என் மலர்
நீங்கள் தேடியது "Prize"
- 2021-22 நிதியாண்டில் திருப்பூர் மாவட்டத்தில் அதிகளவில் உரம் விற்பனை செய்த மூன்று கூட்டுறவு சங்கங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசளித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
- 527 டன் அளவு உரம் விற்பனை செய்த, பள்ளபாளையம் கூட்டுறவு சங்கம் முதல் பரிசு பெற்றது.
திருப்பூர் :
தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் உர வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. அவ்வகையில், 2021-22 நிதியாண்டில் திருப்பூர் மாவட்டத்தில் அதிகளவில் உரம் விற்பனை செய்த மூன்று கூட்டுறவு சங்கங்கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றுக்கு பரிசளித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இதில், 527 டன் அளவு உரம் விற்பனை செய்த, பள்ளபாளையம் கூட்டுறவு சங்கம் முதல் பரிசு பெற்றது. 354 டன் விற்பனை செய்த ருத்திரபாளையம் கூட்டுறவு சங்கம் இரண்டாம் பரிசும், 343 டன் விற்பனை செய்த தளி கூட்டுறவு சங்கம் மூன்றாவது பரிசையும் பெற்றது.கலெக்டர் அலுவலகத்தில் இந்த மூன்று சங்கங்களுக்கும் பரிசு வழங்கி, பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மண்டல இணை பதிவாளர் சீனிவாசன், கரூர் மண்டல இணை பதிவாளர் கந்தராஜா ஆகியோர் இதனை வழங்கினர். சரக துணை பதிபதிவாளர் சண்முகவேல், உடுமலை நகர கூட்டுறவு வங்கி துணை பதிவாளர் கதிரவன் முன்னிலை வகித்தனர்.
- தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் உதவிப்பொது மேலாளர் மார்ட்டின் மற்றும் குழுவினர், நடுவர்களாக பங்கு பெற்றனர்.
- வெற்றி பெற்ற அணிகளுக்கு ரம்யா சத்தியநாதன் கல்விக்குழுமதலைவர் சத்தியநாதன் பரிசுகளை வழங்கினார்.
பூதலூர்:
தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பகுதியில் செயல்பட்டு வரும் ரம்யா சத்தியநாதன் சீனியர் செகண்டரி பள்ளியில் தென்னிந்திய அளவிலான சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இடையே டென்னிஸ் போட்டி நடைபெற்றது.
இப்போட்டிகளில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலு ங்கானா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ரம்யா சத்தியநாதன் கல்விக் குழுமத் தலைவர் பொறியாளர் சத்தியநாதன், ரம்யா சத்தியநாதன் கல்விக் குழுமச் செயலர் ஜெனட் ரம்யா ஆகியோர் தலைமை வகித்தனர்.
போட்டிகளை தஞ்சாவூர் தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் லோகநாதன் , தஞ்சாவூர் மாவட்ட டென்னிஸ் கழகத் தலைவர் டேவிட் அவர்களும் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். ரம்யா சத்தியநாதன் சீனியர் செகண்டரி பள்ளி டென்னிஸ் பயிற்சியாளர் சிலம்பரசன் அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்ற போட்டிகளை தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் உதவிப்பொது மேலாளர் மார்ட்டின் மற்றும் குழுவினர், நடுவர்களாக பங்கு பெற்றனர்.
பல போட்டிகளில் 17 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில்கோவை எஸ்எஸ்விஎம் பள்ளி முதல் இடத்தையும், கரூர் டிஎன்பிஎல் பள்ளி 2ம் இடத்தையும், 17 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில், சாரதா சில்ரன்ஸ அகாடமி ஷ்ரத்தா பள்ளிமுதல் இடத்தையும், சென்னை வேலம்மாள்வித்யாலய பள்ளி இரண்டாம் இடத்தையும்,
19 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் கரூர் வேலம்மாள் பள்ளி முதல் இடத்தையும், சென்னை பவன்ஸ்ரா ஜாஜி வித்யாஷ்ரம் 2ம் இடத்தையும், 19 வயதுக்குட்பட்டபெண்கள் பிரிவில் சூரப்பட்டு வேலம்மாள் வித்யாஷ்ரம்பள்ளி முதல் இடத்தையும், கோவை சச்சிதானந்தா ஜோதிநிகேதன் இன்டர் நேஷனல் பள்ளி 2ம் இடத்தையும் பெற்று வெற்றிபெற்றனர்.
வெற்றி பெற்ற அணிகளுக்கு ரம்யா சத்தியநாதன் கல்விக்குழுமதலைவர் சத்தியநாதன் பரிசுகளை வழங்கினார். போட்டிகளைரம்யா சத்தியநாதன் சீனியர் செகண்டரி பள்ளி முதல்வர் ஜோன் பெர்னாண்டஸ் துணை முதல்வர் அம்பேத்கர் நடத்தினர்.
- புதுவை லாஸ்பேட்டை உள்விளையாட்டரங்கில் லீ புதுவை ஹாக்கி அமைப்பு சார்பில் தென்னிந்திய அளவிலான 5 பேர் ஹாக்கி சாம்பியன்கோப்பை போட்டி கடந்த 9-ந் தேதி தொடங்கியது.
- காலிறுதிக்கு 8 அணிகள் தகுதி பெற்றன.
புதுச்சேரி:
புதுவை லாஸ்பேட்டை உள்விளையாட்டரங்கில் லீ புதுவை ஹாக்கி அமைப்பு சார்பில் தென்னிந்திய அளவிலான 5 பேர் ஹாக்கி சாம்பியன்கோப்பை போட்டி கடந்த 9-ந் தேதி தொடங்கியது.
காலிறுதிக்கு 8 அணிகள் தகுதி பெற்றன. இறுதிபோட்டிகளை வேளாண் அமைச்சரும், ஒலிம்பிக் சங்க தலைவருமான தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். சென்னை இந்தியன் வங்கி முதல் பரிசும், சென்னை ஜி.எஸ்.டி. சுங்கத்துறை அணி 2-ம் பரிசும், பெங்களூரு மெக்பாய்ஸ் அணி 3-ம் பரிசும், சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி 4-ம் பரிசும் வென்றன.
பரிசளிப்பு விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், அசோக்பாபு எம்.எல்.ஏ., தமிழ்நாடு பா.ஜனதா மாநில செயலாளர் சூர்யா ஆகியோர் கலந்துகொண்டு பரிசுகோப்பை, பதக்கம், ரொக்கப்பரிசுகளை வழங்கினர்.
முதலிடம் பெற்ற அணிக்கு ரூ.50 ஆயிரம், 2-ம் இடம் பெற்ற அணிக்கு ரூ.30 ஆயிரம், 3-ம் இடம் பெற்ற அணிக்கு ரூ.20 ஆயிரம், 4-ம் இடம் பெற்ற அணிக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை புதுவை ஹாக்கி சங்க சேர்மன் லட்சுமிநாராயணன் தலைமையில் கவுரவ தலைவர் செல்வம், நிர்வாகிகள், சீனியர் வீரர்கள் செய்திருந்தனர்.
- சினை பரிசோதனை, ஆண்மை நீக்கம், குடற்புழு நீக்கம் உள்ளிட்டவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
- முடிவில் சிறந்த கிடாரி வளர்த்த விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
கும்பகோணம்:
திருப்பனந்தாள் ஒன்றியம், கன்னாரக்குடி ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு ஒன்றிய குழு தலைவர் தேவி ரவிச்சந்திரன், துணைத்தலைவர் அண்ணாதுரை, ஒன்றிய செயலாளர்கள் உதயசந்திரன், மிசா மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை கொறடா கோவி.செழியன், ராமலிங்கம் எம்.பி. குத்து விளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தனர். முகாமில் கால்நடைகளுக்கு பெரியம்மை நோய்க்கான தடுப்பூசி, சினை ஊசி, சினை பரிசோதனை, ஆண்மை நீக்கம், குடற்புழு நீக்கம் உள்ளிட்டவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு, கால்நடைகளுக்கு பரிசோதனை செய்தனர்.
முடிவில் சிறந்த கிடாரி வளர்த்த விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. முகாமில் விவசாயிகள், கிராமமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- தஞ்சை கூட்டுறவு காலனியில் கோலப்போட்டி நடத்தப்பட்டது.
- சிறந்த கோலங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாநகராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் இல்லா தஞ்சாவூர் மாநகராட்சி என்ற தலைப்பின் கீழ் வார்டு தோறும் கோலப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று 45-வது வார்டுக்கு உட்பட்ட கூட்டுறவு காலனி, உமா நகர், தஞ்சை கூட்டுறவு காலனியில் கோலப்போட்டி நடத்தப்பட்டது.
இதில் பெண்கள் தங்களது வீட்டு வாசலில் கோலங்கல் இட்டனர்.
இதனை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், மாநகர் நல அலுவலர் சுபாஷ்காந்தி ஆகியோர் வீடு வீடாக சென்று கோலங்களை பார்வையிட்டு மதிப்பீடு செய்தனர்.
இதையடுத்து சிறந்த கோலங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசளிப்பு வழங்கும் விழா கூட்டுறவு காலனி கற்பக விநாயகர் மண்டபத்தில் நடைபெற்றது.
வெற்றி பெற்றவர்களுக்கு மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் பரிசுகள் வழங்கினார்.
மேலும் கோலப் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
- கிராமிய கலைப்போட்டியில் சிவகாசி பி.எஸ்.ஆர். கல்லூரி மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
- 20 கல்லூரிகளில் இருந்து சுமார் 400 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
சிவகாசி
சிவகாசி மணி நகரில் உள்ள சிதம்பர ஆறுமுகசாமி திருமண மண்டபத்தில் பாரதி இலக்கிய சங்கம், பசுமை தாயகம், மக்கள் தொலைக்காட்சி, மதி கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை இணைந்து கிராமிய திருவிழாவை 4 நாட்கள் நடத்தியது. இதையொட்டி நடந்த போட்டிகளில் 20 கல்லூரிகளில் இருந்து சுமார் 400 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் சிவகாசி பி.எஸ்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகள் 15 பேர் பங்கேற்றனர்.அதில் 8 பேர் பரிசு பெற்றனர். இதில் குறும்படம் முதல் பரிதை வென்றது. இந்த குறும்படம் ''மனிதமும் மண்ணும்'' என்ற தலைப்பில் கோவில் அர்ச்சகருக்கு ரூ.500 கொடுத்து வழிபாடு செய்யும் நாம் குப்பை பொறுக்கும் ஏழைகளுக்கு ரூ.5 கொடுக்க தயங்குவது ஏன்? என்ற கருத்து இடம் பெற்றிருந்தது.
பரிசு பெற்ற மாணவர்களை பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி, குழுமத்தின் இயக்குநர் விக்னேசுவரி அருண்குமார், கல்லூரி இயக்குநர் கோபால்சாமி, முதல்வர் சுந்தரராஜ் மற்றும் பேராசி ரியர்கள் பாராட்டினர்.
- 300க்கும் மேற்பட்ட பொது மக்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர்.
- திருமாவளவன் விழா மேடையில் கேக் வெட்டி தனது 60வது பிறந்தநாளை கட்சி தொண்டர்களுடன் கொண்டாடினார்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் உள்ள மல்லை கலங்கரை விளக்கு மக்கள் சேவை மையமும், விடுதலை சிறுத்தை கட்சியினரும் இணைந்து 15வது முறையாக பொங்கல் விழா விளையாட்டு போட்டிகள் நடத்தினர்.
இதில் ஆண்கள், பெண்கள் என 300க்கும் மேற்பட்ட பொது மக்கள் பங்கேற்று, கோலம் போடுதல், கயிறு இழுத்தல், இசை நாற்காலி, சிலம்பம், கைப்பந்து, ஸ்லோ சைக்கிள், மியூசிக் சேர், கபடி, உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர்.
இதில் வெற்றி பெற்ற அனைவருக்கும் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் பரிசுகள் வழங்கினார்.
பின்னர் அதே மேடையில் கேக் வெட்டி, தனது 60வது பிறந்தநாளை கட்சி தொண்டர்களுடன் கொண்டாடினார்.
ம.தி.மு.க துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில தொண்டரணி செயலாளர் கிட்டு, திருக்கழுக்குன்றம் ஒன்றிய செயலாளர் இ.சி.ஆர் அன்பு, நகர செயலாளர் ஐயப்பன், சாலமன், சிவா, பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் கொடுத்து அருளாசி வழங்கி பேசினார்.
- பரிசு பொருள்களை ஆலவாய் அண்ணல் அறக்கட்டளையினர் வழங்கினர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் திருநாவுக்கரசர் வார வழிபாட்டு மன்றத்தால் மார்கழி 30 நாட்கள் நடந்த திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி வழிபாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சியும், பரிசளிப்பு விழாவும் முன்னாள் லயன்ஸ் கிளப் தலைவர் வைரம் ஜெயசந்திரன் தலைமையில் நடந்தது.
நாள்தோறும் தனுர்மாத வழிபாட்டில் பங்கேற்ற 100- க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்களாக ஓதுவாமூர்த்திகள் திருவாரூர் சந்திரசேகர், கொடுமுடி வசந்தகுமார் தேசிகர் ஆகியோர் பரிசுகள் கொடுத்து அருளாசி வழங்கி பேசினர்.
விழா மற்றும் வழிபாட்டில் வேதாரண்யம் மன்ற பொருப்பாளர்கள் சச்சிதானந்த தேசிகர், ஓதுவார் பரஞ்சோதி, ஓய்வு பெற்ற தொலைபேசித் துறை ராஜேந்திரன், போலீஸ் எஸ்ஐ வேதமூர்த்தி, சேகர், சத்யசாய் சேவா சமிதி சந்திரமௌலி உட்பட பிரமுகர்களும், பக்தர்களும் கலந்து கொண்டனர்.
பரிசு பொருள்களை ஆலவாய் அண்ணல் அறக்கட்டளையினர் வழங்கினர்.
- தேசிய அளவிலான நாய்கள் நலம் சார்ந்த விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் நாய்கள் கண்காட்சி திருச் செந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
- விழாவில் தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கருத்தரங்க மலரை வெளியிட்டு சிறந்த நாய்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
திருச்செந்தூர்:
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், நெல்லை கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் தூத்துக்குடி கால்நடை பராமரிப்புத்துறை இணைந்து நடத்திய தேசிய அளவிலான நாய்கள் நலம் சார்ந்த விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் நாய்கள் கண்காட்சி திருச் செந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். விழாவில் தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கருத்தரங்க மலரை வெளியிட்டு சிறந்த நாய்களுக்கு பரிசுகள் வழங்கி, நாட்டின நாய்களை பாதுகாப்பதற்கான தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை விளக்கி செல்ல பிராணிகள் வளர்ப்போர் அரசின் திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி பயனடையுமாறு பேசினார்.
மேலும் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் துணை வேந்தர் செல்வகுமார் சிறப்புரையாற்றினார். முன்னதாக தமிழ்நாடு மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் கால்நடை உற்பத்தி கல்வி மைய இயக்குநர் மீனாட்சி சுந்தரம் வரவேற்று பேசினார்.
விழாவில் நாய்களுக்கான இலவச பரிசோதனை, வெறி நோய்க்கான தடுப்பூசி, நாட்டின நாய்களுக்கு நுண் சில்லுபொருத்துதல் போன்றவை நடைபெற்றது. தொடர்ந்து நிகழ்ச்சியில் சிறந்த அயலின மற்றும் நாட்டின நாய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் 342 செல்ல பிராணிகள் கலந்து கொண்டது.
நிகழ்ச்சியில் ஒட்டப்பி டாரம் எம்.எல்.ஏ. சண்மு கையா, மாவட்ட பஞ்சாயத்து தலைவி பிரம்ம சக்தி, நகராட்சி துணை தலைவர் செங்குழி ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் செல்லப்பாண்டியன் நன்றி கூறினார்.
- ஆண்களுக்கு 7 கி.மீ. தூரம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
- வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர்.
பேராவூரணி:
தஞ்சை மாவட்டம், பேராவூரணியில் ழ பவுண்டேஷன் சார்பில் மினி மாரத்தான் போட்டி நேற்று நடைபெற்றது. போட்டியை பேராவூரணி அசோக்குமார் எம்.எல்.ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
போட்டி தாசில்தார் அலுவலகம் அருகில் உள்ள மைதானத்தில் இருந்து தொடங்கி கொன்றைக்காடு ரெயில்வே கேட் வரை 7 கி.மீ. தூரம் நடைபெற்றது. போட்டியானது ஆண்கள், பெண்கள் மற்றும் 10 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் என நான்கு பிரிவுகளில் நடைபெற்றது.
சிறுவர்களுக்கு 3 கி.மீ. தூரமும், பெண்களுக்கு 5 கி.மீ. தூரமும் மற்றும் ஆண்களுக்கு 7 கி.மீ. தூரமும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் சுமார் 2500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து, நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பட்டுக்கோட்டை அண்ணாதுரை எம்.எல்.ஏ. மற்றும் பேராவூரணி அசோக்குமார் எம்.எல்.ஏ., கல்வியாளர் ஜீவகன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர்.
தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குனர் காதல் கோட்டை அகத்தியன் உள்பட 11 பேருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது ழ பவுண்டேஷன் சார்பில் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ழ பவுண்டேஷன் நிறுவனர் கார்க்கி அசோக்குமார் மற்றும் நண்பர்கள் செய்திருந்தனர்.
இதில் பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் பிரபாகரன், பேராவூரணி பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், சேதுபாவாசத்திரம் ஒன்றிய தலைவர் முத்துமாணிக்கம், மணமேல்குடி ஒன்றிய தலைவர் பரணி கார்த்திகேயன், மருத்துவர்கள் நீலகண்டன், சந்திரசேகரன், சவுந்தரராஜன், ராமலிங்கம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- போட்டியில் மோகன்பிரவீன் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தார்.
- நான்காம் இடத்தை பிரகாஷ் அர்ஜுன் பிடித்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் துரோணாஸ் பேட்மிட்டன் கிளப் சார்பில் இன்னர் கிளப் பேட்மிண்டன் போட்டிகள் நடத்தப்பட்டது.
கிளப்பின் உரிமையாளர் ஆனந்த் தலைமை தாங்கினார்.
போட்டியை சந்திரசேகர் வழி நடத்தினார்.
இந்த போட்டியில் மோகன்பிரவீன் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தார்.
இரண்டாம் இடத்தை ஜெயராம் அசோகன், மூன்றாம் இடத்தை உதயன் தீபக் சூர்யா, நான்காம் இடத்தை பிரகாஷ் அர்ஜுன் ஆகியோர் பிடித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு பொறியாளர் சிவப்பிரகாசம் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
இப்போட்டியில் தஞ்சை பகுதியை சுற்றி உள்ள ஏராளமான பேட்மிட்டன் வீரர்கள் பங்கு பெற்றனர்.
- செவரக்கோட்டையில் மினி மாரத்தான் போட்டி நடந்தது.
- முதல் மூன்று இடங்களைப் பிடித்த வெற்றியாளர்களுக்கு பரிசு மற்றும் ஊக்கத்தொகை விழா குழு சார்பில் வழங்கப்பட்டது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள செல்வரசன் கோட்டை என்ற செவரக்கோட்டையில் 74-ம் ஆண்டு குடியரசு தின விழாவை முன்னிட்டு குரு இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் மது, புகையிலை தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முதலாம் ஆண்டு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் மாவட்ட த்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள், மாணவ மாணவிகள் ஆர்வடன் கலந்து கொண்டனர். இதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த வெற்றி யாளர் களுக்கு பரிசு மற்றும் ஊக்கத்தொகை விழா குழு சார்பில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கல்லல் காவல் ஆய்வாளர் பாஸ்கரன், உதவி ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் குரு இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.