என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "pondicherry plastic ban"
தமிழகத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதியில் இருந்து கேரிபேக் உள்ளிட்ட 14 வகையான எளிதில் மக்காத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. சுற்றுச்சூழல் மாசு, நீர் நிலை பாதிப்பு ஆகியவற்றை கருத்தில்கொண்டு தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தது.
தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டதால் பிளாஸ்டிக் விற்பனை, தயாரிப்பின் கள்ளச்சந்தையாக புதுச்சேரி மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பிளாஸ்டிக்கை தடை செய்ய வேண்டும் என பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க. வலியுறுத்தி வந்தது.
இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் மார்ச் முதல் தேதியில் இருந்து கேரிபேக் உள்ளிட்ட மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி இன்று அறிவித்துள்ளார். #Puducherrygovernment #Puducherrygovernmentban #plasticusageban
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் பூஜ்ய நேரத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் பேசியாதவது:-
உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வும் மக்களிடையே அதிகரித்து வருகிறது.
உலகில் பல நாடுகள் பிளாஸ்டிக்கிற்கு மாற்றான பொருட்களை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். நம் நாட்டிலும் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாக ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் பல மாநிலங்களில் பிளாஸ்டிக்கிற்கு தடை கொண்டுவந்துள்ளதோடு, அந்த தடையை முழுமையாக அமல்படுத்தி வருகின்றனர். தமிழக அரசும் வரும் ஜனவரி வரை காலக்கெடு அளித்து பிளாஸ்டிக் தடை செய்யப்படும் என அறிவித்துள்ளது. ஆனால் புதுவையில் பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்காக எந்தவித முன்னேற்பாடோ, நடவடிக்கைகளோ எடுக்கப்படவில்லை.
மழை காலத்தில் பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் கப்புகள் கால்வாய்களை அடைத்துக்கொள்வதால் பலவித இன்னல்கள் ஏற்படுகிறது. கழிவுநீர் ரோட்டில் கலந்துவிடுகிறது. பிளாஸ்டிக் கழிவுகளால் கடலும் மாசுபடுகிறது.
சிறிய மாநிலமான புதுவையில் பிளாஸ்டிக்கை ஒழிப்பது மிகவும் எளிதான காரியம். எனவே புதுவை மாநிலத்தில் பிளாஸ்டிக்கை ஒழிக்க அரசு உடனடியாக அறிவிப்பு வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் கந்தசாமி பேசும் போது, கடந்த 5 மாதத்திற்கு முன்பே முதல்-அமைச்சருடன் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வது குறித்து ஆலோசனை நடத்தினோம். அப்போது மாற்று ஏற்பாடுகளை செய்து கொண்டு பிளாஸ்டிக்கை தடை செய்வது என முடிவெடுத்தோம்.
பிளாஸ்டிக் பொருட்களால் ஏரி, குளம், கடல் போன்ற நீர்நிலைகள் மாசுபடுகிறது. எனவே புதுவையிலும் பிளாஸ்டிக்கை தடை செய்வோம். விரைவில் பிளாஸ்டிக் தடைக்கான அறிவிப்பு வெளியிடப்படும்.
வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள், புதுவையில் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களையும் தடுக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்