search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pondicherry special status"

    டெல்லியில் பாராளுமன்றம் முன்பு புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி புதுவை அனைத்து கட்சியினர் வருகிற 4-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். #PondicherryAllparties
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபைக்கு மத்திய பா.ஜனதா அரசு தனது கட்சியை சேர்ந்த சுவாமிநாதன், சங்கர் மற்றும் செல்வகணபதி ஆகிய 3 பேரை எம்.எல்.ஏ.க்களாக நேரடியாக நியமித்தது.

    மாநில அரசின் பரிந்துரையின்றி நியமிக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லாது என சென்னை ஐகோர்ட்டில் காங்கிரஸ் வழக்கு தொடர்ந்தது. ஆனால், வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு மத்திய அரசின் நியமனம் செல்லும் என தீர்ப்பளித்தது.

    தொடர்ந்து காங்கிரஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டில் சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு உறுதிசெய்தது.

    அதோடு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு உரிய அனைத்து உரிமைகளும் சலுகைகளும் ஓட்டுரிமையும் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு உண்டு என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் கூறியுள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு புதுவை அரசியல் கட்சிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஏனெனில் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு ஓட்டுரிமை அளிக்கப்பட்டிருப்பது மத்தியில் ஆளும் கட்சியின் தயவில்லாமல் புதுவையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட கட்சி ஆட்சியில் தொடர முடியாது என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக விவாதிக்க காங்கிரஸ் சார்பில் சமீபத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. அனைத்து கட்சி கூட்டத்தை புதுவை சட்டசபையின் பிரதான எதிர்க்கட்சிகள் என்ஆர் காங்கிரஸ், அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் புறக்கணித்தது.


    அனைத்து கட்சி கூட்டத்தில் இதற்கு நிரந்தர தீர்வாக புதுவைக்கு மாநில அந்தஸ்து கேட்பது என முடிவு செய்யப்பட்டது. கவர்னர் கிரண்பேடியின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் மாநில அந்தஸ்தை வலியுறுத்தி டெல்லி சென்று போராடவும் முடிவு செய்யப்பட்டது.

    இதன்படி வருகிற 4-ந்தேதி டெல்லியில் ஜந்தர் மந்திர் அருகில் புதுவை அனைத்து கட்சிகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட உள்ளது.

    இந்த தகவலை புதுவை மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் இன்று தெரிவித்தார்.   #PondicherryAllparties
    ×