என் மலர்
நீங்கள் தேடியது "PRADOSHA WORSHIP"
- கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள, நந்தி பசுவானுக்கு கனி பிரதோஷத்தை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட, 18 வகையான பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது
- இதைப் போல் கிருஷ்ணராயபுரம்.திருக்கண்மல்லிஸ்வரர் கோவில், லாலாப்பேட்டை சிவன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடை பெற்றது.
கரூர் :
கரூர் மாவட்ட அதனை சுற்றி உள்ள பகுதிகளில் நேற்று சனி பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்றது.
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள, நந்தி பசுவானுக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட, 18 வகையான பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து, மூலவர், நடராஜர் மற்றும் நந்தி பெருமானுக்கு நடத்த, மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதைப் போல் கிருஷ்ணராய புரம்.திருக்கண்மல்லிஸ்வரர் கோவில், லாலாப்பேட்டை சிவன் கோவில், க.பரமத்தி அருகில் புண்னம் உள்ள புன்னைவனநாதர் கோவில், க.பரமத்தி சடையீஸ்வர கோவில், மோளபாளையம் மரகதீஸ்வரர் கோவில் சின்னதாராபுரம் முனி முக்தீஸ்வரர் ஆகிய கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.
- ராமநாதீஸ்வரர் கோவிலில் 108 சங்கு அபிஷேகம் நடந்தது
- பக்தர்களுக்கு அன்னதானம்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் இரட்டை சிவாலயத்தில் நேற்று மாலை நந்திபகவானுக்கு பிரதோஷ வழிபாடு (சோமவார பிரதோஷம்) நடைபெற்றது.
தொடர்ந்து பிரதோஷ நாயகர் உட்பிரகார உலா நடைபெற்றது.பக்தர்க ளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல் கண்ணமங்கலம் ராமநாதீஸ்வரர் கோவிலில் கார்த்திகை சோமவாரம் முன்னிட்டு 108 சங்கு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. மேலும் நந்திபகவானுக்கு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
பக்தர்கள் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சந்தவாசல் சுந்தரேஸ்வரர் சமேத வடிவாம்பிகை கோவிலில் நேற்று சோமவார சங்காபிஷேக பூஜையும், மாலையில் பிரதோஷ வழிபாடும் நடைபெற்றது.
- 100 ஆண்டு பழமை வாய்ந்த இரத்னாம்பிகை உடனமர் இரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
- திரளான பக்தர்கள் கலந்துகொணடு சிவன் நந்தியை பற்றி பக்தி பாடல்களை பாடி சாமி தரிசனம் செய்தனர்.
உடுமலை :
உடுமலை தில்லை நகரில் எழுந்தருளியுள்ளா 100 ஆண்டு பழமை வாய்ந்த இரத்னாம்பிகை உடனமர் இரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
பிரதோஷத்தை யொட்டி மூலவர், நந்தி உள்ளிட்ட கடவுள்களுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.அப்போது சந்தனம்,திருமஞ்சனம், பஞ்சாமிர்தம்,பால்,மஞ்சள்,இளநீர்,பழரசம்,தேன்,பஞ்சாமிர்தம்,பன்னீர், கரும்புச்சர்க்கரை, சந்தனாதி தைலம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்கள்கொண்டு அபிசேகம் நடத்தப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொணடு சிவன் நந்தியை பற்றி பக்தி பாடல்களை பாடி சாமி தரிசனம் செய்தனர்.பிரதோஷ பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நடந்த பிரதோஷ வழி பாடு
- 18 வகையான பல்வேறு வாசனை திரவியங் களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது
கரூர்,
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நடந்த பிரதோஷ வழி பாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
பிரதோஷத்தை யொட்டி, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி சிலைக்கு நேற்று மாலை 4:30 மணிக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், சந் தனம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட 18 வகையான பல்வேறு வாசனை திரவியங் களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
இதில், ஏராளமான பக்தர்கள் பங் கேற்று வழிபட்டனர். தொடர்ந்து, மூலவர், நடராஜர் மற்றும் நந்தி சிலைக்கு மகா தீபாராதனை நடந்தது. வழிபாட்டில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
- கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- பின்னர் சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
பின்னர் சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். இதில் சிறப்பு அலங்காரத்தில் நந்தி பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பரமேஸ்வரர், நந்தி பெருமான் உள்பட பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல் பரமத்தி வேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசிவிஸ்வ
நாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், எல்லையம்மன் கோயிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரர், பரமத்தி வேலூர் வல்லப விநாயகர் கோவிலில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர், வடகரையாத்தூர் சிவன் கோவில், ஜேடர் பாளையம் சிவன் கோவில், பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனி ஆண்டவர் கோவிலில் உள்ள சிவன் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனை, சிறப்பு அலங்காரம் நடை பெற்றது. விழாவில் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாத சுவாமி சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
- சனீஸ்வரலிங்கம், நந்திகேஸ்வரர், சிவனுக்கும் பால், தயிர் உட்பட 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாத சுவாமி சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
இதனை முன்னிட்டு சனீஸ்வரலிங்கம், நந்திகேஸ்வரர், சிவனுக்கும் பால், தயிர் உட்பட 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது பின்னர் சுவாமியும் அம்மனும் ரிஷப வாகனத்தில் கோவிலை சுற்றி வலம் வந்தனர்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். ஏற்பாடுகளை பா.ஜ.க. மாநில விவசாய அணி துணைத்தலைவர் மணி முத்தையா, பள்ளி நிர்வாகி வள்ளிமயில், சோழவந்தான் அரிமா சங்க தலைவர் டாக்டர் மருது பாண்டியன் உட்பட பிரதோஷ கமிட்டியினர் செய்திருந்தனர்.
ரவிச்சந்திர பட்டர் பரசுராம் சிவாச்சாரியார் ஆகியோர் பூஜைகள் செய்தனர்.
- சக்திமலை முருகன் கோவிலில் அமைந்துள்ள சிவன் கோவிலில் மார்கழி மாத பிரதோஷ பூஜை நடைபெற்றது.
- நந்தி தேவருக்கும் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
அரவேணு,
கோத்தகிரி சக்திமலை முருகன் கோவிலில் அமைந்துள்ள சிவன் கோவிலில் மார்கழி மாத பிரதோஷ பூஜை நடைபெற்றது. இதனையொட்டி சிவனுக்குப் பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்து அபிஷேக பூஜையும், தீபாராதனையும் நடந்தது. நந்தி தேவருக்கும் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த மார்கழி மாத பிரதோஷ பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- நவகிரக கோட்டையில் பிரதோசத்தை முன்னிட்டு அம்மையப்பர் கோவில் திருவீதி உலா நடைபெற்றது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
பல்லடம் :
பல்லடம் பட்டேல் வீதியில் உள்ள அருளானந்த ஈஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிவலிங்கத்திற்கு அபிஷேக பூஜை,சிறப்பு யாகம் ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதேபோல பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் நவகிரக கோட்டையில் பிரதோசத்தை முன்னிட்டு அம்மையப்பர் கோவில் திருவீதி உலா நடைபெற்றது.
காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் சிறப்பு பூஜைகளை நடத்தி வைத்தார். இதேபோல பல்லடம் பொங்காளியம்மன் கோவில், மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
- சிவலிங்கத்திற்கு அபிசேக பூஜை,சிறப்பு யாகம் ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
பல்லடம் :
பல்லடம் பட்டேல் வீதியில் உள்ள அருளானந்த ஈஸ்வரர் கோவிலில் பிரதோசத்தை முன்னிட்டு சிவலிங்கத்திற்கு அபிசேக பூஜை,சிறப்பு யாகம் ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதேபோல பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் நவகிரக கோட்டையில் பிரதோசத்தை முன்னிட்டு அம்மையப்பர் கோவில் திருவீதி உலா நடைபெற்றது.
காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் சிறப்பு பூஜைகளை நடத்தி வைத்தார். இதேபோல பல்லடம் பொங்காளியம்மன் கோவில், மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவில்,அல்லாளபுரம் உலகேஸ்வரர் கோவில், உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
- சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
அணைக்கட்டு:
பாக்கம் கைலாயநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. அணைக்கட்டு அடுத்த பாக்கம் கிராமத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த உமாமகேஸ்வரி உடனுறை கைலாயநாதர் கோவில் உள்ளது.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது.
இதில் சிவபெருமான் மற்றும் நந்தி பகவானுக்கு 108 லிட்டர் பால் மற்றும் தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர், சாமிக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- சிறப்பு அலங்காரம், தேன், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள்,சந்தனம், மலர், பன்னீர் அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது.
- விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் சோழீஸ்வரர் கோவில், கண்ணபுரம் விக்ரமசோழீஸ்வரர் கோவில், மயில்ரங்கம் வைத்தியநாத சுவாமி , உத்தமபாளையம் காசிவிசுவநாதர் கோவில், வெள்ளகோவில், எல்.கே.சி நகர், புற்றிடம் கொண்டீஸ்வரர் கோவில்களில் நேற்று மாலை பிரதோஷத்தையொட்டி சிவபெருமானுக்கும், நந்திக்கும் சிறப்பு அலங்காரம், தேன், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள்,சந்தனம், மலர், பன்னீர் அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் சிறப்பு பூஜைகளை நடத்தி வைத்தார்.
- உலகேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பல்லடம்:
பல்லடம் பட்டேல் வீதியில் உள்ள அருளானந்த ஈஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிவலிங்கத்திற்கு அபிஷேக பூஜை, சிறப்பு யாகம், ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதேபோல பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் நவகிரக கோட்டையில் பிரதோஷத்தை முன்னிட்டு அம்மையப்பர் கோவில் திருவீதி உலா நடைபெற்றது. காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் சிறப்பு பூஜைகளை நடத்தி வைத்தார். இதேபோல பல்லடம் பொங்காளியம்மன் கோவில், சந்தைப்பேட்டை கோட்டைவிநாயகர் கோவில், மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவில்,அல்லாளபுரம் உலகேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.