search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "price raised"

    வினியோகஸ்தர்கள் கமிஷன் அதிகரிப்பால், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை 2 ரூபாய் உயர்ந்து இருக்கிறது. #LPG #Cylinder
    புதுடெல்லி:

    வீட்டு உபயோகத்துக்கு ஆண்டுக்கு, 14.2 கிலோ எடையுள்ள 12 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. இந்த சிலிண்டர்களை சந்தை விலையில் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, மானிய தொகை அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.

    இந்த நிலையில், வீட்டு உபயோகத்துக்கு மானிய விலையில் வழங்கப்படும் 14.2 கிலோ சிலிண்டருக்கான வினியோகஸ்தர் (ஏஜென்சி) கமிஷன் தொகையை 50 ரூபாய் 58 காசாகவும், 5 கிலோ சிலிண்டருக்கான கமிஷன் தொகையை 25 ரூபாய் 29 காசாகவும் பெட்ரோலிய அமைச்சகம் அதிகரித்து இருக்கிறது.

    இதைத்தொடர்ந்து, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலையை நேற்று 2 ரூபாய் உயர்த்தி இருக்கின்றன.

    இந்த விலை உயர்வை தொடர்ந்து சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை மானியம் நீங்கலாக ரூ.495.39 ஆக அதிகரித்து இருக்கிறது. இதேபோல் டெல்லியில் ரூ.505.34 ஆகவும், மும்பையில் ரூ505.05 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.510.70 ஆகவும் உயர்ந்து உள்ளது.

    உள்ளூர் வரிகள் மற்றும் போக்குவரத்து செலவை பொறுத்து இந்த விலையில் சிறிது மாற்றம் இருக்கும்.

    இதுபற்றிய அறிவிப்பை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டு உள்ளன.

    கடந்த 1-ந் தேதி ஏஜென்சி கமிஷன் தொகை உயர்த்தப்பட்டதால் 14.2 கிலோ எடையுள்ள கியாஸ் சிலிண்டரின் சந்தை விலை ரூ.60 அதிகரித்து ரூ.939 ஆனது. தற்போது இந்த விலை ரூ.942.50 ஆக உயர்ந்து இருக்கிறது. 
    ×