என் மலர்
நீங்கள் தேடியது "pregnant"
- இந்த சம்பவம் ஃபுஜியன் மாகாணத்தில் நடந்துள்ளது.
- கர்ப்பிணித் தாயின் பனிக்குடம் உடைந்து விட்டதாக சிறுவன் தெரிவித்துள்ளான்.
சீனாவில் 13 வயது சிறுவன் தனது தாய்க்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார்.
இந்த சம்பவம் ஃபுஜியன் மாகாணத்தில் நடந்துள்ளது. 13 வயது சிறுவன் ஒருவன் அவசர சிகிச்சை மையத்தை அழைத்து, தனது 37 வார கர்ப்பிணித் தாயின் பனிக்குடம் உடைந்து விட்டதாகவும், அவருக்கு கடுமையான வலி ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
ஆம்புலன்ஸ் வர தாமதமானதால், செல்போனில் மருத்துவ உதவியாளர் சென் சாயோஷூனின் ஆலோசனையின் படி தனது தாய்க்கு சிறுவன் பிரசவம் பார்த்துள்ளார். இதில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
சிறிது நேரத்திற்குப் பிறகு, மருத்துவ உதவியாளர்கள் வந்து தாயையும் குழந்தையையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர்.
- 2008 ஆம் ஆண்டு சந்தியா என்ற பெண் சிசேரியன் முறையில் குழந்தை பெற்றெடுத்தார்.
- பல ஆண்டுகளாக சந்தியாவிற்கு தீராத வயிற்றுவலி இருந்துள்ளது
உத்தரபிரதேசத்தில் பிரசவத்தின்போது மருத்துவரின் கவனக்குறைவால் பெண்ணின் வயிற்றுக்குள் கத்தரிக்கோல் வைத்து தைக்கப்பட்ட சம்பவம் 17 ஆண்டுகளுக்கு பின் எக்ஸ்ரே மூலம் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோவில் 2008 ஆம் ஆண்டு சந்தியா என்ற பெண் ஷி மெடிக்கல் கேர் என்ற மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்தார். அதன்பின் பல ஆண்டுகளாக சந்தியாவிற்கு தீராத வயிற்றுவலி இருந்துள்ளது. இதற்காக பல மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
சமீபத்தில் லக்னோ மருத்துவக் கல்லூரியில் சந்தியா எடுத்த எக்ஸ்ரேயில் அவரது வயிற்றுக்குள் கத்தரிக்கோல் இருப்பது தெரியவந்தது. மார்ச் 26 ஆம் தேதி அவரது வயிற்றிலிருந்த கத்திரிக்கோலை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றினர்.
இதனையடுத்து தனது மனைவி சந்தியாவிற்கு பிரசவம் பார்த்த மருத்துவர் புஷ்பா ஜெய்ஸ்வால் மீது கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், 17 ஆண்டுகளாக தனது மனைவி வேதனைப்பட்டதற்கு மருத்துவர் புஷ்பா ஜெய்ஸ்வாலின் அலட்சியம் தான் காரணம் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
- ஏற்காட்டில் ஒரு பெண்ணுக்கு ஆம்புலன்சில் குழந்தை பிறந்தது.
- ஆம்புலன்சை சாலையின் ஓரமாக நிறுத்திய ஊழியர்கள், பெண்ணுக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ள கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 25). கூலி தொழிலாளி. இவரது மனைவி நந்தினி (20). நிறைமாத கர்ப்பிணியான நந்தினிக்கு இன்று அதிகாலை 1 மணி அளவில் பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஏற்காடு அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் பணியில் இருந்த சிகாமணி மற்றும் ஓட்டுநர் ஆசைத்தம்பி ஆகியோர் வந்து நந்தினியை வாழவந்தி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
ஆனால் ஆத்து பாலம் அருகே ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது நந்தினிக்கு பிரசவ வலி அதிகமானது. அதை தொடர்ந்து ஆம்புலன்சை சாலையின் ஓரமாக நிறுத்திய ஊழியர்கள், நந்தினிக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தனர்.
இதையடுத்து 1.30 மணி அளவில் நந்தினிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக நந்தினி, குழந்தையை சேலம் அரசு மருத்துவமனை கொண்டு வந்து சேர்த்தனர். குறித்த நேரத்தில் பிரசவம் பார்த்து தாயையும், சேயையும் காப்பாற்றிய ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர் சிகாமணி மற்றும் ஓட்டுநர் ஆசைத்தம்பி ஆகியோருக்கு நந்தினியின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
- கள்ளக்காதல் மூலம் கர்ப்பிணியான பெண் குழந்தையுடன் மாயமானார்.
- அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
சாத்தூர் விவேகானந்தர் புரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 36). இவரது மனைவி அழகு ராணி (25). இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது.
கடந்த சில மாதங்களாக அழகு ராணி தூத்துக்குடியைச் சேர்ந்த பாண்டி என்பவருடன் பழகி வந்தார். இது குறித்து கணவர் கேட்டபோது தான் சகோதர முறையில் பழகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று அழகு ராணி தனது கணவரிடம் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் அதற்கு தூத்துக்குடியைச் சேர்ந்த பாண்டி தான் காரணம் என கூறியுள்ளார். இதனால் மாரிமுத்து அதிர்ச்சி அடைந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த அழகு ராணி தனது 5 வயது மகளுடன் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாரிமுத்து அம்மாபட்டி போலீசில் புகார் செய்தார். அதில் தனது மனைவி மாயமான தொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த பாண்டி மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
- சர்க்கரை பொங்கல், தயிர்சாதம், புளியோதரை, எலுமிச்சை சாதம், காய்கறி பிரியாணி போன்றவை வழங்கபட்டது.
கமுதி
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில், தமிழக அரசின் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
தி.மு.க. மாவட்ட செயலா ளரும், சட்டமன்ற உறுப்பி னருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஏற்பாட்டில் 286 கர்ப்பிணி பெண்களுக்கு இந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
இதில் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்விபோஸ், துணைத் தலைவர் சித்ராதேவி அய்யனார், தெற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன், மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன், கமுதி நகர செயலாளர் பாலமுருகன், அபிராமம் நகர செயலாளர் முத்து ஜாகிர்உசேன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் மணிமேகலை, ராஜ கோபால், ஒன்றிய கவுன்சி லர்கள் முத்துக்கிளி, உதயகுமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் நாகரத்தினம், நாகமணி, காவடிமுருகன் மற்றும் சமூக நலத்துறை அலுவலர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
அனைவரும் கர்ப்பிணி பெண்களுக்கு ஆசீர்வாதம் வழங்கினர். பின்னர் தமிழக அரசின் சார்பில் வளையல், குங்குமம், சேலை, அனைத்து வகை பழங்களுடன் கொண்ட சில்வர் தட்டு வழங்கப்பட்டது.
பின்னர் கர்ப்பிணி பெண்களுக்கு சர்க்கரை பொங்கல், தயிர்சாதம், புளியோதரை, எலுமிச்சை சாதம், காய்கறி பிரியாணி போன்றவை வழங்கபட்டது.
- தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் இலவச மருத்துவ முகாம்
- கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் நலத்திட்ட உதவி
தாராபுரம்:
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் இலவச மருத்துவ முகாம் அலங்கியம் அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.முகாமுக்கு வட்டார மருத்துவர் டாக்டர் தேன்மொழி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.மகேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் தேவிகுப்பு, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி.செந்தில்குணர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
- கர்ப்பிணி பெண் மாயமானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை
மதுரை பெத்தானியாபுரம் மோதிலால் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி (26). இவரது மனைவி சிவரஞ்சனி (19). இருவருக்கும் கடந்த ஆகஸ்டு மாதம் நடந்தது. கர்ப்பிணியான சிவரஞ்சனி கடந்த 7-ந்தேதி இரவு தனது அண்ணன் வீட்டுக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை.
இதுகுறித்து கணவர் கருப்பசாமி கொடுத்த புகாரின்பேரில் கரிமேடு காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஆசை வார்த்தை கூறி அஜய் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
- அஜய் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கோவை,
கோவை பேரூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது கல்லூரி மாணவி. இவர் தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு ஈச்சனாரியை சேர்ந்த தொழிலாளி அஜய் (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5-ந் தேதி அஜய் மாணவியை மருதமலை ரோட்டில் உள்ள காலி இடத்துக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அஜய் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
கடந்த சில நாட்களாக மாணவி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவரை அவரது பெற்றோர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.
இது குறித்து மாணவி தனது காதலன் அஜயிடம் தெரிவித்தார். மேலும் தன்னை உடனடியாக திருமணம் செய்யும்படி கூறினார். அதற்கு அவர் கருவை கலைத்து விடு என கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
இதனால் அதிர்ச்சிய டைந்த மாணவி இது குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அனைத்து மகளிர் போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர். அவர் அளித்த புகாரின் பேரின் கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கி அஜய் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- அதிகாரிப்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சந்தியா (வயது 23) என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
- கதவை திறந்து வெளியே வந்த சந்தியா, வாந்தி எடுத்த நிலையில் அருகில் இருந்த சாக்கடை கால்வாய் தவறி விழுந்தார்.
சேலம்:
சேலம் அம்மாபேட்டை அதிகாரிப்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சந்தியா (வயது 23) என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
தற்போது சந்தியா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு அவருக்கு வாந்தியுடன், தலை சுற்றல் ஏற்பட்டது. கதவை திறந்து வெளியே வந்த சந்தியா, வாந்தி எடுத்த நிலையில் அருகில் இருந்த சாக்கடை கால்வாய் தவறி விழுந்தார்.
இதனை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சந்தியா பரிதாபமாக இருந்தார். தகவல் அறிந்த வீராணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.
சாக்கடை கால்வாயில் கர்ப்பிணி விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சந்தியாவின் உடலை பார்த்து அவரது கணவர், உறவினர்கள் கதறி அழுதது காண்போர் கண்களை குளமாக்கியது.
- அவர்களுக்குஇடையேயான தொடர்பு அவரது அக்கா கணவரான உடுமலை தாலுகா சர்க்கார் புதூரைச் சேர்ந்த தங்கராஜ்(29) என்பவருக்கு தெரியவந்தது.
- உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதாவிடம் புகார் தெரிவித்தார்.
உடுமலை:
மடத்துக்குளத்தை அடுத்த நரசிங்காபுரத்தை சேர்ந்தவர் வீரமுத்து (வயது 23) , டிரைவர் .இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க பெண்ணை காதலித்து வந்து உள்ளார். அந்தப் பெண் பத்தாம் வகுப்பில் பாதியில் நின்று விட்டார். இதை சாதகமாகக் கொண்டு அந்த பெண்ணை வீரமுத்து ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் உறவில் ஈடுபட்டு உள்ளார்.
அவர்களுக்குஇடையேயான தொடர்பு அவரது அக்கா கணவரான உடுமலை தாலுகா சர்க்கார் புதூரைச் சேர்ந்த தங்கராஜ்(29) என்பவருக்கு தெரியவந்தது. அதைத் தொடர்ந்து தங்கராஜ் அவர்கள் இருவருக்குமான உறவை வெளியில் சொல்லி விடுவேன் என்று மிரட்டி அந்த பெண்ணை பாலியல் உறவுக்கு உட்படுத்தி உள்ளார். இருவரும் மாறி மாறி சிறுமியை பாலியல் உறவுக்கு உட்படுத்தியதில் அவரது உடலில் மாற்றங்கள் ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து அந்த சிறுமி பரிசோதனை மேற்கொண்டார்.அதில் நான்கு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து தனது காதலனான வீரமுத்துவை சந்தித்து திருமணம் செய்து கொள்ளுமாறு சிறுமி கேட்டு உள்ளார். அதற்கு அவர் உனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு நான் தகப்பன் அல்ல உனது அக்கா வீட்டுக்காரரை போய் கேள் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அந்த சிறுமி உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதாவிடம் புகார் தெரிவித்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.அதன் முடிவில் வீரமுத்து மற்றும் தங்கராஜ் இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஆசை வார்த்தை கூறி காதலனும், அக்கா வீட்டுக்காரரும் சிறுமியை கர்ப்பம் ஆக்கிய சம்பவம் மடத்துக்குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 13 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிகிறது.
- சிறுமியின் பெற்றோா் கடந்த 2022ல் உடுமலை மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
திருப்பூர் :
திருப்பூா் மாவட்டம், உடுமலை அமராவதி நகரைச் சோ்ந்தவா் கோகுலகண்ணன் (வயது 21). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிகிறது. இதனால் அந்த சிறுமி கா்ப்பமடைந்துள்ளாா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் கடந்த 2022ல் உடுமலை மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
இந்தப் புகாரின் பேரில் போக்சோ பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் கோகுலகண்ணனை கைது செய்தனா். இந்த வழக்கானது திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி பாலு தீா்ப்பு வழங்கினாா். இதில், கோகுலகண்ணனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தாா். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் பரிந்துரை செய்தாா். இந்த சிறுமிக்கு தற்போது குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.
- சிறுமி 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்தார்.
- சாத்தப்பன் சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறினார்.
கோவை
கோவை சாந்திமேடு பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவருக்கு தாய், தந்தை இல்லை. இதனால் இவர் தனது தாத்தா, பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த சாத்தப்பன் (வயது 31) என்பவர் மிஸ்டு கால் மூலமாக நண்பராக பழகினார். சம்பவத்தன்று சிறுமி வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது அங்கு சென்ற சாத்தப்பன் சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறினார். பின்னர் அவரை கோவைக்கு அழைத்து வந்து திருமணம் செய்து ஒரு ஆண்டுகளாக கணவன் -மனைவியாக வாழ்ந்து வந்தனர். இதன் காரணமாக சிறுமி கர்ப்பமானார். இதனை அறிந்த ஒருவர் துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.