என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » president ramnath govind
நீங்கள் தேடியது "President Ramnath govind"
வங்காளதேசமும் இந்தியாவும் அடுத்த மாதம், மைத்ரி திவாஸ் (நட்பு தினம்) மற்றும் வங்காளதேசத்தின் வெற்றி நாள் என இரண்டு முக்கிய நிகழ்வுகளை நடத்த உள்ளன.
புதுடெல்லி:
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், வங்காளதேச பிரதமர் அப்துல் ஹமீதின் அழைப்பின் பேரில் டிசம்பர் மாதம் 16 மற்றும் 17-ம் தேதிகளில் வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
கிழக்கு பாகிஸ்தானில் 1971-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி நள்ளிரவில் பாகிஸ்தான் துருப்புக்களால் நடத்தப்பட்ட திடீர் ஒடுக்குமுறைக்குப் பிறகு , வங்காளதேசத்தின் விடுதலைப் போர் தொடங்கி டிசம்பர் 16-ம் தேதி முடிவுக்கு வந்தது. இந்த நாளை வங்காளதேசம் வெற்றி தினமாக கொண்டாடி வருகிறது. இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முதல் முறையாக வங்காளதேசத்திற்கு பயணம் செய்கிறார்.
வங்காளதேசமும் இந்தியாவும் அடுத்த மாதம், இரண்டு மெகா நிகழ்வுகளை - மைத்ரி திவாஸ் (நட்பு தினம்) மற்றும் வங்காளதேசத்தின் வெற்றி நாள் - முறையே டிசம்பர் 6 மற்றும் டிசம்பர் 16 ஆகிய தேதிகளில் நடத்துகின்றன.

வங்காளதேசமும் இந்தியாவும் இணைந்து டிசம்பர் 6 ஆம் தேதி மைத்ரி திவாஸைக் குறிக்கும் வகையில் லோகோ வடிவமைப்பு போட்டியை நடத்துகின்றன. இதைத்தவிர, பல்வேறு முக்கிய நிகழ்வுகளிலும் ஜனாதிபதி பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் இன்று பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். #CJI #JusticeRanjanGogoi #46thChiefJusticeOfIndia
புதுடெல்லி:
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியானது பணி மூப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. பொறுப்பில் உள்ள தலைமை நீதிபதி, ஓய்வு பெறுவதற்கு முன்பாக, அடுத்த தலைமை நீதிபதி யார்? என்பதை அறிவித்து பரிந்துரை செய்வது நடைமுறையில் உள்ளது.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா நேற்றுடன் ஓய்வு பெற்ற நிலையில், புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு விழா ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்றது. அப்போது, உச்ச நீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்து, வாழ்த்து தெரிவித்தார். விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.
வடகிழக்கு மாநிலங்களில் இருந்து நியமிக்கப்பட்டுள்ள முதல் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஆவார். இவர் அடுத்த ஆண்டு நவம்பர் 17-ம் தேதி வரை தலைமை நீதிபதியாக பணியாற்றுவார்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சன் கோகாய் கடந்த 1978-ஆம் ஆண்டு பார் கவுன்சிலில் பதிவு செய்து கொண்டு கவுகாத்தி உயர்நீதிமன்றத்தில் பயிற்சி பெற்றார். பின்னர் நிரந்தர நீதிபதியாக கடந்த 2001-ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் கடந்த 2010-ஆம் ஆண்டு பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். அங்கு தலைமை நீதிபதியாக கடந்த 2011-ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். பின்னர் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக கடந்த 2012-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி பதவி உயர்வு பெற்றது குறிப்பிடத்தக்கது. #CJI #JusticeRanjanGogoi #46thChiefJusticeOfIndia
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியானது பணி மூப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. பொறுப்பில் உள்ள தலைமை நீதிபதி, ஓய்வு பெறுவதற்கு முன்பாக, அடுத்த தலைமை நீதிபதி யார்? என்பதை அறிவித்து பரிந்துரை செய்வது நடைமுறையில் உள்ளது.
அதன்படி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தனது பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், தனக்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த நீதிபதியான ரஞ்சன் கோகாய் பெயரை புதிய தலைமை நீதிபதி பொறுப்புக்கு தீபக் மிஸ்ரா பரிந்துரை செய்திருந்தார். இந்த பரிந்துரையை ஏற்று ரஞ்சன் கோகாயை புதிய தலைமை நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார்.
வடகிழக்கு மாநிலங்களில் இருந்து நியமிக்கப்பட்டுள்ள முதல் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஆவார். இவர் அடுத்த ஆண்டு நவம்பர் 17-ம் தேதி வரை தலைமை நீதிபதியாக பணியாற்றுவார்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சன் கோகாய் கடந்த 1978-ஆம் ஆண்டு பார் கவுன்சிலில் பதிவு செய்து கொண்டு கவுகாத்தி உயர்நீதிமன்றத்தில் பயிற்சி பெற்றார். பின்னர் நிரந்தர நீதிபதியாக கடந்த 2001-ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் கடந்த 2010-ஆம் ஆண்டு பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். அங்கு தலைமை நீதிபதியாக கடந்த 2011-ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். பின்னர் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக கடந்த 2012-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி பதவி உயர்வு பெற்றது குறிப்பிடத்தக்கது. #CJI #JusticeRanjanGogoi #46thChiefJusticeOfIndia
×

X