search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "president kovind governors conference"

    பின் தங்கிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு செயலாற்ற வேண்டும் என கவர்னர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆலோசனை வழங்கினார். #PresidentKovind #GovernorsConference
    புதுடெல்லி:

    மாநில கவர்னர்கள் பங்கேற்கும் 49-வது மாநாடு இன்று ஜனாதிபதி மாளிகையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  முதல் நாளான இன்று நாட்டின் முக்கிய விவகாரங்கள் குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொடக்க உரை ஆற்றினார். அவர் பேசியதாவது:-

    மாநில அரசுக்கு வழிகாட்டியாகவும், மத்திய அரசுடன் முக்கியமான பாலமாகவும் கவர்னர்கள் விளங்குகிறார்கள். சிந்தனைகள் மற்றும் மதிப்புகளின் ஊற்றுக்கண்களாக கவர்னரையும், கவர்னர் அலுவலகத்தையும் பொதுமக்கள் பார்க்கிறார்கள்.

    நாட்டில் உள்ள சுமார் 100 மில்லியன் மக்கள் தாழ்த்தப்பட்ட பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்கள். நமது வளர்ச்சிப் பயணத்தில் எதிர்பார்த்த அளவிற்கு பயன் அடையாத சக குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு, மாநில ஆளுநர் என்ற முறையில் உதவி  செய்ய வேண்டும். 

    உலகிலேயே அதிக இளைஞர்கள் கொண்ட நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. அவர்களின் பாதுகாவலர்கள் நீங்கள். அவர்கள் சரியான ஒழுக்க நெறிகளை பின்பற்றுவதை நீங்கள் ஊக்கம் அளிக்கலாம். மேலும், நவீன கல்வியை தொடரவும் இந்திய கலாச்சாரத்தை தொடர்ந்து பின்பற்றவும் ஊக்குவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #PresidentKovind #GovernorsConference
    ×