என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » potato house
நீங்கள் தேடியது "Potato House"
அமெரிக்காவில் 2012-ம் ஆண்டு மிகப் பெரிய உருளைக்கிழங்கு விளைவிக்கப்பட்டு தற்போது அது இரட்டை படுக்கை கொண்ட சிறிய தங்கும் விடுதியாக அமைக்கப்பட்டுள்ளது. #PotatoHouse #PotatoAirbnb
நியூயார்க்:
அமெரிக்காவின் இடாகோ மாகாணத்தில் தலைநகர் போய்சில் உருளைக்கிழங்கு பயிரிடுவதை ஊக்குவிக்கும் விதமாக, கடந்த 2012-ம் ஆண்டு மிகப் பெரிய உருளைக்கிழங்கு விளைவிக்கப்பட்டது.
28 அடி நீளம் மற்றும் 12 அடி அகலத்தில் 6 டன் எடையுடன் விளைந்த இந்த உருளைக் கிழங்கு உலகிலேயே மிகப் பெரிய உருளைக்கிழங்காக அறியப்பட்டது. அதன் பின்னர் மக்களின் பார்வைக்காக இந்த உருளைக்கிழங்கு ராட்சத லாரி மூலம் அமெரிக்கா முழுவதும் சுற்றிவந்தது. கடந்த ஆண்டு இறுதியில் இந்த சுற்றுப்பயணம் முடிந்தது.
இந்த நிலையில், தற்போது இந்த உருளைக் கிழங்கு இரட்டை படுக்கை கொண்ட சிறிய தங்கும் விடுதியாக மாற்றப்பட்டுள்ளது. உருளைக்கிழங்கை குடைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த தங்கும் விடுதியில், சொகுசு இருக்கைகள், படுக்கை மற்றும் கழிவறை என அனைத்து வசதிகளும் உள்ளன. இது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.
இந்த விடுதியில் ஒரு நாள் தங்குவதற்கு 200 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.14 ஆயிரம்) வசூலிக்கப்படுகிறது. அப்படி இருந்தும் மே மாதம் முழுவதும் இந்த விடுதி முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. #PotatoHouse #PotatoAirbnb
அமெரிக்காவின் இடாகோ மாகாணத்தில் தலைநகர் போய்சில் உருளைக்கிழங்கு பயிரிடுவதை ஊக்குவிக்கும் விதமாக, கடந்த 2012-ம் ஆண்டு மிகப் பெரிய உருளைக்கிழங்கு விளைவிக்கப்பட்டது.
28 அடி நீளம் மற்றும் 12 அடி அகலத்தில் 6 டன் எடையுடன் விளைந்த இந்த உருளைக் கிழங்கு உலகிலேயே மிகப் பெரிய உருளைக்கிழங்காக அறியப்பட்டது. அதன் பின்னர் மக்களின் பார்வைக்காக இந்த உருளைக்கிழங்கு ராட்சத லாரி மூலம் அமெரிக்கா முழுவதும் சுற்றிவந்தது. கடந்த ஆண்டு இறுதியில் இந்த சுற்றுப்பயணம் முடிந்தது.
×

X