என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » prevention measure
நீங்கள் தேடியது "prevention measure"
அரூர் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட 18 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அரூர்:
அரூர் தேர்வு நிலைப் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட 18 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரூர் பேரூராட்சி வார்டு எண்.5 பெரியார் நகர் பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இப்பகுதியில் வீடு வீடாக சென்று டெங்கு கொசுப் புழுக்கள் அழிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.வடிகால்கள் சுத்தம் செய்யப்பட்டு, கொசுப் புகை மருந்து அடிக்கப்பட்டது. உபயோகமற்ற பழைய டயர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இப்பகுதி பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. டெங்கு லார்வா கொசுப் புழுக்கள் கண்டறியப்பட்ட பால் கொள்முதல் நிலையம், தனியார் மருத்துவமனை ஆகியவற்றிற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதில் பேரூராட்சி செயல் அலுவலர் நந்தகுமார், துப்புரவு ஆய்வாளர் சிவக்குமார், அரூர் வருவாய் கோட்ட அலுவலர் புண்ணியக்கோட்டி, துப்புரவு மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர், அலுவலகப் பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் களப்பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
×

X