பபுரம் கிராமத்தில் பேராமணி குளம் உள்ளது. இக்குளத்தின் மூலம் சுமார் 300 ஏக்கர் பாசன வசதி பெற்று வரும் நிலையில் குளக்கரையின் கீழ்பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக சுற்றுச்சுவர் கட்டப்பட்டிருந்தது. அந்த சுற்றுச்சுவரானது 10 ஆண்டுகளுக்கு முன்பு சிறிது சிறிதாக இடிந்து விழத் தொடங்கியது.
தற்பொழுது கீழ்ப்பகுதியில் மொத்தமாக சுற்றுச்சுவர் இடிந்து காணப்படுவதால் மைலப்பபுரம், மலையான்குளம், பேராமணி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலை அந்த குளக்கரை தான் என்பதாலும் ஊருக்குள் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருவதால் அருகில் இருந்து அதிகளவில் மாணவ- மாணவிகள் சைக்கிள், ஆட்டோ போன்ற வாகனங்களில் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். எனவே விபத்துக்கள் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்காகவும், தொடர்ந்து குளக்கரையில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலையும் வலுவிழந்து வருவதால் பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக பேராமணி குளத்தில் இடிந்து விழுந்துள்ள சுற்று சுவரை மீண்டும் புதிதாக கட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் தாமரைக்குளம் சீரமைக்கும் பணி தொடங்கியது.
- ஆக்கிரமப்புகளை முழுமையாக அகற்றி தூர்வார வேண்டும்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் நகரில் மிகப்பெரிய குளமான தாமரைக் குளம் உள்ளது. பல ஏக்கர் பரப்பளவில் பறந்து விரிந்துள்ள இந்த தாமரைக் குளம் பொய்கை தீர்த்தம் என முன்பு அழைக்கப்பட்டு வந்தது.
சீர்காழி நகர் பகுதியில் பெரும் நீர் ஆதாரமாகவும் இந்த தாமரைக் குளம் இருந்தது இந்நிலையில் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த தாமரைக் குளம் தற்போது சீர்காழி நகர்பதி போகுது மக்களின் கோரிக்கையை ஏற்று கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 45 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி தொடங்கியது.
குளத்தில் உள்ள ஆக்கிரமப்புகள் அகற்றாமல் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தாமரை குளத்தில் உள்ள ஆக்கிரமப்புகளை முழுமையாக அகற்றி தூர்வார வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி தாமரைக் குளம் தூர்வாரும் பணியை திடீர் ஆய்வு செய்தார் .அப்போது தாமரைக் குளத்தில் நடைபெற்று வரும் சிமெண்ட் கட்டைகள் கட்டும் பணியை ஆய்வு செய்த கலெக்டர் மகாபாரதி பணிகள் தரமாக செய்திட அறிவுறுத்தினார்.
குளத்தின் படித்துறையை மீட்டு பார்க்கிறது முழுமையாக அகற்றி தூர்வாரிட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
இந்த ஆய்வின்போது சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா, தாசில்தார் செந்தில்குமார், நகராட்சி ஆணையர் வாசுதேவன், நகர் மன்ற உறுப்பினர்கள் ஜெயந்தி பாபு, நித்யா தேவி பாலமுருகன்,மற்றும் ஒப்பந்ததாரர் வெற்றி உடனிருந்தனர்.
- கடம்போடு வாழ்வு குளம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர்.
- தப்பி ஓடியவர்களை துரத்தி பிடித்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.
களக்காடு:
களக்காடு சப்-இன்ஸ் பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் கடம்போடு வாழ்வு குளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது களக்காடு கீழத்தெருவை சேர்ந்த சதீஸ் (வயது25), சுப்பிரமணியபுரம் வடக்குத் தெருவை சேர்ந்த பாலதுளசி (34) ஆகியோர் ஜே.சி.பி. எந்திரத்தின் மூலம் எந்தவித அனுமதியும் இன்றி மண்ணை திருடி வயல் வரப்பில் வைத்து கொண்டிருந்தனர்.
போலீசாரை பார்த்ததும் இருவரும் தப்பி ஓடினர். அவர்களை துரத்தி பிடித்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் மண்திருட்டுக்கு பயன்படுத்திய ஜே.சி.பி. எந்திரத்தையும் பறிமுதல் செய்தனர்.
- அதிஷ்டவசமாக குளத்தினுள் யாரும் இல்லாததால் எந்தவித பாதிப்பும் யாருக்கும் ஏற்படவில்லை.
- சம்பவம் குறித்து பொதுமக்கள் சிதம்பரம் வனசரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
காட்டுமன்னார்கோவில்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னர்கோவில் பகுதியை சுற்றி பல்வேறு சிறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு குளங்கள் உள்ளன.
இந்நிலையில் நேற்று மாலை காட்டுமன்னார்கோவில் வட்டம் திருநாரையூர் கிராமத்தில் உள்ள குளத்தில் 5 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று குளத்தின் கரை ஓரத்தில் கிடந்தது. இதை அந்த வழியாக கிராமத்திற்குள் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இந்தசெய்தி கிராமத்தில் காட்டுதீ போல பரவி உடனே பொதுமக்கள் ஏராளமானோர் ஒன்று திரண்டு குளத்தின் அருகே வந்து குளத்தின் ஓரத்தில் கிடந்த முதலையை பார்த்தனர். அதிஷ்டவசமாக குளத்தினுள் யாரும் இல்லாததால் எந்தவித பாதிப்பும் யாருக்கும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் சிதம்பரம் வனசரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த வனசரக அலுவலர் வசந்த், பாஸ்கரன் தலைமையிலான வன ஊழியர்கள் விரைந்தனர். பின்னர் குளத்தின் ஓரத்தில் இருந்த முதலையை லாவகமாக பிடித்து சிதம்பரம் அருகே வக்கிரமாரி ஏரியில் பாதுகாப்பாக விட்டனர். பொதுமக்கள் பயன்படுத்தி வரும் குளத்தில் முதலை புகுந்தது அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.
- வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களது இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
- போக்குவரத்து செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுச்சேரி:
மதகடிப்பட்டு பகுதியில் விழுப்புரம்-நாகப்பட்டி னம் 4 வழி சாலைப்பணி நடைபெற்று வருகிறது.
இச்சாலைக்காக சாலை யின் இரு புறங்களிலும் சர்வீஸ் சாலை அமைக்கப்ப ட்டுள்ளது. இந்த சர்வீஸ் சாலை முழுமை பெறாமல் இருப்பதால் ஆங்காங்கே பள்ளமாக உள்ளது.
இதனால் நேற்று பெய்த மழையின் காரணமாக அந்த பள்ளத்தில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கின்றது. அவ்வழியாக பள்ளி மாணவ-மாணவிகள் கல்லூரி செல்லும் மாணவர்கள் வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களது இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளா னார்கள்.
மேலும் காலை நேரத்தில் அதிக அளவில் வாகன போக்குவரத்து இருப்பதால் பள்ளப்பகுதியில் தண்ணீர் சூழ்ந்து உள்ளதால் வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து விபத்தும் ஏற்படுகிறது.
விபத்தினை தடுக்கும் வண்ணம் உடனடியாக நெடுஞ்சாலைத்துறை 2 பக்கங்களில் உள்ள சர்வீஸ் சாலையை சீரமைத்து சீரான போக்குவரத்து செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 1200-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
- ஏற்பாடுகளை போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்
மங்கலம்:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பாரத்சேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் 1200-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 26 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பொதுமக்கள் வழிபாடு செய்தனர். பல்லடம், மங்கலம், திருப்பூர், சாமளாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் சாமளாபுரம் குளத்தில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை சாமளாபுரம் குளத்தில் கரைப்பதற்கான ஏற்பாடுகளை போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் செய்திருந்தனர். இந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 9 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு சாமளாபுரம் குளத்தில் கரைக்கப்பட்டது.
- செல்லம்மாள் தனது மகன் ஜெயராமனுடன் அதே பகுதியில் வசித்து வந்தார்.
- சாலையோரத்தில் இருந்த குட்டையில் தவறி விழுந்துள்ளார்.
திருவாரூர்:
திருமக்கோட்டை சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி செல்லம்மாள் (வயது 75).
மணி இறந்து விட்ட நிலையில் செல்லம்மாள் தனது மகன் ஜெயராமனுடன் அதே பகுதியில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் செல்லம்மாள் நேற்று இரவு அப்பகுதியில் சாலையில் நடந்து சென்றபோது, சாலையோரத்தில் இருந்த குட்டையில் தவறி விழுந்து மூழ்கி இறந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆன்ரோஅஸ்வந்த் ஆரோக்கியராஜ் மற்றும் திருமக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.