search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Private hospital doctors"

    தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பெரம்பலூர்:

    தேசிய மருத்துவ ஆணையத்தை அமைக்க மத்திய அரசு முயற்சி செய்து வருவதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ஏற்கனவே இந்திய மருத்துவ சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

    அதன்படி, நேற்று தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தனியார் மருத்துவமனைகள் முன்பு தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்ததை காண முடிந்தது. தனியார் மருத்துவமனைகளில் பிரசவம், உள்நோயாளிகள் சிகிச்சை, அவசர சிகிச்சைகள் தவிர மற்ற புறநோயாளிகள் சிகிச்சை, அவசரமில்லா அறுவை சிகிச்சை பணிகளில் டாக்டர்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஈடுபடவில்லை.

    பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சில கதவுகள் திறக்கப் படாமல் அடைக்கப்பட் டிருந்தது. மாலை 6 மணிக்கு பிறகு டாக்டர்கள் வழக்கம் போல் தங்களது பணிகளில் ஈடுபட்டனர். தனியார் மருத்துவமனைகளில் நேற்று காலை முதல் மாலை வரை புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படாததால் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    ×