search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "president win myint"

    மியான்மர் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், அந்நாட்டு அதிபர் வின் மிண்டை சந்தித்தார். #SushmaSwaraj #WinMyint
    நே பை தா:

    இந்தியாவின் மிக முக்கிய அண்டை நாடாக விளங்கும் மியான்மர், இந்தியாவுடனான எல்லையை 1640 கி.மீட்டர் தூரத்துக்கு பகிர்ந்து உள்ளது. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாகலாந்து, மணிப்பூர் ஆகியவை மியான்மர் நாட்டு எல்லையை ஒட்டி அமைந்துள்ளதால், மியான்மருடனான உறவு முக்கியமான ஒன்றாகும்.

    இதற்கிடையே, இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் 2 நாள் பயணமாக மியான்மர் நாட்டுக்கு நேற்று சென்றார். மியான்மர் தலைநகர் நே பை தா சென்றடைந்த சுஷ்மா சுவராஜுக்கு, மியான்மருக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி, மியான்மர் வெளியுறவு கொள்கை மந்திரி உ மியிண்ட் து உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

    இந்நிலையில், மியான்மர் அதிபர் வின் மிண்டை வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் சந்தித்தார்.

    இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், மியான்மர் அதிபர் வின் மிண்டை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, இருதரப்பு உறவுகளை மேலும் வலுவாக்குவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

    மேலும், இந்த சந்திப்பின்போது, வன்முறையால் கடுமையாக பாதிக்கப்பட்ட ரக்கைன் மாகாணத்தில் தற்போது நிலவும் சூழல் குறித்தும் ஆலோசனை நடத்தவுள்ளார் என தெரிவித்துள்ளனர்.

    கடந்த டிசம்பரில் ரக்கைன் மாகாணத்திற்கு சுமார் 25 மில்லியன் டாலர் உதவித்தொகையாக வழங்குவதாக இந்தியா அறிவித்தது குறிப்பிடத்தக்கது. #SushmaSwaraj #WinMyint
    ×