search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Practice counting and writing"

    • 178 பேருக்கு எண்ணும் எழுத்தும் ஆசிரிய பயிற்றுநர்கள் மூலம் பயிற்சி வழங்கப்பட்டது.
    • கடந்த கல்வி ஆண்டுகளில் கொரோனா காலகட்டங்களில் பள்ளி குழந்தைகளின் வருகை குறைவாக இருந்தது.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், வெள்ளகோவில் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், மாவட்ட ஆசிரிய கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் வெள்ளகோவில் ஒன்றியத்தில் உள்ள ஆரம்பப்பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், தலைமை ஆசிரியர் என மொத்தம் 178 பேருக்கு எண்ணும் எழுத்தும் ஆசிரிய பயிற்றுநர்கள் மூலம் பயிற்சி வழங்கப்பட்டது. கடந்த கல்வி ஆண்டுகளில் கொரோனா காலகட்டங்களில் பள்ளி குழந்தைகளின் வருகை குறைவாக இருந்தது. தற்போது இந்த கல்வியாண்டில் மாணவ மாணவிகளின் வருகையை அதிகப்படுத்துவதற்காகவும், கற்றல் திறனை 1 முதல் 3ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு அதிகப்படுத்த துணை கருவிகள் மூலம் ஆடல் பாடல், நடனம், விளையாட்டு, கரும்பலகை, செய்தித்தாள் வாசித்தல், பாடப்புத்தக பயிற்சி, சூழ்நிலை கல்வி போன்றவைகள் மூலம் கற்றல் திறனை அதிகப்படுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்புகளுக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆசிரிய கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், வெள்ளகோவில் வட்டார கல்வி அலுவலகத்தினர் செய்திருந்தனர்.

    • 315 ஆசிரியர்கள் பங்கேற்பு
    • மாணவர்களின் கற்றல் குறித்து ஆலோசனை

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுரையின்பேரில் அரக்கோணம் ஒன்றியத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் 1 முதல் 5 வகுப்பு ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவ வட்டார அளவிலான பயிற்சி அரக்கோணம் ஜோதி நகர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசினர் ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல் நிலைப் பள்ளியிலும் உள்ள மையங்களில் வட்டார வள மைய மேற் பார்வையாளர் மனோன்மணி தலைமையில் சுமார் 315 ஆசி ரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

    பயிற்சிகள் நடைபெறும் மையங்களை ராணிப்பேட்டை மாவட்ட தொடக்ககல்வி அலுவலர் ஆர்.பிரேமலதா மற்றும் வட்டார கல்வி அலுவலர் ஆறுமுகம் ஆகியோர் பார்வை யிட்டு ஆசிரியர்களுக்கு அறிவியல் மனப்பான்மை மற்றும் சமூகத் திறன்களுடன் மாணவர்களின் கற்றல் நிலையை அடிப்படையாகக் கொண்டு அளிக்கப்பட வேண்டும் என்று ஆலோசனைகளை வழங்கினர்.

    ×