search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "poor students"

    ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேருவதற்கு ‘நீட்’ தேர்வு முறை தடையாக இருப்பதாக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேருவதற்கு ‘நீட்’ தேர்வு முறை தடையாக இருந்ததாகவே கருதுகிறேன். தமிழக கல்வித்திட்டம், பயிற்சி முறை போன்றவற்றில் அதிக முக்கியத்துவம் கொடுத்து, மாணவர்களை ‘நீட்’ தேர்வு முறைக்கு முழுமையாக தயார்படுத்தவேண்டிய நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபடவேண்டும். ‘நீட்’ தேர்வின் முடிவில் தமிழகத்தை சேர்ந்தவர்களின் தேர்ச்சி சதவீதம் மிக குறைவு.

    அது மட்டுமல்ல முதல் 50 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த ஒரு மாணவி மட்டுமே இடம் பெற முடிந்தது. தமிழகத்தை சேர்ந்த மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறைந்ததற்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு. ‘நீட்’ தேர்வு முறையில் நடைபெற்ற குளறுபடிகளே இதற்கு காரணம்.

    தமிழக மாணவர்கள் குறிப்பாக கிராமம் முதல் நகரம் வரையுள்ள ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேருவதற்கு ‘நீட்’ தேர்வு முறை தடையாக இருந்ததாகவே கருதுகிறேன். மேலும் தமிழக கல்வித் திட்டம், பயிற்சி முறை போன்றவற்றில் அதிக முக்கியத்துவம் கொடுத்து அதன் அடிப்படையில் மாணவர்களை ‘நீட்’ தேர்வு முறைக்கு முழுமையாக தயார் படுத்தவேண்டிய நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபடவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    ×