search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "presidential"

    ஜிம்பாப்வேக்கு புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் மனங்கக்வா மற்றும் நெல்சன் சமிசா ஆகியோர் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. #Zimbabwe #PresidentialElection
    ஹராரே:

    ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயில் 30 ஆண்டுகளாக அதிபராக இருந்த ராபர்ட் முகாபே கடந்த நவம்பர் மாதம் ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அவரது ஆதரவாளரான எம்மர்சன் மனங்கக்வா (வயது 75) அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்த நிலையில் ஜிம்பாப்வேக்கு புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது. முகாபே ஆட்சிக்காலத்துக்கு பிறகு நடைபெறும் இந்த முதல் தேர்தலில் மனங்கக்வா மற்றும் நெல்சன் சமிசா (40) ஆகியோர் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. பிரபல வக்கீலான சமிசா, பாதிரியாராகவும் உள்ளார்.



    உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடந்தது. நேற்றைய வாக்குப்பதிவில் எந்த வேட்பாளரும் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெறாவிட்டால், செப்டம்பர் 8-ந் தேதி அடுத்த சுற்று வாக்குப்பதிவு நடைபெறும். எனினும் இந்த தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் மனங்கக்வா வெற்றி பெறுவார் என தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் கூறியுள்ளன.

    அதேநேரம் சமிசா வெற்றி பெற்றால் நாட்டின் மிக இளம் அதிபர் என்ற பெருமை அவருக்கு கிடைக்கும். முகாபே ஆட்சியால் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய ஜிம்பாப்வே, புதிய ஆட்சியில் முன்னேற்றம் காணும் என மக்களிடையே நம்பிக்கை உள்ளது. #Zimbabwe #PresidentialElection #tamilnews 
    ×