search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Presisent ramnath kovind"

    இந்த 21ம் நூற்றாண்டின் சவால்களை முன்கூட்டியே மகாத்மா காந்தி அறிந்திருந்தார் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் புகழாரம் சூட்டியுள்ளார். #RamNathKovind #MahatmaGandhi
    சூக்ரே:

    இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்,  லத்தின் அமெரிக்க நாடானா பொலிவியாவில் 3 நாள் சுற்றுப்பயணம்  மேற்கொண்டுள்ளார். இந்த சுற்றுப்பயணம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இரு நாடுகளுக்கிடையேயான அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகிய வளர்ச்சியினை அதிகரிக்க வலியுறுத்த உள்ளது. அங்கு பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

    இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்தி வாழ்ந்து, பணியாற்றிய காலத்திற்கும், இன்று இருக்கும் காலகட்டத்திற்கும் அதிக வேறுபாடுகள் உள்ளன. ஆனால் இந்த 21ம் நூற்றாண்டின் அனைத்து சவால்களையும் , அன்றே மகாத்மா காந்தி கணித்திருந்தார்.  இந்த நூற்றாண்டின் உலகளாவிய பிரச்சனைகள் குறித்த காந்தியின் நிலைப்பாடு முக்கியத்துவம் வாய்ந்தது.



    அன்றைய காலக்கட்டத்தில் நிலைத்த தன்மை, சுற்றுச்சூழல், உணர்திறன் மற்றும் இயல்புக்கு இணங்க வாழ்ந்து கொண்டிருந்த அவரது வாழ்நாளில் கூட, நம் தற்போதைய காலத்தின் சவால்களை கணித்தார். ஐநாவினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையான வளர்ச்சி இலக்குகள் யாவும்  காந்திய தத்துவத்தின் அடிப்படையை கொண்டதாகும்.

    பொலிவியா பகுதியில் 2 இடங்களில் காந்தி சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இது இந்தியாவின் தேசத் தந்தையான காந்திஜியின் 150வது பிறந்த நாளை கொண்டாடும் மற்றும் மிகப்பெரிய மரியாதை செலுத்தும் விதம் ஆகும். காந்தி 20ம் நூற்றாண்டின் மக்கள் செல்வாக்கு நிறைந்த மனிதராவார். காந்தியின் அரசியல் திட்டங்கள், நாட்டின் மீதுள்ள பற்று போன்ற சில முக்கிய கோட்பாடுகள் இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரும் வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது கொள்கைகள் இன்றளவும் இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.#RamNathKovind #MahatmaGandhi
    ×