என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » poondi kalaivannan
நீங்கள் தேடியது "Poondi Kalaivannan"
திருவாரூர் தொகுதி மக்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும் கலைஞர் மீதான பாசத்தை வாங்க முடியாது என்று பூண்டி கலைவாணன் தெரிவித்துள்ளார். #ThiruvarurByElection #DMK #PoondiKalaivannan
சென்னை:
திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளருக்கான நேர்காணல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடைபெற்றது. பின்னர் திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன் அங்கு போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த கலைவாணன், அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார்.
பின்னர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் பூண்டி கலைவாணன் கூறியதாவது:-
திருவாரூர் மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக அங்கு போட்டியிட்டு தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் கலைஞர். நாம் அனைவரும் விரும்பாத ஒரு சூழ்நிலையில் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இடைத்தேர்தலில் நிற்கும் வாய்ப்பினை எனக்கு வழங்கியதற்கு தலைவர் ஸ்டாலினுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கலைஞருக்குக் காணிக்கையாக மக்கள் அளிக்கும் வாக்குகளைப் பெற்று, மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.
“முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தேர்தல் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அவருடைய வழிகாட்டுதலோடு தேர்தலை எதிர்கொள்வோம். எவ்வளவு பணம் கொடுத்தாலும் திருவாரூரில் கலைஞரின் மீது மக்கள் வைத்திருக்கும் பாசத்தை எவரும் விலை கொடுத்து வாங்க முடியாது.
அ.தி.மு.க, அ.ம.மு.க. இரண்டையும் நாங்கள் போட்டியாக நினைக்கவில்லை. ஏனெனில் இரண்டு அணிகளும் ஒன்றாக இருக்கும்போது, கலைஞர் 68,366 வாக்குகள் அதிகமாக வாங்கினார். தற்போது தலைவர் இல்லையே என்பதைத் தவிர எங்களுக்கு வேறு எந்த சவாலும் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார். #ThiruvarurByElection #DMK #PoondiKalaivannan

×

X