என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "priority basic facilities"
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சியில் கமிஷனராக இருந்த அசோகன் பதவி உயர்வு பெற்று சென்னைக்கு மாறுதலாகி சென்றார். இதனையடுத்து திருப்பூர் மாநகராட்சியின் புதிய கமிஷனராக சிவகுமார் நியமிக்கப்பட்டார். அவர் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து கமிஷனராக பொறுப்பேற்றுக் கொண்டார் பின்னர் அவர் கூறியதாவது:-
திருப்பூர் மாநகராட்சியில் தேவைகளை கண்டறிந்து, வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்து அதன் அடிப்படையில் பொதுமக்களின் தேவைக்கேற்ப அத்தியாவசிய அவசரத்தேவைக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
அடிப்படை வசதிகளான சாக்கடை வசதி, குடிநீர் வசதி, கல்வி வசதி, சுகாதாரம், கழிப்பிட வசதி போன்ற பல்வேறு அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து திருப்பூர் மாநகராட்சியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
புதிதாக பதவியேற்று கொண்ட கமிஷனருக்கு மாநகர பொறியாளர் ரவி, செயற்பொறியாளர் திருமுருகன், உதவி கமிஷனர்கள் நாராயணன், வாசுகுமார், செல்வநாயகம், முகமது சபியுல்லா, கண்ணன், வருவாய் ஆய்வாளர் தங்கவேல் ராஜன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.