search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "prison"

    • பிரேக் அப் ஆன அடுத்த நாளே டேவிட்டின் செல் போனுக்கு 1000 முறை போன் செய்துள்ளார்.
    • டேவிட்டின் வீட்டை உடைத்துக்கொண்டு உள்ளே அவர் வரும்வரை வம்படியாக பெட்ரூமில் வெயிட் செய்துள்ளார்.

    பிரிட்டனில் பிரேக் அப் ஆகியும் முன்னாள் காதலனை விடாமல் தொல்லை செய்துவந்த பெண்ணுக்கு சிறை தண்டனை-0 விதிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. நர்ஸ் வேலை பார்க்கும் சோபி கால்வில் [Sophie Colwill] என்ற 30 வயது பெண்ணை டேவிட் பாக்லீரோ [David Pagliero] என்ற 54 வயது பல் மருத்துவர் தனது மனைவி இறப்புக்கு பின்னர் காதலித்து வந்துள்ளார். ஆனால் சமீபத்தில் இருவருக்கும் இடையில் காதல் முறிவு ஏற்பட்டதால் சோபி மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார்.

     

    காதலனை இழக்க விரும்பாத சோபி, பிரேக் அப் ஆன அடுத்த நாளே டேவிட்டின் செல் போனுக்கு 1000 முறை போன் செய்துள்ளார். ஆனால் டேவிட் போனை எடுக்காமல் தவிர்த்துள்ளார். மேலும் டேவிட் எங்கெல்லாம் செல்கிறார் என்பதை கண்காணிக்க அவரது காரில் டிராக்கிங் டிவிஸ் பொறுத்தியுள்ளார் சோபி. இது பத்தாது என்று டேவிட்டின் வீட்டை உடைத்துக்கொண்டு உள்ளே அவர் வரும்வரை வம்படியாக பெட்ரூமில் வெயிட் செய்துள்ளார். டேவிட் வந்ததும் அவரின் போனை பிடுங்கும் முயற்சியில் அவருடன் சண்டை போட்டுவிட்டு ஜன்னல் வழியே குதித்து தப்பியுள்ளார்.

     

    சோபியின் இந்த அடாவடித்தனமான தொல்லைகளை தாங்க முடியாமல் மன உளைச்சலில் டேவிட் சோபி தன்னை தொடர்ந்து பின் தொடர்வதால் தான் பாதுகாப்பின்றி உணர்வதாகவும் தனக்கு அச்சுறுத்தலாக இருப்பதாவதும் டேவிட் அளித்த புகாரின் பேரில் போலீசார் சோபியை கைது செய்தனர். வீட்டை உடைத்து உள்ளே சென்றது உள்ளிட்ட குற்றங்கள் நிரூபணமானதால் சோபிக்கு 1 வருட சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அக மொத்தம் சிப்பு நடித்த வல்லவன் படத்தில் ரீமா சென் நடித்திருந்த கீதா கதாபாத்திரத்தை ரியல் லைபில் வாழ்ந்திருக்கிறார் சோபி.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சந்திரசேகரன் ஆஜர் படுத்தப்பட்டார்.
    • விருதுநகர் மத்திய சிறைச்சாலையில் அவர் அடைக்கப்பட்டார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூரில் பெட்டிக்கடைக்காரரிடம் இருந்து ரூ 1500 லஞ்சம் வாங்கி கைதான உணவு பாதுகாப்பு அதிகாரி சந்திரசேகரனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதையடுத்து அவர் விருதுநகர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிந்தன் நகர் காலனியில் பெட்டிக்கடை நடத்தி வந்தவர் குருசாமி. இவரிடம் உணவு பாதுகாப்பு சான்று பெற்று தருவதாக கூறி ரூ.1500 லஞ்சம் பெற்றதாக நேற்று உத்திர உணவு பாதுகாப்பு அதிகாரி சந்திரசேகரன் விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்யப்பட்டார்.

    பின்னர் பல மணி நேரம் விசாரணைக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சந்திரசேகரன் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பிரீத்தா உத்தரவிட்டார்.

    இதனை அடுத்து விருதுநகர் மத்திய சிறைச்சாலையில் அவர் அடைக்கப்பட்டார்.

    • அமெரிக்காவை உளவு பார்த்தது, ராணுவ ரகசியங்களை வெளியிட்டது உள்ளிட்ட குற்றங்களை தான் ஒப்புக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
    • அசானஞ்சே தனது தாய்நாடான ஆஸ்திரேலியாவிற்கு சுதந்திர மனிதனாக திரும்புவார் என்று தெரிகிறது

    பிரபல ஆஸ்திரேலிய பத்திரிகையாளராரும் விக்கிலீக்ஸ் இணைய நிறுவனருமான ஜூலியன் அசாஞ்சே கடந்த 2010 ஆம் ஆண்டு ஈராக் மற்றும் ஆப்கனிஸ்தான் போரில் ஈடுபட்ட அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை வெளியிட்டு உண்மைகளை அம்பலப்படுத்தியதன் மூலம் உலக அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியவர் ஆவார்.

    இதையடுத்து அவரை தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்க அரசு அறிவித்தது. இதற்கிடையில் பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றில் சிக்கிய அசாஞ்சே கைது செய்யயப்படுவதில் இருந்து தப்பிக்க லண்டனில் உள்ள ஈகுவேடார் அரசின் தூதரகத்தில் தஞ்சமடைந்தார்.

    அசாஞ்சேவுக்கு அடைக்கலம் அளித்து வந்த ஈகுவேடார் அரசு கடந்த 2019 ஆண்டு அதை வாபஸ் பெற்றதை அடுத்து அதுவரை கைதில் இருந்து தப்பித்துவந்த அசாஞ்சேவை பிரிட்டிஷ் போலீசார் கைது செய்து லண்டன் சிறையில் அடைத்தனர். சிறையில் உள்ள அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்கா அரசு பிரிட்டனிடம் கேட்டு வந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு பிரிட்டன் அதற்கு ஒப்புதல் அளித்தது.

    ஆனால் இதை எதிர்த்து அசாஞ்சே தரப்பில் பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால் அமெரிக்காவுக்கு அனுப்பாடாமால் இதுநாள்வரை வரை லண்டன் சிறையிலேயே அசாஞ்சே அடைபட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்து வந்த பிரிட்டன் நீதிமன்றம், அசாஞ்சேவை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் பட்சத்தில் ராணுவ ரகசியங்களை வெளியிட்ட குற்றத்திற்காக அவருக்கு மரண தண்டனை வழங்கக்கூடாது, குறைந்த பட்ச சிறை தண்டனையே வழங்க வேண்டும் என்ற உத்தரவாதத்தை அமேரிக்காவிடம் கோரியது. அசாஞ்சேவுக்கு ஆதரவாக சர்வதேச சமூகமும் குரல் கொடுத்து வந்தது.

     

    இந்த விவகாரம் இவ்வாறாக புகைந்து வந்த நிலையில் தற்போது அசாஞ்சே , தன்னை விடுதலை செய்வதாக உத்தரவாதம் அளித்தால் அமெரிக்காவை உளவு பார்த்தது, ராணுவ ரகசியங்களை வெளியிட்டது உள்ளிட்ட குற்றங்களை தான் ஒப்புக்கொள்வதாக தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் ஏற்கப்பட்டதை அடுத்து நேற்று இரவு லண்டன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள அசாஞ்சே இன்று அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார்.

     

    நாளை அமெரிக்க பெடரல் நீதிமன்றத்தில் அவர் தனது குற்றங்களை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பாக்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து அவருக்கு அமெரிக்க நீதிமன்றம் குறைந்தபட்ச சிறை தண்டனை விதிக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் அசாஞ்சே ஏற்கனவே லண்டனில் சிறை தண்டனை அனுபவித்ததால், அமெரிக்க நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியானதும், ஜூலியன் அசாஞ்சே தனது தாய்நாடான ஆஸ்திரேலியாவிற்கு சுதந்திர மனிதனாக திரும்புவார் என்று எதிர்பாக்கப்படுகிறது.  

    • வீரபாபு சிறையில் தாக்கப்பட்ட சம்பவம் அறிந்ததும் அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து கைதிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் தாலுகா அலுவலக சாலையில் கிளைச் சிறைச்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு திண்டுக்கல் மற்றும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

    வடமதுரை திடீர் நகரைச் சேர்ந்த முருகன் மகன் வீரபாபு என்ற குட்டி (வயது 35) என்பவர் பைக் திருட்டு வழக்கில் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். நேற்று இரவு இவருக்கும், மதுரையைச் சேர்ந்த மற்றொரு கைதிக்கும் எங்கே தூங்குவது என்ற பிரச்சினையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

    பின்னர் இது கைகலப்பாக மாறி இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். வீர பாபுவை மற்றொரு தரப்பினர் கடுமையாக தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்தார். இதனையடுத்து சிறைக்காவலர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

    அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனிடையே வீரபாபு சிறையில் தாக்கப்பட்ட சம்பவம் அறிந்ததும் அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இது குறித்து நகர் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து கைதிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சிறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்து சிறையில் இருந்து வந்தார்.
    • வைத்தியநாதன் மற்றும் சுரேஷ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப் பட்டது.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த தொரப்பாடியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் மணிகண்டன்(28), திருமணமானவர்.இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட புகாரின்பேரில் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்து சிறையில் இருந்து வந்தார்.

    சிறையில் இருந்து ஜாமீனில் வந்து மீண்டும் அதே சிறுமியை கடத்தி சென்றதாக புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த 6 மாதங்களாக தேடப்பட்டு வந்தார்.இந்த நிலையில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டத்தில் ஆய்வு செய்த டி.எஸ்.பி.சபியுல்லா உத்தரவின் பேரில் புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி, போலீஸ்கா ரர்கள் வைத்திய நாதன் மற்றும் சுரேஷ் ஆகி யோர் கொண்ட தனிப்படை அமைக்கப் பட்டது. தனிப்ப டை போலீசார் கன்னியா குமரி, நாகர் கோவில், திரு வண்ணா மலை ஆகிய இடங்களில் தேடி மணி கண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.மணிகண்டனை கைது செய்த தனிப்படை போலீ சாரை பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா பாராட்டினார்.

    • செந்தில்குமாரை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் முகமத் ரபி தலைமையிலான நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
    • குல்ஜார்ஷா மற்றும் இப்ராஹிம் ஷா ஆகியோர் உடன் இருந்தனர்.

    கள்ளக்குறிச்சி :

    சிறையில் உள்ள சிறுபான்மையினரை விடுவிக்க அ.தி.மு.க. சார்பில் சட்டமன்றத்தில் பேசிய கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., செந்தில்குமாரை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் முகமத் ரபி தலைமையிலான நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது மாவட்ட துணைத் தலைவர் ஷபி, கல்வியாளர் அணி மாநில தலைவர் மாலிக் பாஷா, மாவட்ட பொருளாளர் தாஹிர் அலி, தொகுதி தலைவர் சல்மான், செயற்குழு உறுப்பினர் அசாருதீன், நகர தலைவர் சலிம் பாஷா, நகர பொருளாளர் அப்துல் ரஹீம், ஊடக அணி பொறுப்பாளர் குல்ஜார்ஷா மற்றும் இப்ராஹிம் ஷா ஆகியோர் உடன் இருந்தனர்.

    • மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகளை நல்வழிப்படுத்த அமைதி கல்வி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    • பயிற்சி வகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டு நடக்கிறது.

    மதுரை

    சிறைவாசிகளை நல்வ–ழிப்படுத்தும் வகையில் பல் வேறு விதமான சீர்தி ருத்த பணிகளை சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஷ் பூஜாரி மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக சிறை வாசிகளின் மனதை ஆற்றுப் படுத்தும் விதமாகவும், அவர்களை அமைதிப்ப டுத்தி நல்வழிப்படுத்தும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி உலக அமைதி பேச்சாளர் பிரேம் ராவத் குழுவினர் மூலமாக தமிழ கம் முழுவதும் உள்ள அனைத்து மத்திய சிறைக ளிலும் அமைதி கல்வி திட்டம் என்ற பெயரில் பயிற்சி வகுப்பு அறிமுகப்ப டுத்தப்பட்டு நடக்கிறது.

    இதில் அமைதி, மதிப்பை உணர்தல், உள் வலிமை, தன்னை உணர்தல், தெளிவு, புரிந்து கொள்ளுதல், தன்மா னம், தேர்ந்தெடுத்தல், நம் பிக்கை, திருப்தி ஆகிய தலைப்பின் கீழ் தினந்தோ றும் 45 நிமிட காணொளி சிறப்பு பயிற்சி வகுப்புகள் கடந்த 3-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

    இறுதி நாளான நேற்று இப்பயிற்சியில் கலந்து கொண்ட சிறைவாசிகளுக்கு பிரேம் ராவத்தின் இளைஞர் அமைதி அமைப்பின் சார் பாக சான்றிதழ்களை மதுரை சரக சிறைத்துறை துணைத் தலைவர் பழனி மற்றும் மத்திய சிறை கண்கா ணிப்பாளர் பரசுராமன் சிறை அலுவலர் மற்றும் நல அலுவலர்கள் கலந்து கொண்டு மதுரை மத்திய சிறையில் உள்ள ஆண், பெண் சிறைவாசிகள் சுமார் 200 பேருக்கு சான்றி–தழ்களை வழங்கினர்.

    • வாலிபருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது
    • பாலியல் தொந்தரவு வழக்கில்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே பெண்ணுக்கு பாலி யல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூர் மகளிர் நீதிம ன்றம் தீர்ப்பளித்தது.

    உடையார்பாளையம் அருகேயுள்ள பரணம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் இளையராஜா(வயது25). கடந்த 2021 ஆம் ஆண்டு இவரை, பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு வழக்கி ல் ஜெயங்கொண்டம் அனை த்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்ற த்தில் நடைபெற்று வந்தது. இதனை விசாரித்த நீதிபதி செல்வம், குற்றவாளி இளையராஜாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்ட னையும், ரூ.5,000 அபராத மும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து குற்றவாளி இளையராஜா திருச்சி மத்திய சிறையில் அடைக்க ப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரை ஞர் ம.ராஜா ஆஜராகினார்.

    • 2 ஆண்டுகளுக்கு முன்பு 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்தார்.
    • இந்த வழக்கில் வாலிபருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

    குள்ளனம்பட்டி:

    வத்தலக்குண்டு அருகே உள்ள கட்டகாமன்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 35).இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

    இது குறித்து வத்தலகுண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர்.மேலும் இவர் மீது திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை நீதிபதி சரண் விசாரித்தார்.அரசு தரப்பில் வக்கீல் ஜோதி ஆஜராகி வாதாடினார்.

    இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதைத் தொடர்ந்து நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார்.அதில் குற்றம் சாட்டப்பட்ட கண்ணனுக்கு போச்சோ சட்டத்தின் கீழ் (பலாத்காரம்) 20 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும்,இந்திய தண்டனைச் சட்டம் 363ன் கீழ் (கடத்தல்) 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.

    • சேலத்தில் இருந்து ஓமலூர் வழியாக தனியார் பேருந்துகள் பண்ணப்பட்டி, பூசாரிப்பட்டி, அக்கரகாரம் தீவட்டிப்பட்டி, ஜோடுகுழி, உள்ளிட்ட பஸ் நிறுத்தங்கள் உள்ளன.
    • இந்த நிலையில் அனைத்து பேருந்துகளும் இன்று செல்ல அரசு அனுமதி வழங்கியுள்ளது. அரசு அனுமதி மீறி சில பேருந்துகள் நிறுத்தங்களில் நிறுத்தாமல் செல்கின்றனர்.

    சேலம் மாவட்டத்தில் இருந்து தர்மபுரி மாவட்டத்திற்கு 100-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளும் அரசு பேருந்துகளும் இயங்கி வருகின்றனர். சேலத்தில் இருந்து ஓமலூர் வழியாக தனியார் பேருந்துகள் பண்ணப்பட்டி, பூசாரிப்பட்டி, அக்கரகாரம் தீவட்டிப்பட்டி, ஜோடுகுழி, உள்ளிட்ட பஸ் நிறுத்தங்கள் உள்ளன.

    இந்த நிலையில் அனைத்து பேருந்துகளும் இன்று செல்ல அரசு அனுமதி வழங்கியுள்ளது. அரசு அனுமதி மீறி சில பேருந்துகள் நிறுத்தங்களில் நிறுத்தாமல் செல்கின்றனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் பூசாரிபட்டி பஸ் நிறுத்தத்தில் 3 தனியார் பேருந்துகளை பொதுமக்கள் பா.ம.க ஒன்றிய செயலாளர் பி.எஸ்கே. செல்வம் தலைமையில் சிறை பிடித்தனர்.

    • யசோதாதேவி (வயது 58). இவர் கடந்த 2016-ம் ஆண்டு அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.
    • அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் யசோதாதேவி அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்துவிட்டு தப்பி சென்று விட்டார்.

    சேலம்:

    சேலம் கன்னங்குறிச்சி பிரகாசம் நகரை சேர்ந்தவர் யசோதாதேவி (வயது 58). இவர் கடந்த 2016-ம் ஆண்டு அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் யசோதாதேவி அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்துவிட்டு தப்பி சென்று விட்டார்.

    இதுதொடர்பாக கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து கிச்சிப்பாளையம் சன்னியாசி குண்டு மெயின் ரோட்டை சேர்ந்த சந்தோசை (30) கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு 4-வது கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் பெண்ணிடம் நகை பறித்த குற்றத்திற்காக சந்தோசுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1, 000 அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட்டு யுவராஜ் தீர்ப்பு அளித்தார்.

    • கொலை முயற்சி வழக்கில் தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
    • கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தாய்வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அணைக்கரைப்பட்டியை சேர்ந்தவர் கனகராஜ் (38). பெயிண்டரான இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், மகளும் உள்ளனர். 2012-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து முத்துலட்சுமி தனது மகளுடன் தாய் வீட்டிற்கு வந்து விட்டாள். 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது சகோதரி வீட்டில் இருந்த முத்துலட்சுமியை தாக்கி கனகராஜ் பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

    இதில் அவரது மகள் தீக்காயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக முத்துலட்சுமி அம்மாபட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கனகராஜை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை முடிந்த பின் மாஜிஸ்திரேட் பகவதியம்மாள் தீர்ப்பளித்தார். அதில் கனகராஜுற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

    ×