என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » pro kabbadi
நீங்கள் தேடியது "Pro kabbadi"
புரோ கபடி லீக் போட்டியின் இன்று நடக்கவுள்ள ஆட்டத்தில் மும்பை அணியும் டெல்லி அணியும் மோதுகின்றனர். #ProKabbadi
புதுடெல்லி:
6-வது புரோ கபடி ‘லீக்’ போட்டி தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. தமிழ் தலைவாஸ் அணி நேற்றைய 16-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பாட்னா பைரேட்சை எதிர் கொண்டது.
இந்த ஆட்டம் 35-35 என்ற கணக்கில் ‘டை’யில் முடிந்தது. தமிழ் தலைவாஸ் அணி 5 வெற்றி, 9 தோல்வி, 2 டையுடன் 33 புள்ளிகள் பெற்று ‘பி’ பிரிவில் 4-வது இடத்தில் உள்ளது. நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் டெல்லி அணி 48-35 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூரை வீழ்த்தியது.
புரோ கபடி போட்டியின் 91-வது ‘லீக்’ ஆட்டம் டெல்லியில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் மும்பை அணி 12-வது வெற்றியை பெற்று ‘ஏ’ பிரிவில் முதல் இடத்தை பிடிக்கும் ஆர்வத்தில் உள்ளது. டெல்லி அணி 7-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.
இந்த சீசனில் இரு அணிகளும் ஏற்கனவே மோதிய ஆட்டத்தில் மும்பை அணி 39-23 என்ற கணக்கில் வெற்றி பெற்று இருந்தது. இதனால் அந்த அணி மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது. அதே நேரத்தில் மும்பைக்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் டெல்லி அணி உள்ளது. #ProKabbadi

புரோ கபடி ‘லீக்’ போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி உ.பி.யை யோதை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்நோக்கப்படுகிறது. #Prokabbadi #tamilthalaivas
சென்னை:
6-வது புரோ கபடி ‘லீக்‘ போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது.
ஜனவரி 5-ந்தேதிவரை நடைபெறும் இந்த புரோ கபடி ‘லீக்‘ போட்டியில் 12 அணிகள் பங்கேற்றன.
அவை 2 பிரிவாக பிரிக் கப்பட்டுள்ளது. ‘ஏ’ பிரிவில் புனே பில்தான், யு மும்பா, அரியானா ஸ்டீலர்ஸ், தபாங் டெல்லி, குஜராத் பார்ச்சுன் ஜெய்ட்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் தமிழ் தலைவாஸ், நடப்பு சாம்பியன் பாட்னா பைரேட்ஸ், உ.பி. யோதா, தெலுங்கு டைட்டன்ஸ், பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
‘லீக்‘ முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும், ஒவ்வொரு அணியும் 22 ‘லீக்‘ ஆட்டத்தில் விளையாடும்.
தொடக்க ஆட்டத்தில் அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ்- பர்தீப் நார்வால் தலைமையிலான பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. இதில் தமிழ் தலைவாஸ் வெற்றியுடன் கணக்கை தொடங்கியது. 42-20 என்ற புள்ளிக் கணக்கில் பாட்னாவை எளிதில் வீழ்த்தியது.
தமிழ் தலைவாஸ் அணியில் அஜய் தாகூர் 14 புள்ளிகளும், காஜித்சிங் 7 புள்ளிகளும், அமித் ஹோடா 7 புள்ளியும், ஜஸ்விர்சிங், மன்ஜித்சில்லார் தலா 3 புள்ளியும் எடுத்தனர். பாட்னா அணியில் பிர்தீப் நார்வால் 11 புள்ளியும், மன்ஜித் 8 புள்ளியும் பெற்றனர்.
புனே- மும்பை அணிகள் மோதிய 2-வது ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருந்தது. இந்த ஆட்டம் 2-2 என்ற கணக்கில் டையில் முடிந்தது.
தமிழ் தலைவாஸ் அணி 2-வது ஆட்டத்தில் உ.பி.யோதாவை இன்று எதிர்கொள்கிறது. இரவு 9 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது. தமிழ் தலைவாஸ் அணி உ.பி.யை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்நோக்கப்படுகிறது.
இந்த சீசனில் முற்றிலும் மாறுபட்ட அணியாக திகழும் தமிழ் தலைவாஸ் தொடக்க ஆட்டத்தில் அபாரமான திறமையை வெளிப்படுத்தியது. ரெய்டில் கேப்டன் அஜய் தாகூர், சர்ஜித்சிங் ஆகியோரை மடக்கி பிடிப்பதில் அமித் ஹூடா, மன்ஜித், தர்ஷன் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
உ.பி. யோதா அணியில் கேப்டன் ரிஷாங்க் தேவதிகா, சாகர் கிருஷ்ணா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளார்.
முன்னதாக இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் கிரிஷ் தலைமையிலான புனே- சுரேந்தர் நாடா தலைமையிலான அரியானா அணிகள் மோதுகின்றன. #Prokabbadi #tamilthalaivas

×

X