search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pottery production"

    • மண் பாண்டங்கள் உற்பத்தி செய்யும் தொழிலில் 25க்கும் அதிகமான குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
    • அகல் விளக்குகள் தயாரிப்புக்கு, பிரத்யேகமான மண் தேவையாகும்.

    உடுமலை :

    உடுமலை அருகே புக்குளம், மரிக்கந்தை, பூளவாடி, பள்ளபாளையம், சாளையூர் உட்பட பல கிராமங்களில் பாரம்பரியமாக மண் பாண்டங்கள் உற்பத்தி செய்யும் தொழிலில் 25க்கும் அதிகமான குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.அகல் விளக்குகள் தயாரிப்புக்கு, பிரத்யேகமான மண் தேவையாகும். இவ்வகை மண் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு கோதவாடி குளத்திலும், திருப்பூர் மாவட்டம் கொழுமம் கோதையம்மன் குளத்தில் மட்டுமே கிடைக்கிறது.

    தொழிலாளர்கள் கூறுகையில், கோதவாடி குளத்தில் கிடைக்கும் மண் மட்டுமே, மண்பாண்டங்கள் மற்றும் அகல் விளக்கு தயாரிப்புக்கு உகந்ததாகும்.ஆனால், அங்கிருந்து மண் எடுத்து வர பல்வேறு விதிமுறைகளை வருவாய்த்துறையினர் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே வாகன வாடகை உட்பட காரணங்களால், மண் எடுத்து வர செலவாகிறது. ஒவ்வொரு முறையும் வாகனத்தோடு சென்று வருவாய்த்துறை தடை விதிப்பதால் ஏமாற்றத்துடன் திரும்பி வர வேண்டியுள்ளது.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நீர்நிலைகளில் இருந்து மண்பாண்ட தொழிலாளர்கள் விலையில்லாமல், களிமண், வண்டல் மண், சவுடு மண், சரளை மண் எடுத்து கொள்ள அனுமதித்து, விலையில்லாமல் பெற்று கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.இந்த அறிவிப்பு முறையாக செயல்படுத்தப்படவில்லை. உள்ளூர் வருவாய்த்துறை அதிகாரிகள், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு நேரடியாக அனுமதிச்சீட்டு வழங்க வேண்டும்.இதே போல் கோதையம்மன் குளத்திலும் மண் எடுப்பதற்கான அனுமதி அளிக்கப்பட்டால் தங்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்.இது குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.  

    ×